உலகிலேயே அசுத்தமான நாடு இந்தியா, சொல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி: உலகிலேயே இந்தியா தான் மிகவும் அசுத்தமான நாடு என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது,

இந்திய மக்களிடையே சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை குறித்த விழிப்புணர்வு இல்லை. கிராமப்புறங்களில் இன்றைக்கும் மக்கள் கழிப்பறைகள் இல்லாததால் பொது இடங்களில் அசுத்தம் செய்கின்றனர்.

இந்தியா கல்வித் துறையில் தான் வெற்றி பெற்றுள்ளது. சுகாதாரம், ஊட்டச்சத்து, சுற்றுப்புறத் தூய்மை ஆகிய துறைகளில் இந்தியா இன்னும் வெற்றி காணவில்லை. ஏனென்றால் நம் நாடு தான் மிகவும் அசுத்தமானது.

சுற்றுப்புறத் தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. பொது இடங்களில் இயற்கை உபாதைகள் கழிப்பவர்களில் உலகிலேயே இந்தியாவில் தான் 60 சதவீதம் பேர் உள்ளனர்.

கிராமப்புறங்களுக்கு சென்றால் அங்குள்ள பெண்களிடம் செல்போன் இருக்கிறது. ஆனால் கழிப்பறை இல்லை. அப்படியே கழிப்பறை இருந்தாலும் அதை பயன்படுத்துவதில்லை என்றார்.

நன்றி தட்ஸ் தமிழ்

டிஸ்கி} நீங்க கோடி கோடியா சம்பாதிச்ச பணத்தை இந்தியாவை அழகு படுத்த உபயோக படுத்துங்களேன்! இந்தியா அசிங்கமா இருக்குன்னு கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம சொல்லற உங்களை எல்லாம் அமைச்சராக்கி அழகு படுத்தி இருக்கோம் பாருங்க! எங்களை சொல்லணும்! இந்தியா எப்படி போனா என்ன? உங்க கல்லா நிறைஞ்சா போதும்னுதானே நீங்கள்ளாம் அமைச்சர் ஆகி இருக்கீங்க?

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2