கனவு மெய்ப்பட வைத்த கவுர்!

 

 கனவு மெய்ப்பட வைத்த கவுர்!

 


1973 முதலே பெண்களுக்கான கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் நம் இந்திய கிரிக்கெட் அணி கவனம் பெறத்தக்க வகையில் விளையாடி வருகின்றது. இரண்டு முறை உலக கோப்பையை நெருங்கி நெருக்கடிகளில் சிக்கி கை தவறவிட்டிருக்கிறது இந்திய அணி.

  இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி உலக அளவில் பெரும் கவனம் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ். கிட்டத்தட்ட  இருபது ஆண்டுகள் விளையாடிய அவர் பல சாதனைகளை  செய்திருந்தாலும் உலக்கோப்பையை வெல்ல முடியவில்லை! உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது அவர் கனவு. கடந்த 2022ல் அதே நோக்குடன் தான் அவர் உலக கோப்பையில் களமிறங்கினார். ஆனாலும் லீக் சுற்றோடு திரும்ப வேண்டிய சூழல்.

 அப்போது இப்போதைய கேப்டன் கவுர், மற்றும் மந்தனா. இன்று நாம் தோற்றிருக்கலாம். ஆனால் அடுத்த உலக கோப்பை நமக்குத்தான். அதை வென்று உங்கள் கையில் கொடுப்போம் என்று சொல்லி ஆறுதல் தந்திருக்கின்றனர். அன்று  அவர்கள் சொன்னது இன்று நிஜமாகி இருக்கிறது.

 இந்த உலக கோப்பையில் முதல் மூன்று ஆட்டங்களில் வென்றாலும் அடுத்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோற்று பைனலுக்கு செல்லும் வாய்ப்பை குறைத்துக்கொண்டது இந்திய அணி. நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்மிருதி மந்தனாவும் பிரதிகா ராவலும் அதிரடி பேட்டிங்கில் அசத்த வென்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த்து.

 அரையிறுதியில்  ஏழுமுறை உலக்கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவை சந்தித்தது. இந்தியா. டாஸில் தோற்று ஆஸ்திரேலியா முதலில் களமிறங்கி 338 ரன்கள் குவித்தது. இவ்வளவு பெரிய ஸ்கோரை சேஸ் செய்வது கடினம். இந்தியா இம்முறையும் அவ்வளவுதான் என்று எல்லோரும் நம்பிக்கை இழந்தனர். அதை உறுதி செய்வது போல பிரதிகாவுக்கு மாற்றாக வந்த ஷபாலி விரைவில் ஆட்டமிழக்க மந்தனா கொஞ்சம் பிரகாசித்தார். அவரும் ஆட்டம் இழந்ததும் மொத்த இந்திய ரசிகர்களும் சோர்ந்து போயினர். அப்போது ஹர்மன் பிரித்தும், ஜெமிமாவும் இணைந்தனர். இவர்கள் இருவரின் ஆட்டம் ராகுல் டிராவிட்டும் லக்‌ஷமணும் ஆடியது போல இருந்தது. இருவரின் பார்ட்னர் ஷிப் இந்தியாவின் ஸ்கோரை மெல்ல உயர்த்த ரன்ரேட் அதிகரித்தது..ஆபத் பாந்தவனாக உள்ளே வந்த ரிச்சா கோஷ் அதிரடி காட்டி சிக்ஸர்கள் விளாச ஆஸ்திரேலியர்கள் உடலளவில் மட்டுமல்ல மனதளவில் சோர்ந்து போயினர்.

 ஜெமிமா இறுதி வரை களத்தில் இருந்து 127 ரன்களை விளாசி இந்தியர்களின் பைனல் கனவை நினைவாக்கினார். மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி. மற்றொரு ஆட்ட்த்தில் இங்கிலாந்தை வென்ற தென்னாப்பிரிக்கா முதல் முறையாக இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.

பைனல் போட்டி மழையால் சிறிது நேரம் தடைபட்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா இந்தியாவை முதலில் பேட் செய்யப் பணித்தது.



அரையிறுதியில் சோபிக்காத ஷபாலி வர்மா அசத்தலாக துணிச்சலாக ஆட  துணை நின்றார் ஸ்மிருதி மந்தனா. மந்தனா 45 ரன்களில் ஆட்டமிழக்க ஜெமிமா பலத்த எதிர்ப்பார்ப்புகளுடன் களம் புகுந்தார். அவரும் ஒரு தவறான ஷாட் அடித்து ஆட்டமிழக்க ஷபாலியும் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது ஹர்மன் பிரித்துடன் களம்புகுந்தார் தீப்தி ஷர்மா. இந்திய பெண்கள் அணியின் தலைச்சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை நிருபிக்கும் விதத்தில் மீண்டும் அணியை கட்டமைத்தார். இதனால் அணியின் ஸ்கோர் 200 ஐ கடந்தது. ரிச்சா கோஷ் வழக்கம் போல் பின்வரிசையில் அதிரடி காட்ட இந்திய பெண்கள் அணி 298 ரன்களை எடுத்தது

 உலக கோப்பையில் அதிக பட்ச சேஸிங் ஸ்கோர் 167 தான் அதனால் எளிதாக வென்றுவிடுவார்கள் இந்திய அணியினர் என்று ரசிகர்கள் நினைக்க தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வூல்வோர்ட் ஆட்டம் வேறுமாதிரி இருந்த்து. இந்திய பெண்கள் இந்த துவக்க ஜோடியை பிரிக்க மிகவும் சிரமப்பட்டனர். முதல் விக்கெட் ரன் அவுட்டாக  அடுத்த விக்கெட்டை உடனே வீழ்த்தி ஸ்ரீ சாரினி நம்பிக்கை அளித்தாலும் லாரா கோப்பையை வெல்வதில் உறுதியாக நின்றார். அவருக்குத் துணையாக  டெரிக்சனும் நிற்க இந்தியர்களின் டென்ஷன் எகிறியது.

 அப்போது ஷாபாலி வர்மா மீண்டும் கை கொடுத்தார். அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் வீழ்த்தி  தன்னம்பிக்கை கொடுக்க ஒரு புறம் ராதா யாதவ் மோசமாக வீசினாலும் தீப்தி, சாரிணி, ஷபாலி கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன் ரேட்டை கட்டுப்படுத்தினர். நாற்பதாவது ஓவரில் ஒரு ஓவருக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலைவரும்போது தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்களை இழந்துவிட்டிருந்தது.



 சதமடித்த லாரா ரன்னை அதிகரிக்க பந்தை தூக்கி அடிக்க அமன் ஜித் அதை தட்டி தட்டிப் பிடிக்க சோகத்துடன் வெளியேறினார் லாரா. தென்னாப்பிரிக்காவின் கோப்பை கனவு தகர்ந்தது. பின்னர் 46 வது ஓவரில் அனைத்துவிக்கெட்களையும் இழந்த்து. இந்தியாவின் கோப்பை கனவை இறுதி விக்கெட்டை கேட்ச் செய்து நினைவாக்கினார் கேப்டன் ஹர்மன் ப்ரித்.

 ஒரு பக்கம் இந்தியர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் அழ. மறுபுறம் தோல்வி சோகத்தில் தென்னாப்பிரிக்க அணியினர் அழுதனர்.  இந்திய ரசிகர்களுக்கும் தென்னாப்பிரிக்க அணியினர் தோற்றது சோகம் தான். ஆனால் வென்றது இந்திய அணியாயிற்றே! எனவே வெல் ப்ளேயிட் லாரா என்று கோஷமிட்டு ஆறுதல் அளித்தனர்.

 இந்திய பெண்கள் அணி முதல் முறையாக கோப்பை வென்ற மகிழ்ச்சியில் முன்னாள் வீராங்கனைகள், வீரர்கள் அனைவரும் மைதானத்தில் திரள பயிற்சியாளர் அமோல் மஜும்தார் கால்களில் விழுந்து ஆசி பெற்றார் ஹர்மன் ப்ரித்.



 மிகச்சிறந்த வீர்ரான மஜூம்தார் தேசிய அணிக்காக விளையாட முடியாமல் போன வீர்ர். மிடில் ஆர்டர் வீர்ரான இவர். அப்போது ச்ச்சின் கங்குலி, டிராவிட் லக்‌ஷ்மண் அபார பார்மில் இருந்த்தால் தேசிய அணியில் தேர்வாகாமல் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஆடியிருந்தார். இவரது பயிற்சியின் கீழ் இப்போது தேசிய அணி உலக்கோப்பை வென்றிருக்கிறது. அவரது சிறப்பான பயிற்சிக்கு கிடைத்த பரிசு இது.

 கோப்பை வென்றதும் முன்னாள் ஆட்டக்காரர்கள் மிதாலி, ஜூலன் கோஸ்வாமி அஞ்சும் சோப்ரா ஆகியோரிடம் கொடுத்து போஸ்கொடுக்கச்சொல்லி மகிழ்ந்தது இந்திய அணி.

இந்திய அணியின் கனவு மெய்ப்பட்டிருக்கிறது. இக்கனவு தொடர்ந்து மெய்ப்பட  இன்னும் கொஞ்சம் இந்திய அணி மெனக்கெட வேண்டும்.

இந்திய பெண்களின் பீல்டிங், மற்றும் பவுலிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.




பவுலிங்கில் தீப்தியும், சாரிணியும் நன்றாக வீசுகிறார்கள். ஆனால் வேகப்பந்து சுத்தமாக எடுபடவில்லை.

களத்தடுப்பில் பைனலில் கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தது.கையில் விழுந்த கேட்ச்சுகளை கோட்டை விட்டனர். அந்த கேட்சுகளை பிடித்திருந்தால் போட்டி இன்னும் சீக்கிரம் முடிந்திருக்கும்.

பேட்டிங்கை பொறுத்தவரை சிறப்பாக இருந்தாலும் தீப்தி ஷர்மா ஆப் சைடில் விழும் பந்துகளை கூட லெக் சைடில் அடித்து ரன்களை சேர்த்தார். அவரது நல்ல காலம் நேற்று நல்ல ஸ்கோர் கிடைத்தது.இது எல்லா சமயத்திலும் கிடைக்காது.



 அதேபோல ரன்னிங் பிட்வீன் விக்கெட்ஸ் ரொம்ப ஸ்லோவாக இருந்தது.இரண்டு ரன்கள் எடுக்க வேண்டியது சிங்கிளாகவும் மூன்று ரன்கள் எடுக்க வேண்டியது டூவாகவும் குறைந்தது இந்தியாவின் ஸ்கோரை பாதித்தது.

ஜெமிமா நல்ல படியாகத் துவங்கி  தேவையற்ற ஷாட் அடித்து ஆட்டமிழந்தார். அதை மாற்றிக்கொள்ள வேண்டும். பின் வரிசையில் பவுலர்களும் கொஞ்சம் ரன் அடிக்க பழக வேண்டும்.

இவற்றில் கூடுதல் கவனம் செலுத்தினால் இன்னும் சில ஆண்டுகள் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலக அளவில் கவனம் பெற்று ஆதிக்கம் செலுத்த துவங்கிவிடும்.



கோப்பை வென்று ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் ஹர்மன் ப்ரித் கேப்டன்சியிலிருந்து விலகவேண்டும் என்று  முன்னாள் கேப்டன் சாரதா ரங்கசாமி கூறியுள்ளார். இது அணிக்குள் தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பும். ஏற்கனவே மிதாலி கவுர் அணியை ஒருங்கினைக்கவில்லை என்று அரையிறுதிக்கு முன் சொல்லியிருந்தார். இது போன்ற கருத்துகள் இப்போது தேவையற்றது.

 இந்திய அணி கோப்பை வென்றிருக்கிறது! அதைக் கொண்டாடுவோம்! தொடர்ந்து கோப்பைகள் பல வெல்ல வாழ்த்துவோம்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2