மன்னித்துவிடு மணிமொழி!
மன்னித்துவிடு மணிமொழி! அவன் அப்படி செய்வான் என்று கொஞ்சம் கூட மணிமொழி நினைத்துக்கூட பார்க்கவில்லை! பரபரவென உள்ளே வந்த்தும் யார் இருக்கிறார்கள் என்ன ஏது என்று ஒன்றைக்கூட பார்க்கவில்லை! என்னை மன்னித்துவிடு மணிமொழி! என்று சாஷ்டாங்கமாக அவள் காலில் விழுந்துவிட்டான். அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டுவரவே ஒருநிமிஷம் ஆகிவிட்ட்து மணிமொழிக்கு. ஆனாலும் சுதாரித்துக் கொண்டாள். “என்ன ..என்னங்க இது! முதல்லே எழுந்திருங்க!” என்றாள். பக்கத்து அறையில் அவனது மாமனாரும் மாமியாரும் ஏதோ குசுகுசுவென பேசிக்கொள்வது காதில் விழுந்தது. அதை சிறிதும் லட்சியம் செய்யாமல், ”மணிமொழி முதல்லே நீ என்னை மன்னிச்சேன்னு ஒரு வார்த்தைச் சொல்லு! அப்போதான் எழுந்திருப்பேன்!” என்றான் மகேஷ். மணிமொழியின் கணவன். “உங்களை எதுக்கு மன்னிக்கனும்?” என் பேர் எல்லாம் இன்னும் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? முதல்லே எழுந்திருங்க! ஏதோ சி எம் கால்லே விழற அமைச்சருங்க மாதிரி என் கால்லே விழுந்திருக்கீங்க என்றாள் மணிமொழி நக்கலாக. தடாலடியாக விழுந்தவன் தடாலடியாக எழுந்தான். இ..இந்த நக்கல்தான் நம்மளை பிரிச்சது… அது மட்டும்.. அது மட்டும் இல்லேன்னா! என்