யார் ஜெயிப்பார்கள்? கதம்ப சோறு பகுதி 33
கதம்ப சோறு பகுதி 33 யார் ஜெயிப்பார்கள்? தமிழகத்தில் கடந்தவாரம் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஒரு சில அசம்பாவிதங்கள் தவிர நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது. அதுவும் இல்லாமல் அதிகம் பேர் வாக்களித்தனர். இளைய தலைமுறையினர் பலர் ஆர்வமுடன் வாக்களித்துள்ளனர். மலேசியாவில் இருந்து வாக்களிக்க ஒரு நண்பர் வந்து வாக்களித்துள்ளார். வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது. ஆனாலும் சென்னையில் வழக்கம் போல வாக்குப்பதிவு சதவீதம் மிக குறைவு. அதுவும் தென் சென்னையில் மிகக் குறைவு. நிறைய படித்தவர்கள் நிறைந்த இந்த நகரத்தில் வாக்களிக்க இவர்கள் விரும்பாததன் காரணம் புரியவில்லை! ஆனால் சென்னை போன்ற நகரங்களில் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்பட்டியலில் பெயர் விடுபட்டு தவறான முகவரி அச்சிடப்பட்டு என்று பல்வேறு குழப்பங்கள் வேறு. இப்படி சில குழப்பங்கள் இருப்பினும் இத்தனை தேர்தல்களைவிட இந்த முறை தேர்தல் ஆணையம் சிறப்பாகத்தான் செயல்பட்டுள்ளது. ஆனால் ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடாவை ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை! வாக்களிப்புக்கு முந்திய நாள் இரவு ஓட்டுக்கு இருநூறு வீதம் ஆளுங்கட்சி அளித்ததாக பல்வேறு ஊர்கள