Posts

Showing posts from November, 2011

மரங்களுக்கும் வந்திருச்சு பீதி! பசுமை வழி சாலைக்கு வந்த சோதனை

Image
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்து, புது அமைச்சரவை பதவியேற்ற மூன்று மாதத்திற்குள், மூன்று முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி, இப்போது யாரை பார்த்தாலும், மீண்டும் அமைச்சரவை மாற்றம் இருக்காமே என்ற பேச்சு அடிபடுகிறது. பொதுமக்களே ஆர்வமாக இருக்கும் போது, பதவியில் உள்ளவர்கள், பதவிக்கு வரத் துடிப்போர் மத்தியில் எப்படி மனஓட்டம் இருக்கும். தமிழக சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றதும், முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்தார். சீனியர்களை விட்டு விட்டு நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதே என்று ஆச்சர்யப்பட்டவர்கள் இதை தக்க வைக்க வேண்டுமே என பயந்தும் போயினர். பரிகார பூஜைகள்: இதன் காரணமாக, அமைச்சர்களாக பதவியேற்றதும், கோட்டையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் போய் அமர்வதற்கு கூட, பரிகார பூஜைகள் செய்தும், நாள், நட்சத்திரம் பார்த்தும் இருக்கின்றனர். இதற்கு காரணம் இருக்கிறது, கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள், இப்போது வழக்குகளில் சிக்கி சிறையில் உள

அஸ்வின்- ஓஜா! புதிய சுழல் கூட்டணி!

Image
அஸ்வின்- ஓஜா!   புதிய சுழல் கூட்டணி!    இந்திய கிரிக்கெட்டிற்கு புதிய திறமையான இரு சுழல் பந்து வீச்சாளர்கள் கிடைத்துள்ளனர். இது நல்ல எதிர்காலத்தை காட்டுகிறது. இந்திய அணியில் ஒரு காலத்தில் சுழல் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பிஷன் சிங்க் பேடி சந்திர சேகர் பிரசன்னா, வெங்கடராகவன், போன்றவர்கள் சுழல் பந்தில் ஜாம்பவான்களாக திகழ்ந்தார்கள்.     இந்த ஜாம்பாவான்கள் காலத்திலும் இந்தியா பெரிய வெற்றிகளை சுவைக்கவில்லை. ஆனாலும் இவர்களின் பந்துகளை எதிர்கொள்ள உலகின் முன்னனி பேட்ஸ்மேன்கள் பயந்தனர். அந்த அளவிற்கு இவர்களும் இந்திய பிட்ச்களும் சுழற்பந்து வீச்சாளர்களின் சொர்கமாக இருந்தது.    ஆனால் இவர்களின் காலத்திற்கு பின்னர் சுழற்பந்து வீச்சில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. இதை கும்ப்ளே-ஹர்பஜன் கூட்டணி போக்கியது. இவர்கள் இருவரும் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக பயன் படுத்தப்பட்டனர். கும்ப்ளேவின் லெக்-ஸ்பின்னும் ஹற்பஜனின் ஆப்-ஸ்பின்னும் எதிரணி வீரர்களை திக்குமுக்காட செய்தன. விக்கெட் வேட்டை நடத்திய இவர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக   திகழ்ந்தனர்.         இப்போது இந்திய அணிக

பூமியின் தன்மைகள் கொண்ட புதிய கிரகம்: அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

லண்டன்: பூமியை போன்ற ஒத்த தன்மைகள் கொண்ட புதிய கிரகம் ஒன்றை கலிப்போர்னியா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளித் துறை போராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர், பூமியில் இருந்து மிக அருகில் உள்ள ஜிலிஸி 581 என்ற நட்சத்திரம் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தனர். அந்த ஆராய்ச்சியில் ஜிலிஸி 581 நட்சத்திரத்தை சுற்றி வரும் 2 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். இதில் பூமியில் இருந்து 123 திரில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு கிரகம் பூமியை போலவே ஒத்த தன்மைகளை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள அந்த கிரகத்துக்கு ஜிலிஸி 581ஜி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆஸ்ட்ரோபிஸிக்கல் ஜர்னல் என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, கடந்த 11 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிக்கு பிறகு, ஜிலிஸி 581ஜி என்ற புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் பூமியில் இருப்பது போலவே, நீர்ம நிலையிலான தண்ணீர் இருக்கலாம் என்று தெ

தமிழக அரசியலைப் புதுப்பிக்கும் தனி இயக்கம்

Image
சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளில் பல வருடங்களாக போஸ்டர் கட்-அவுட் கோஷங்களுக்காக அடிமட்டத் தொண்டர்களாகவே காலம் கழித்தவர்கள். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இவர்கள் அவரவர் கட்சிகளில் இருந்து வெளியேறி ஒன்று சேர்ந்து ஒரு தனி இயக்கத்தைத் தொடங்கி பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தமிழகத்தின் பன்முக வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்கள். அரசியல் கட்சியாகாமல் ஒரு தனி ராணுவ படையாக இவர்கள் செயல்படுகிறார்கள். கபிலன் வைரமுத்துவின் "உயிர்ச்சொல்" எனும் புதிய நாவலில் இந்த கற்பனை இடம் பெற்றிருக்கிறது. கிழக்கு பதிப்பகத்தின் இந்த புதிய வெளியீட்டை ஒரு சில இலக்கியவாதிகள் "அதீதமான கனவு- நம்பும்படியாக இல்லை" என்று விமர்சிக்கிறார்கள். ஒரு சிலர் "ஒரு மாற்று அரசியலுக்கான தாகம் இளைஞர்கள் மத்தியில இருக்கு. அந்த தாகமும் விரக்தியும் ஒட்டுமொத்தமா வெளிப்படும்போது இந்த கற்பன ஒன்னும் அதீதமா தெரியில" என்று வாதாடுகிறார்கள். இந்த இயக்கத்திற்கு வேண்டா வெறுப்பாக விளம்பர சேவை செய்யும் அமலன்- அவர் மனைவி தருணா - இவர்களைச் சுற்ற

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்

Image
  ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர். தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள். கைகளை வீசி நடங்கள் காலை 6 மணிக்கு முன் நடப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம். நடக்கும் போது கைகளை வீசி நடக்கவேண்டும். குறைந்த பட்சம் இரண்டு கிலோமீட்டராவது நடந்த பின்னர் 5 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு கைகளை பத்துமுறை நீட்டி மடக்க வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு காலை வேலைகளை பார்க்கலாம். உடல் எடை குறையும் உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் சாதரண ஒன்றாகிவிட்டது. சரியான உடல் உழைப்பு இல்லாதது. இன்றைய இளைய தலைமுறையினர்

சில்லறைத் தனமான முடிவு!

Image
சில்லறைத் தனமான முடிவு! சில்லறை வர்த்தகத்தில் 51% அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு சில்லறைத் தனமானது. ஏற்கனவேபுதிய பொருளாதாரக் கொள்கை என்ற போர்வையில் நாட்டில் சுதேச தொழில்களை முடக்கி போட்ட இதே காங்கிரஸ் அரசு இன்று சில்லறை வியாபாரிகளின் தலையிலும் கை வைத்துள்ளது.    இந்த முடிவால் பணவீக்கம் குறையுமாம் இப்படிச் சொல்லி தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறது காங்கிரஸ். பணவீக்கத்தை குறைக்க இந்த முடிவுதானா கிடைத்தது. காலில் தேள் கொட்டினால் துடையிலா நெறிகட்டிக்கொள்ளும்? இப்படி ஒரு முடிவை எடுத்து மீண்டும் இந்திய பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ள வேண்டிய அவசியம் என்ன? நாட்டில் இந்த சில்லறை வியாபாரிகள் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களின் வாழ்வு என்னாவது? இதையெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டாமா? மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டாமா? எதுவுமே இல்லாமல் திடீரென சில்லறை வியாபாரிகளின் வயிற்றில் அடித்துள்ளது மத்திய அரசு!.    அன்று அன்னியமுதலீட்டை அதிகப்படுத்துகிறேன் என்று சொல்லி நாட்டில் கோககோலா, பெப்சியை அணுமதித்ததன் விளைவாக உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள் அடியோடு அழிந்து போயின. ஒன்றரை ர

எதிர்பார்ப்பை தூண்டும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்!

Image
சரவெடி போல் நோக்கியா நிறுவனம் அடுத்தடுத்து மொபைல்களை கொடுத்து கொண்டே இருக்கிறது. லுமியா வரிசையில் அடுத்து லுமியா-601 மற்றும் லுமியா-603 என்ற மொபைல்களை நோக்கியா வெளியிட உள்ளது. இந்த இரண்டு மொபைல்களுமே சிறந்த செயல்பாடுகளை கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 601 மற்றும் 603 மொபைல்கள் வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் தன்மை கொண்டது. லுமியா-603 மொபைல் சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், லுமியா-601 மொபைல் விண்டோஸ் 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயங்கும். இரண்டுமே சிறந்த தொழில் நுட்ப வசதிகளை கொடுக்கும். நோக்கியா லுமியா-603 மொபைல் 3.5 இஞ்ச் திரை வசதி கொண்டது. ஆனால், நோக்கியா 601 லுமியா மொபைல் சற்று அதிகமான திரை வசதியை வழங்கும். லுமியா-601 மொபைல் போனில் 3.7 இஞ்ச் டபிள்யூவிஜிஏ தொடுதிரை வசதி கொண்டது. நோக்கியா 603 மொபைலில் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும். லுமியா-601 மொபைல் 8 மெகா பிக்ஸல் கொண்டு அசத்தும். 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் துணை கொண்டு இயங்குகின்றது நோக்கியா 603 மொபைல். லுமியா-601 மொபைல் 1 ஜிகாஹெர்ட்ஸ் கியூவ

என் இனிய பொன்நிலாவே! பகுதி 13

Image
என் இனிய பொன்நிலாவே!   பகுதி 13                ‘ப்ரியம்வதா’ முன் கதை சுருக்கம்} தன் கம்பெனிக்கு வேலைக்கு வரும் மதுமிதாவை விரும்பினான் அபிஷேக். அதே சமயம் அவனது உறவு பெண் அவணை ஒருதலையாக காதலித்தாள். ஒருநாள் மதுமிதாவிடம் தான் பெண் கேட்டு வரப்போவதாக அபிஷேக் தெரிவித்தான்.    என்ன என்ன சொல்றீங்க? என்று   நம்ப முடியாதவளாய் கேட்டாள் மதுமிதா. உன்னை பெண்கேட்டு வரப்போவதாக சொன்னேன்!. உன் காது ஒன்றும் கோளாறு இல்லையே? என்று கேட்டான் அபிஷேக்.      எனக்கு ஒன்றும் கோளாறு இல்லை! உங்களுக்குத் தான் இப்போது ஏதொ கோளாறு போலத் தெரிகிறது! என்றாள் மதுமிதா.   உனக்கு ஏன் அப்படி தோன்றுகிறது! நான் தெளிவாகத்தானே பேசுகிறேன்!   இல்லை கொஞ்ச நேரம்முன் ஏதோ என்னை பெண் கேட்டுவரப்போவதாகச் சொன்னீர்களே?    ஆமாம் அதில் என்ன கோளாறு கண்டாய்? இது ஸ்வேதாவுக்குத் தெரிந்தால்?   அவள் யார் என் வாழ்க்கையில் குறுக்கிட? மேலும் அவளுக்கு இது தெரிந்து என்ன ஆகப்போகிறது?   அவள் உங்களை மணக்கப்போவதாக ஊரெல்லாம் தம்பட்டம் அடித்து வருகிறாள் நீங்கள் என்னடாவென்றால் என்னை பெண் கேட்டு வரப்போவதாகக் கூறுகிறீர்கள். இந்த விசயம் உங்கள் அம்மாவிற்குத்

மும்பை டெஸ்ட் "திரில் டிரா * கோப்பை வென்றது இந்தியா

Image
மும்பை: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மும்பை டெஸ்ட், "டிரா ஆனது. இருப்பினும், 2-0 என தொடரை வென்ற இந்திய அணி, கோப்பை கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. முக்கியத்துவமில்லாத மூன்றாவது டெஸ்ட் மும்பையில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 590, இந்தியா 482 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில்  2 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்து, 189 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. பிராத்வைட் (34), டேரன் பிராவோ (27) அவுட்டாகாமல் இருந்தனர். ஓஜா கலக்கல்: இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. பிராத்வைட் (35) ஓஜாவின் சுழலில் சிக்கினார். டேரன் பிராவோ (48), சாமுவேல்ஸ் "டக் அவுட்டாகினர். கார்ல்டன் (1), பாவெல் (11), கேப்டன் சமி (10) விரைவில் நடையை கட்டினர். வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்சில் 134 ரன்னுக்கு சுருண்டது. சுழலில் அசத்திய பிரக்யான் ஓஜா 6, அஷ்வின் 4 விக்கெட் வீழ

ரத்தத்தை சுத்தமாக்கும் கொத்தமல்லி கீரைகள்

Image
இந்திய சமையலில் தனியா எனப்படும் கொத்தமல்லிக்கு சிறப்பு மிக்க இடமுண்டு. சமையலில் மசாலா பொருளாக வாசனைக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கொத்தமல்லியில் இருந்து வளரும் சிறுதாவரமான கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இந்த சிறிய வகை தாவரத்தில் உள்ளது என்றால் மிகையில்லை. இது உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உரைவதை தடுக்கிறது. இதனால் ஹார்ட் அட்டாக் பாதிப்பு ஏற்படும் ஆபத்து குறைகிறது. கண்பார்வை தெளிவடையும் சிறுவயது முதலே கொத்தமல்லி கீரையைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலைக்கண்நோய் ஏற்பட்டவர்கள் கொத்தமல்லிக்கீரையை உணவில் சேர்த்து வர மாலைக்கண்நோய் குணமடையும். மக்கட் பேறு ஏற்படும் உடலில் புதிய ரத்தம் உண்டாகி நல்ல பலம் பெற வேண்டுமானால் கொத்தமல்லிக்கீரையை நெய்யில் வதக்கி துவையல் போல சாப்பிட்டு வரவேண்டும். இதன் மூலம் விலை உயர்ந்த டானிக்கில் கிடைக்கும் சத்துக்களை விட அதிக சத்துக்கள் கிடைக்கும்.

தளிர் ஹைக்கூ கவிதைகள்! 3

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! காலிப்பாத்திரத்தில் சமைத்து பசி ஆற்றுகிறது! குழந்தை! நீந்த தெரியாது நின்றது குதிரை! குளத்தில் நிழல்! துடைத்தெடுத்தது இருட்டை! ஒளி! உள்ளம் குமுறுகையில் வார்த்தைகளில் வெடிக்கிறது கோபம்! பறவைகளின் இசையில் பயிர்களின் நாட்டியம்! மழை வருகை! ஒடுங்கும் முதுமையில் ஓடும் குழந்தையாகிறது மனசு! குளத்தில் கோலம் போட்டது மழைத்துளி! மஞ்சள் வெயில்! மலர் சொறிந்தன வண்ணத்துப்பூச்சிகள்! முகத்தை திருப்பிக்கொண்டது முழுநிலவு அமாவாசை! வேண்டுதல் இன்றி மொட்டை போட்ட மரங்கள்! இலையுதிர் காலம்! தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!

ஷாக் அடிக்கும் மின்கட்டண உயர்வு? ரூ 10 வரை உயர்வு?

Image
சென்னை: மின்சார கட்டணம் உயர்த்தப்படும் என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.இது தொடர்பாக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு பரிந்துரைத்துள்ள மின்சார கட்டணம் தற்போது வெளிவரத்துவங்கியுள்ளது. இதன் படி வீடுகளுக்கு மின் சார கட்டணம் 100 யூனிட் வரை ஒரு யனிட்டிற்கு ரூ.1.50 எனவும், 101 முதல் 600 வரை ரூ.5.75 என உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.5.50 எனவும், தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ. 5 எனவும், கடைகளுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.6.50 எனவும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனிடையே மின்சார கட்டண உயர்வு குறித்து 4 வாரத்தில் மக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும், சென்னை தவிர மற்ற நகரங்களில் மக்கள் கருத்து கேட்க கூட்டம் நடத்தப்படும் எனவும் தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணைய தலைவர் கபிலன் கூறியுள்ளார். மேலும் அவர் மின் கட்டண உயர்வு குறித்து 90 நாட்களுக்குள் முடிவு செய்யப்படும் எனவும் கூறினார். நன்றி தினமலர்

ஒரே இன்னிங்க்சில் 5 விக்கெட்கள், அதிரடி சதம் - அஸ்வின் அசத்தல் சாதனை

Image
மும்பை: அறிமுகமாகிய முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்களை வாரிய அஸ்வின், தனது 3வது போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் அடித்து அசத்தி விட்டார். சென்னையை சேர்ந்த அஸ்வின் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடினார். 9 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். அதன்பிறகு 2வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி, ரன் வேகத்தை குறைத்தார். இந்த நிலையில் தற்போது மும்பையி்ல் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்சில், அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதன்பின் களமிறங்கிய இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களின் சதம், அரைசதம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முக்கியமாக சச்சின் 100வது சதம் குறித்து ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. சச்சின் 100வது சதம் அடிக்க வேண்டும் என்று யாகங்கள், பூஜைகள் செய்த ரசிகர்களும் உண்டு. இந்த நிலையில் முதல் இன்னிங்க்சில் இந்தியா 7 விக்கெட்களை இழந்து நம்பிக்கையற்ற நிலையில் இருந்த போது களமிறங்கினார் அஸ்வின். த

மீன் ஏன் குட்டி போடுவதில்லை? பாப்பா மலர்!

Image
மீன் ஏன் குட்டி போடுவதில்லை?                  அறிவியல் கதை ஜகன் வீட்டு மேஜை மீதிருந்த கண்ணாடி தொட்டிக்குள் மீன்கள் உலாவுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். வண்ண வண்ண மீன்கள் நீரினுள் நீந்திக் கொண்டு இருந்தது. நேற்றுதான் அந்த மீன் தொட்டியை அவனது தந்தை வாங்கி வந்திருந்தார். அழகான மீன்களை வேடிக்கை பார்ப்பதில் அவனது பொழுது கொஞ்சம் கழிந்தது.    என்ன ஜகன் மீன் தொட்டியை அப்படியே வச்ச கண்வைக்காமே அப்படியே முறைச்சி பார்த்துகிட்டிருக்கே? மீன்கள் என்ன சொல்லுது? என்றவாறு அவனருகே வந்தார் அவனது தந்தை    அப்பா மீன் குஞ்சுகளை நல்லா உன்னிச்சு பாருங்கப்பா! என்றான். அவனது தந்தை சற்று கவனித்துவிட்டு என்னப்பா எதைச் சொல்றே? ஒன்னும் தெரியலையே? என்று கூறினார்.     நல்லா பாருங்கப்பா எல்லா மீன் குஞ்சுகளும் அடிக்கடி வாயை திறந்திகிட்டும் மூடிகிட்டும் இருக்குது! ஏன் அப்படி செய்யுதுங்க? அதைத் தான் ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கேன் என்றான்.    அதுவா அதுக்கான காரணத்தை நான் சொல்றேன். மீனோட தலையில இரண்டு பக்கமும் பிளவு பட்ட ஒரு பகுதி இருக்குதுபார்! அதுக்கு பேருதான் செவுள்! என்றான் ஜகன். ஆமா நீ சொன்னது கரெ

நண்பேன்டா...! டீ மாஸ்டருடன் விளையாடும் அணில்: ஆச்சர்யப்பட வைக்கும் பாசப் பிணைப்பு

Image
விழுப்புரம் : விழுப்புரத்தில், ஒரு டீ கடைக்காரருடன் விளையாடியபடி நட்புடன் பழகி வரும் அணிலின் பாசப் பிணைப்பு, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம், கணபதி நகரை சேர்ந்தவர் வேல்முருகன். திருச்சி நெடுஞ்சாலையில் மகளிர் கல்லூரி எதிரே, டீ கடை வைத்துள்ளார். எப்போதும் இவருடன் விளையாடிக் கொண்டிருக்கும் அணிலைப் பார்த்து, கடைக்கு வரும் மக்கள் ஆச்சர்யப்படுகின்றனர்.பங்க் கடையில் விற்பனை, டீ போடும் போதும், அவரது தோளிலும், கைகளிலும் திரிந்தபடி விளையாடிக் கொண்டிருக்கிறது அந்த அணில். கண்ணில் பட்டவுடன் ஓடிவிடும் சுபாவம் கொண்ட அணில், ஒருவருடன் நட்புறவாக ஒட்டிக்கொண்டுள்ளது, அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது.அவர் கொடுக்கும் உணவுகளை சுவைத்தபடி சுற்றி வரும் அந்த அணில், டீ கடை மேல் கூரை, பங்க் கடை பகுதிகளில் உலவுகிறது, காஞ்சன் என செல்லமாக அவர் அழைத்த குரலுக்கு, உடனே ஓடி வந்து, அவர் தோள் மீது உட்கார்ந்து விளையாடுகிறது. அவருடன் சண்டை கூட போடுகிறது. அணிலுடன் ஏற்பட்ட நட்பு குறித்து வேல்முருகன் கூறியதாவது:கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், கடையின் அருகே இருந்த மரத்தின் கூட்டிலிருந்து, இந்த அணில் க

தமிழகத்தில் 7 மணி நேர மின்வெட்டு.. இருளில் தவிக்கும் மக்கள்- தொழில்கள் பாதிப்பு

Image
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி குறைந்துள்ளதால் ஏழு மணி நேரம் மின் வெட்டு அமலாக்கப்படுகிறது. இந்த மின் வெட்டினால் மாநிலம் முழுவதும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மூன்று முதல் நான்கு மணிநேரமாக இருந்த மின்வெட்டு தற்போது 7 மணி நேரமாக அதிகரித்துள்ளது. தமிழக மின் நிலையங்களின் மூலம் 3,560 மெகாவாட், தனியார் மின் நிலையங்களால் 940 மெகாவாட், மரபுசாரா எரிசக்தி மூலம் 100, காற்றாலைகளால் 1,150, மத்திய தொகுப்பால் 2,060 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. 800 மெகாவாட் மின்சாரம், தனியாரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. இதுபோக 3,700 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் கடும் மின்வெட்டு அமலாக்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக மின்வாரியம் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகிறது. நிலக்கரி இருப்பு குறைவு, பராமரிப்பு, நிலையங்களில் கோளாறு, தளவாட பொருட்களுக்கு பற்றாக்குறை என வரிசையாக காரணங்களை சொல்கிறார்கள். இதனால் சென்னை தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகள் பயங்கர மின் வெட்டை சந்தித்து வருகின்றன. கிட்டத்தட்ட 7 மணி நேரம் கரண்ட் இல்லை.

சரண்யா மோகனை கண்டுக்காத தமிழ் சினிமா!

Image
சரண்யா மோகனை கண்டுக்காத தமிழ் சினிமா! ஆளாளுக்கு இந்த சரண்யா மோகனை ஜொள்ளு விட்டுத் திரியறப்ப நாமளும் எதுக்கு மனசுக்குள்ள பூட்டி வைச்சி இருக்கிறது! கொஞ்சம் அவுத்து விடலாமுன்னு தான் இந்த பதிவு! சரண்யா மோகன் ரசிகர்களே காதில் புகை வந்தாலும் தொடர்ந்து படிப்பீங்கன்னு நம்பி எழுதறேன்!   யாருடா இந்த சரண்யா மோகன் என்று தமிழ் சினிமாவே பார்த்திராத அப்பாவி வாசகர்களும் அந்த காலத்து சரோஜாதேவி சாவித்திரிய தவிர வேற யாரையும் பார்க்க மாட்டோம்னு அடம் பிடிக்கும் சில பெரிசுகளும் இவங்களை பார்த்தா விடமாட்டாங்க! அப்படிப்பட்ட இந்த் சரண்யாவை தமிழ் சினிமா சரியா பயன் படுத்தலைங்கிறதுதான் என் வாதம்! அதென்ன வாதம் பித்தம்னு கேட்காதீங்க? வாதம்னா என்ன சொல்லலாம்?ம்ம்! என்னோட கருத்து!   இப்ப எதுக்கு இந்த தீடீர் பதிவு! சரண்யா மோகனை பத்தி எப்படி உனக்கு நினைப்பு வந்துச்சு? இதே மாதிரி எத்தனையோ பேர காணாம போக்கி இருக்கு நம்ம தமிழ் திரையுலகம் அவங்க மேல இல்லாத அக்கறை இவங்க மேல என்ன? என்று கேட்கலாம் நீங்கள்?   சரண்யா மோகனை பத்தி நண்பர் கே. எஸ் ராஜ் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தார் இவங்க எனக்கு பிடிச்ச நடிகைன்னு ஆனா தம

கர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் - ஆய்வில் தகவல்

Image
இரும்பு சத்து குறைபாடு காரணமாக, 33 சதவீதம் பேர் அனிமீயா என்னும் இரத்தச் சோகை நோயால் அவதியுறுவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உடலின் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். ஆனால் கர்ப்பிணிகள் அதிக அளவில் இரும்பு சத்து மாத்திரைகள் உட்கொள்வது ஆபத்தானது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இருப்பு சத்தின் பங்கு அதிகம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இரும்புச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுகிறது.உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் இரத்த சோகை உண்டாகும். இதனால் உடல் சோர்வடைந்து சுறுசுறுப்பு குறைந்து விடும். பெண்களுக்கு இரும்பு சத்து பெரும்பாலும் பெண்களுக்கே அதிக அளவில் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப் போக்கு இருந்தால் உடலில் இரும்புச்சத்தின் இருப்பு குறைய ஆரம்பிக்கும். இதனால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். குழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைபாடினால் மூளை வளர்ச்சி குறைவது, புரிந்து கொள்ளும் திறன் குறைவது போன்றவை ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கு

கட்டண உயர்வும் கலங்கும் மக்களும்!

Image
கட்டண உயர்வும் கலங்கும் மக்களும்! ஜெயா அரசு பஸ் கட்டணத்தையும் பால் கட்டணத்தையும் உயர்த்தியதும் உடனடியாக ஆதரவாக ஓர் பதிவிட்டேன்! அதற்கு பிராயசித்தமாக ஒர் பதிவு இது! இப்பொழுதும் எனது கருத்தில் மாற்றமில்லைதான் கட்டண உயர்வு என்பது காலத்தின் கட்டாயம்தான்! விலைவாசி அசுர வேகத்தில் ஏறிவரும் வேளையில் பொதுத்துறை நிறுவனங்கள் கடனில் மூழ்கும் இந்த நிலையில்தான் கட்டண உயர்வு மக்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது!     இந்த சுமை மக்களுக்கு பழகிப் போன ஒன்றுதான் என்றாலும் தாங்க கூடிய அளவில் இருக்கிறதா என்று சற்று சிந்தித்து பார்த்திருக்கலாம் அம்மா! அம்மா என்று பெயரிருந்தால் போதுமா? அந்த பெயரின் அர்த்தம் கருணை அல்லவா? எதையும் தடாலடியாக தைரியமாக அணுகுவது என்பது உங்கள் பலமாக நீங்கள் கருதினாலும் அதுவே உங்கள் பலவீனமாக அமைந்து விடுகிறது!     காரிலும் இரு சக்கர வாகனங்களிலும் பயணிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு சுமையாக தெரிய வாய்ப்பில்லை! நானும் ஒரு இரு சக்கர வாகனன் என்ற முறையில் பெட்ரோல் விலை மாதத்திற்கு ஒரு முறை ஏறும் போதெல்லாம் புலம்பித் தீர்த்துவிட்டு சொகுசு பயணத்தை விட முடியாது தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்