1/11/11 -அனைத்திலும் ஒன்று-அரிதான நாள் இன்று!

தேதி, மாதம், வருடம் என அனைத்திலும் ஒன்று வருவதால் இந்தநாள் அரிதானதாக கருதப்படுகிறது. 1-11-11 என ஐந்து ஒன்றுகள் இன்றைய தினம் வந்துள்ளது. இதேபோன்ற நிகழ்வு ஏற்கனவே ஜனவரி மாதம் 1-1-11, 11-1-11 என இரண்டுமுறை இதுபோன்ற அதிசய தேதிகள் வந்துள்ளன.

நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்வு

இதேபோல் நவம்பர் 11 –ம் தேதி 11-11-11 என ஆறு ஒன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அரிதான நிகழ்வு நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு 1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி ஆறு ஒன்றுகள் வந்துள்ளன. இதனையடுத்து நூறு ஆண்டுகள் கழித்து தற்பொழுதுதான் ஆறு ஒன்று வருகிறது. இந்த ஆண்டு ஆறு கிரகணங்கள் தோன்றிய வகையிலும் இந்த ஆண்டு அரிதான ஆண்டாக கருதப்படுகிறது.

எண் கணிதம் எனப்படும் நியூமராலஜிப்படி ஒன்று என்பது முதன்மையை குறிக்கும். இன்றைய தினம் பிறந்தவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் முதன்மையானவர்களாக இருப்பார்கள் என்பது எண்கணித நிபுணர்களின் கருத்து.

நடிகை ஐஸ்வர்யா ராயும் கூட வருகிற 11ம் தேதி அதாவது 11-11-11 அன்று பிரசவிப்பார் என்ற பலமான எதிர்பார்ப்பு நிலவுகிறது, இதை வைத்து மும்பையில் பெட்டிங்கும் படு சூடாக நடந்து வருகிறது என்பது நினைவிருக்கலாம்.

எந்த எண்ணாக இருந்தால் என்ன, எதிலும் நம்பர் ஒன்னாக இருக்க முயற்சித்தால் போதும்...!

நன்றி தட்ஸ் தமிழ்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!