சரண்யா மோகனை கண்டுக்காத தமிழ் சினிமா!


சரண்யா மோகனை கண்டுக்காத தமிழ் சினிமா!

ஆளாளுக்கு இந்த சரண்யா மோகனை ஜொள்ளு விட்டுத் திரியறப்ப நாமளும் எதுக்கு மனசுக்குள்ள பூட்டி வைச்சி இருக்கிறது! கொஞ்சம் அவுத்து விடலாமுன்னு தான் இந்த பதிவு! சரண்யா மோகன் ரசிகர்களே காதில் புகை வந்தாலும் தொடர்ந்து படிப்பீங்கன்னு நம்பி எழுதறேன்!
  யாருடா இந்த சரண்யா மோகன் என்று தமிழ் சினிமாவே பார்த்திராத அப்பாவி வாசகர்களும் அந்த காலத்து சரோஜாதேவி சாவித்திரிய தவிர வேற யாரையும் பார்க்க மாட்டோம்னு அடம் பிடிக்கும் சில பெரிசுகளும் இவங்களை பார்த்தா விடமாட்டாங்க! அப்படிப்பட்ட இந்த் சரண்யாவை தமிழ் சினிமா சரியா பயன் படுத்தலைங்கிறதுதான் என் வாதம்! அதென்ன வாதம் பித்தம்னு கேட்காதீங்க? வாதம்னா என்ன சொல்லலாம்?ம்ம்! என்னோட கருத்து!
  இப்ப எதுக்கு இந்த தீடீர் பதிவு! சரண்யா மோகனை பத்தி எப்படி உனக்கு நினைப்பு வந்துச்சு? இதே மாதிரி எத்தனையோ பேர காணாம போக்கி இருக்கு நம்ம தமிழ் திரையுலகம் அவங்க மேல இல்லாத அக்கறை இவங்க மேல என்ன? என்று கேட்கலாம் நீங்கள்?
  சரண்யா மோகனை பத்தி நண்பர் கே. எஸ் ராஜ் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தார் இவங்க எனக்கு பிடிச்ச நடிகைன்னு ஆனா தமிழ் சினிமா இவங்களுக்கு கதாநாயகி வாய்ப்பு தரலைன்னு வருத்தப்பட்டிருந்தார்! அதுல ஒரு நியாயம் இருப்பதா எனக்கு தோணுச்சு அப்போதைக்கு ஒரு கமெண்ட் போட்டுட்டு வந்துட்டேன்!.அப்புறமா அதையே மறந்திட்டேன்! நேத்து திடீர்னு அவங்க ஞாபகம் நைட்டு வந்துச்சு! பார்த்தியா பார்த்தியா தப்பா நினைச்சுகிறீங்களே!
   பொழுது போகாம நேத்து நைட்டு கே டீவிய போட்டா மகேஷ் சரண்யா மற்றும் பலர் னு ஒரு படம் போட்டாங்க!அதுல கதாநாயகி பேரு சரண்யா! ஆனா அவங்களை யாரு பார்த்தாங்க அந்த கதாநாயகனைத் தவிர? கதாநாயகனோட தங்கச்சியா செமையா நடிச்சிருந்தாங்க நம்ம சரண்யா மோகன்! இயல்பாவே அவங்களுக்கு நடிப்பு நல்லா வருது! அந்த கதாநாயகனும் கதாநாயகியும் தான் மத்தவங்க நடிப்பை இமிடேட் செய்தாங்க! நம்ம சரண்யாவோ தனது டிரெட்மார்க் குறும்பு நடிப்பால் மனதை கொள்ளையடித்துவிட்டார்! கதையெல்லாம் கேக்காதீங்க! படத்த முழுசா பார்க்கலை! தூங்கிவிட்டேன்!
   என்கேள்வி என்னவென்றால் இத்தகையான திறமையான நடிகையை ஏன் தமிழ் சினிமா ஒதுக்குகிறது? மொக்கை நடிகைகளின் பின்னால் ஓடும் தயாரிப்பாளர்கள் இது போன்ற திறமைசாலிகளை கண்டு கொள்வதில்லையே ஏன்? இவர் மட்டுமல்ல இன்னும் சில நடிகைகளையும் தமிழ் சினிமா ஒதுக்கிவைத்துள்ளது. திறமையான இவருக்கு தொடர்ந்து தங்கச்சி வேடமே கொடுத்து ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சிலேயே வைப்பது நியாயம் தானா?
  இவரது முதல் படத்திலேயே ரொம்ப அட்டகாசமா இருக்கும் அவரது நடிப்பு!  யாரடி நீ மோகினி அந்த படம்! அதில் இவருக்காகவே நிறையபேர் இந்த படத்த பார்த்ததா அப்பவே நிறைய பேர் சொன்னாங்க! அந்த படம் வந்து ஒரு மூணு வருசம் ஆகியும் இன்னும் கதாநாயகியா ஆகற வாய்ப்பு அவங்களுக்கு கிடைக்கலை!
 இப்ப வேலாயுதம் படத்திலயும் தங்கச்சி வேடத்தில கலக்கலா நடிச்சிருக்காங்கன்னு கேள்விப் பட்டேன்! இந்த அழகிய நடிகை கூடிய சீக்கிரம் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியா வருவாங்கண்ணு நம்புவோம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!


Comments

  1. ////சரண்யா மோகனை பத்தி நண்பர் கே. எஸ் ராஜ் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தார் இவங்க எனக்கு பிடிச்ச நடிகைன்னு ஆனா தமிழ் சினிமா இவங்களுக்கு கதாநாயகி வாய்ப்பு தரலைன்னு வருத்தப்பட்டிருந்தார்!////

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    போங்க பாஸ் மறந்து போய் இருந்த நினைப்பை மீண்டும் நினைவூட்டிட்டிங்க ரொம்ம பீலிங்கா இருக்கு அவங்களுக்கு என்னை மாதிரி ஒரு நல்ல பையன் வூட்டுக்காரனா கிடைக்கனும் அவங்க சந்தோசமாக இருக்கனும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ரொம்ம பீலிங்கா இருக்குது பாஸ் தமிழ் சினிமா ஓரு திறமையான நடிகையை ஓரம் கட்டுது........

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2