அவசர குடுக்கை!
ஒரு வயதான மனிதர்
தனது இருபத்தைந்து வயதான மகனுடன் ரயிலில் ஏறினார்.அனைத்து பயணிகளையும் ஏற்றிக்
கொண்டு புறப்பட்டது ரயில் அனைவரும் அவரவர் இருக்கையில் அமர ரயில் நகரத் துவங்கியது
அந்த
இளைஞன் மிகவும் உற்சாகமாக காணப்பட்டான்.மிகவும் துறுதுறுப்பாக இருந்த அவன் ஜன்னலோர
இருக்கையில் அமர்ந்திருந்தான். அவன் தனது கையை ஜன்னல் வெளியே நீட்டி மகிழ்ந்தான்.
அப்பா பாருங்கள் இந்த மரங்களெல்லாம் நம்முடன் ஓடிவருகின்றன என்று உற்சாகமாக ஒரு
குழந்தையைப் போல பேசினான்
அவனது
தந்தையும் அவனுடன் கலந்துகொண்டார். ஆம்! மரங்கள் ஒடிவருவது அழகாக உள்ளது!
இதை எதிர்ப்
புறத்தில் அமர்ந்து வந்த இருநபர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.அவர்களால் ஒரு
இருபத்தைந்து வயது இளைஞனௌம் அவன் தந்தையும் குழந்தை போல இருப்பதை நம்பமுடியவில்லை!
அப்போது
அவ்விளைஞன் குறுக்கிட்டுப் பேசினான்! அப்பா அதோ பாருங்கள் விலங்குகள் மான்
ஓடுகிறது! அதோ மேக கூட்டங்கள் வேகமாக நகர்கிறது!.அதோ பாருங்கள் குளம் என்று அவன்
மிகவும் மகிழ்வாக கூற அவனது தந்தையும் அவனது மகிழ்ச்சியில் கலந்துகொண்டு அவனை
உற்சாகப்படுத்தினார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எதிர்ப்புற தம்பதிகளால் சும்மா இருக்க
முடியவில்லை! இதென்ன இப்படி ஒரு கூத்து! என்று வியந்தார்கள் அவர்கள்!
அப்போது
திடீரென மழை பிடித்துக் கொண்டது! அந்த மழைத்துளிகள் அவ்விளைஞன் மேல் சிதற அவன்
கண்களை மூடிக் கொண்டான்! அத்துடன் மிகவும் உற்சாகமாக அப்பா மழை பொழிகிறது என்மீது
தெறிக்கிறது பாருங்கள் அப்பா ரொம்ப நன்றாக உள்ளது என்று துள்ளிக் குதித்தான்!
அவனது தந்தையும் ஆமாம் மழை பெய்கிறது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று
ஆமோதித்தார்
அந்த
எதிர்ப்புறம் அமர்ந்திருந்தோரால் சும்மா இருக்க முடியவில்லை! இதென்ன இவர்கள்
கொட்டம் ஜாஸ்தியாக இருக்கிறதே என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் பின்னர்
அவர்களில் ஒருவன் நீங்கள் ஒரு மருத்துவரிடம் உங்கள் மகனை காட்டியிருக்க வேண்டும்
என்றார்.
அந்த வயதான
மனிதன் சொன்னார் ஆம்! நீங்கள் சொல்வது சரிதான்! நாங்கள் மருத்துவமனையில்
இருந்துதான் வருகிறோம்! என் மகன் பிறவியிலிருந்து குருடாக இருந்தான் இன்றுதான்
முதல்முறையாக பார்க்கும் திறன் பெற்றான்
அவரின்
வார்த்தைகளை கேட்ட எதிர் இருக்கைக்காரர் வாயை பொத்திக் கொண்டார்!
நீதி! உண்மை தெரியாமல் தீர்வுகளுக்கு வரக்கூடாது!
நல்ல கதை. அந்த இளைஞனின் குதுகலம் படிப்பவர்களுக்கும் பற்றி கொள்கிறது.
ReplyDelete