என் இனிய பொன்நிலாவே! பகுதி 13

என் இனிய பொன்நிலாவே!  பகுதி 13

               ‘ப்ரியம்வதா’

முன் கதை சுருக்கம்} தன் கம்பெனிக்கு வேலைக்கு வரும் மதுமிதாவை விரும்பினான் அபிஷேக். அதே சமயம் அவனது உறவு பெண் அவணை ஒருதலையாக காதலித்தாள். ஒருநாள் மதுமிதாவிடம் தான் பெண் கேட்டு வரப்போவதாக அபிஷேக் தெரிவித்தான்.

   என்ன என்ன சொல்றீங்க? என்று  நம்ப முடியாதவளாய் கேட்டாள் மதுமிதா. உன்னை பெண்கேட்டு வரப்போவதாக சொன்னேன்!. உன் காது ஒன்றும் கோளாறு இல்லையே? என்று கேட்டான் அபிஷேக்.
     எனக்கு ஒன்றும் கோளாறு இல்லை! உங்களுக்குத் தான் இப்போது ஏதொ கோளாறு போலத் தெரிகிறது! என்றாள் மதுமிதா.
  உனக்கு ஏன் அப்படி தோன்றுகிறது! நான் தெளிவாகத்தானே பேசுகிறேன்!
 இல்லை கொஞ்ச நேரம்முன் ஏதோ என்னை பெண் கேட்டுவரப்போவதாகச் சொன்னீர்களே?
   ஆமாம் அதில் என்ன கோளாறு கண்டாய்?
இது ஸ்வேதாவுக்குத் தெரிந்தால்?
 அவள் யார் என் வாழ்க்கையில் குறுக்கிட? மேலும் அவளுக்கு இது தெரிந்து என்ன ஆகப்போகிறது?
  அவள் உங்களை மணக்கப்போவதாக ஊரெல்லாம் தம்பட்டம் அடித்து வருகிறாள் நீங்கள் என்னடாவென்றால் என்னை பெண் கேட்டு வரப்போவதாகக் கூறுகிறீர்கள். இந்த விசயம் உங்கள் அம்மாவிற்குத் தெரியுமா?
   அம்மாவிற்குத் தெரியாமல் நான் எதையும் செய்வது கிடையாது! அவர்களும் என் விருப்பத்தை மறுப்பது கிடையாது. சொல்லப்போனால் அவர்கள்தான் உன்னை பெண்கேட்டு வர சொன்னதே!
 அப்படியா? அவர்களுக்கு என்னை பிடித்துவிட்டதா?
பிடிக்காமலா உன்னை பெண்கேட்டுவரச் சொல்லுவார்கள்?
உன் வீட்டார் தான் என்ன சொல்லுவார்களோ? இந்த ஏழைக்கு உன்னைத் தர சம்மதிப்பார்களோ மாட்டார்களோ? என்றான் அபிசேக்.
   போங்க விளையாடாதீர்கள்? என்று செல்லமாய் சிணுங்கினாள் மது!
அப்பாடா இப்போதாவது என் தேவதைக்கு கோபம் தீர்ந்ததே! சரி அலுவலக விசயத்திற்கு வருவோம் அப்புறம் எப்படி அந்த அசகாய சூரர்களை சமாளித்தாய் என அபிஷேக் கேட்க சகஜ நிலைக்கு திரும்பிய மது நடந்த விவரங்களையும் காண்டிராக்ட் பெற்ற விசயத்தையும் கூறி முடித்தாள்.
   சரி மது குட் நைட்! நாளை அலுவலகத்தில் சந்திப்போம்! என்று போனை கட் செய்தான் அபிஷேக்.
   அதன் பிறகு ரொம்ப நேரம் தூக்கம் வராது தவித்தாள் மது. உலகிலேயே இந்த காதல் நோய்க்கு தீர்வே கிடையாது! இது பீடித்தால் மீள்வது என்பது ஏது? என்று அவள் நினைக்க முதன் முதலாய் அவள் அபிஷேக்கை சந்தித்தது மோதல் காதலில் முடிந்தது என்று ஒவ்வொன்றாய் நினைவிற்கு வர அப்படியே அதில் மூழ்கினாள்.
    திடிரென அவளுக்கு ஒரு சந்தேகமும் தோன்றியது! இந்த காதல் நிறைவேறுமா? அந்த ஸ்வேதா சும்மா இருப்பாளா? தன் வீட்டில் சம்மதிப்பார்களா என்று பலவாறு சிந்தித்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.
    அதிகாலையில் அன்ன பூரணி குரல் கொடுத்ததும் எழுந்தாள் மதுமிதா! என்ன மது கண்ணெல்லாம் சிவந்து கிடக்கிறதே? ராத்திரி சரியாத் தூங்கலையா? எதுவோ போன் வந்தது போலத் தெரிந்தது! என்ன அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையா? என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கினாள் அவள் அன்னை!
   அம்மா! கொஞ்சம் மூச்சு விட்டு கேட்கிறாயா? இப்படி கேட்டுக் கொண்டே இருந்தால் நான் எப்படி பதில் சொல்வது? என்று பதிலுக்கு எரிந்துவிழுந்தாள் மது.
   இல்லேம்மா! கண்ணெல்லாம் சிவந்து கிடக்கிறதே என்று ..
  அதெல்லாம் ஒன்றுமில்லை! நேற்று வரும் போதே கண்ணில் தூசி விழுந்திருக்கும் போல ராத்திரி கவனிக்காமல் விட்டு விட்டேன்! அதான் கண் சிவந்து கிடக்கிறது! ஆபிஸ் எம்டி நேற்று வரவில்லை அதான் போன் செய்து விசாரித்தார் வேறொன்றுமில்லை! வென்னீர் ரெடியாக இருக்கிறதா நான் ஆபிசுக்கு போக வேண்டாமா? என்று மது கேட்கவும்
   எல்லாம் ரெடியாக இருக்கு! இன்னும் எழுந்திருக்கிலையேன்னுதான் உன்னை எழுப்ப வந்தேன்! இன்னிக்கு ஒருநாள் லீவு போடேன் கண்ணெல்லாம் இப்படி சிவந்துகிடக்கே என்றாள் அன்ன பூரணி.
லீவெல்லாம் போட முடியாதும்மா இன்னிக்கு ஒரு முக்கிய மீட்டிங்க் இருக்கு என்றவள் குளிக்க கிளம்பினாள்.
   குளித்து முடித்து டிபன் அருந்த வந்தவளிடம் மது இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை உன்னை பெண் பார்க்க வருவதா சொல்லி யிருக்காங்க அதனால..
   அவள் சொல்லி முடிக்கும் முன்னரே என்னது இதெல்லாம் யாரை கேட்டு முடிவு பண்றீங்க? என்று கோபமானாள் மது!
   ஏம்மா உனக்கு வயசாகிட்டு போவுதில்ல காலா காலத்தில கல்யாணம் பண்ணி பார்க்க வேண்டாமா? பெத்தவங்க எங்க கடமைய நாங்க செய்யறோம்! தரகர் மூலமா இந்த இடம் வந்திருக்கு ஜாதகம் பொருந்தியிருப்பதாக ஜோசியரும் சொல்லிட்டார்! உனக்கு பையன பிடிச்சா முடிச்சிடலாமுன்னு அப்பா சொன்னார்!
   அப்ப பையனுக்கு என்னை பிடிக்க வேண்டாமா? என்றாள் மது!
பையனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சாம்! என்றபடி வந்தமர்ந்தார் அவளது தந்தை!
   ஒன்றும்புரியாமல் இதென்ன புதுக்கதை என்று அதிர்ந்தாள் மதுமிதா!

                                     நிலவு வளரும்(13)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2