சில்லறைத் தனமான முடிவு!


சில்லறைத் தனமான முடிவு!

சில்லறை வர்த்தகத்தில் 51% அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு சில்லறைத் தனமானது. ஏற்கனவேபுதிய பொருளாதாரக் கொள்கை என்ற போர்வையில் நாட்டில் சுதேச தொழில்களை முடக்கி போட்ட இதே காங்கிரஸ் அரசு இன்று சில்லறை வியாபாரிகளின் தலையிலும் கை வைத்துள்ளது.
   இந்த முடிவால் பணவீக்கம் குறையுமாம் இப்படிச் சொல்லி தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறது காங்கிரஸ். பணவீக்கத்தை குறைக்க இந்த முடிவுதானா கிடைத்தது. காலில் தேள் கொட்டினால் துடையிலா நெறிகட்டிக்கொள்ளும்? இப்படி ஒரு முடிவை எடுத்து மீண்டும் இந்திய பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ள வேண்டிய அவசியம் என்ன? நாட்டில் இந்த சில்லறை வியாபாரிகள் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களின் வாழ்வு என்னாவது? இதையெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டாமா? மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டாமா? எதுவுமே இல்லாமல் திடீரென சில்லறை வியாபாரிகளின் வயிற்றில் அடித்துள்ளது மத்திய அரசு!.
   அன்று அன்னியமுதலீட்டை அதிகப்படுத்துகிறேன் என்று சொல்லி நாட்டில் கோககோலா, பெப்சியை அணுமதித்ததன் விளைவாக உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள் அடியோடு அழிந்து போயின. ஒன்றரை ரூபாய் தயாரிப்புக்கு இன்று 11ரூபாய்க்கு மேல் விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இந்தியப் பொருளாதாரம் எப்படி உயர்ந்து விட்டது?
   ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களும் சில்லறை வியாபாரத்தில் காய்கறி போன்றவை விற்றன. ஆனால் அது மக்கள் மத்தியில் வறவேற்பை பெறவில்லையே? மக்களுக்கு நன்மை செய்யவே அரசுக்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் ஆனால் அரசுக்களோ அவர்களின் தலையிலேயே கைவைக்க ஆரம்பித்துவிடுகின்றன. நல்ல வேளையாக இந்த சில்லறைத்தனமான முடிவுக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
    ஆனால் அவரை நம்ப முடியாது பெட்ரோல் விலை உயர்வில் இரட்டை நாடகம் போட்டவர் அவர். முதலில் விலை ஏற்றத்தை எதிர்த்தவர் தன் மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டு இனிமேல் விலை ஏற்றக் கூடாது என்று கூலாக கூறியவர் அவர். எனவே இந்த பிரச்சனையையும் அரசியல் ஆதாயத்திற்காக முயற்சி செய்யலாம்.
     தமிழக முதல்வரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார் அதற்கு காரணம் மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காத மத்திய அரசின் ஆணவம் என்று வேறு சொல்கிறார். இவருடைய ஆணவப் போக்கை நாடே அறியும். ஒரே சமயத்தில் விலைகளை உயர்த்தி தமிழக மக்களை தவிக்க வைத்தவர் தானே இவரும்!
   மொத்தத்தில் இந்த சில்லறை வியாபாரிகளின் நிலை கவலைக்குறியதாக மாறிவிட்டது. கிராமங்களில் இனி குடிசைத் தொழிலகங்களையோ கடைகளில் உள்நாட்டு பொருள்களையோ காணமுடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது.
  நாட்டில் மொத்தம் 4கோடி பேர் இந்த சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் பெருமளவு நபர்கள் மெத்தப் படித்தவர்கள் அல்ல! குடும்பத்தொழிலாக செய்து வருபவர்கள்  இவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி விட்டது மத்திய அரசு.
  மஞ்சள் பொடி கடுகு மிளகாய் கூட இனி அடைத்தபாக்கெட்களில் அன்னிய தேசத் தயாரிப்பாக விற்கபடக்கூடிய நிலையை அரசு உருவாக்கிவிட்டது.நம் நாட்டுப் பொருட்களுக்கு அன்னியர்களுக்கு பணம் தரவேண்டிய அவலநிலையை அரசு உருவாக்கிவிட்டது.
   சிறுவியாபாரிகள் தம் கடைகளை இழந்து பிழைக்க வழியின்றி தவிக்கும் இந்த முடிவு தேவைதானா? அரசு சற்றே சிந்திக்க வேண்டும்!
 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2