அரசியல்ல வளைஞ்சே முன்னுக்கு வந்தவரு! ஜோக்ஸ்!
ஜோக்ஸ்!
1.
தலைவர் கூட்டணிக் கதவை
திறந்தே வச்சிருக்கேன்னு சொன்னது தப்பாயிடுச்சா ஏன்?
இருந்த ஒண்ணு ரெண்டு கட்சிகளும் வெளியேறிப்
போயிட்டாங்க!
2.
அந்த டாக்டர்
அநியாயத்துக்கும் நல்லவரா எப்படி சொல்றீங்க?
‘போலி’யோ மருந்து கொடுக்க மாட்டார்னா பார்த்துக்கங்களேன்!
3.
என்னது தளபதியார் எதிரி
மன்னனோடு சேர்ந்துவிட்டாரா?
ஆம் மன்னா! எதிரி மன்னன் நோவாமல் இன்னோவா தந்து
இழுத்துவிட்டான்!
4.
குற்றம் சாட்டப்பட்ட நீ
ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா?
இன்னும் ஓல்ட் செட்டிலேயே எத்தனை நாளுக்கு உக்காந்து தீர்ப்பு
தருவீங்க எசமான்? சூப்பர் சிங்கர் காரங்க அடிக்கடி செட்டை மாத்தறாப்பல நீங்களும்
மாறுங்க எசமான்!
5.
அந்த டாக்டரால உங்க
ஸ்டேட்டஸ் பாதிச்சுடுச்சா எப்படி சொல்றீங்க?
அவர்தான் நிறைய நேரம் கம்ப்யூட்டர் முன்னாடி உக்காரக்கூடாதுன்னு
சொல்லிட்டாரே! அதனால பேஸ்புக்குல நிறைய ஸ்டேட்டஸ் போட முடியலை!
6.
அவரு அரசியல்ல வளைஞ்சே
முன்னுக்கு வந்தவரு!
சுருக்கமா அம்மா கட்சி ஆளுன்னு சொல்லுங்க!
7.
அவசரத்துல நோ
பார்க்கிங்க்ல வண்டிய நிறுத்திட்டேன். கான்ஸ்டபிள் பிடிச்சிட்டாரு!
அப்புறம்?
பார்க்கிங் சார்ஜ் வாங்கிட்டு வண்டியை விட்டுட்டாரு!
8.
அந்த டாக்டர் போலின்னு
எப்படி சொல்றே?
இவ்விடம் மன முறிவுக்கு கட்டுப்போடப்படும்னு போர்டு
வைச்சிருக்காரே!
9.
உன் மனைவி நகைக்கடைக்கு
போனால் ஏறி ஏறிக் குறையும்னு சொல்றியே நகை விலையா?
என்னோட பிரஷர் ஏறும் பேங்க் பேலன்ஸ் குறையும்னு சொல்ல வந்தேன்!
10. பையன் அரசியல்வாதியா வருவான்னு எப்படி சொல்றீங்க?
பரிட்சையில பாஸாகிறது அஞ்சு பேரோட கூட்டணி அமைச்சிருக்கானாமே!
11. தலைவர் ஓய்வு எடுக்கனும்னு முடிவு எடுத்துட்டாரா எப்படி சொல்ற?
பிரதமர் பதவிக்கு போட்டியிடறாரே!
12. உன் மனைவி புடவை எடுக்க கடைக்கு போனதும் கடைக்காரன் மயக்கம்
போட்டு விழுந்துட்டானா ஏன்?
வழக்கமா நூறு புடவையை கலைச்சு ஒரு புடவை செலக்ட் பண்றவ
அன்னிக்கு பார்த்த முதல் புடவையையே ஓக்கே பண்ண ஆனந்த அதிர்ச்சியிலதான்!
13. நம்ம தலைவர் சாமர்த்தியமா பேசுறாருப்பா!
அப்படி என்ன பேசினாரு?
ஏழைமக்களின் மின் கட்டண சுமையை குறைக்கவே நாங்கள் அடிக்கடி மின்
தடை பண்றோம்னுதான்!
14. புலவர் பாடியதும் மன்னர் அப்படியே ஆழ்ந்துவிட்டார்!
என்னது பாடலிலா?
இல்லை உறக்கத்தில்!
15. தலைவர் பிரிவினை வாதத்தை எதிர்த்து பேச வீட்டுக்கு கிளம்பறாரா
ஏன்?
வீட்டுக்குள்ளேயே அவங்க மகனுங்க சொத்தை பிரிச்சி
கேக்கறாங்களாம்!
16. அந்த சாமியாரை ஏன் போலிஸ் தள்ளிக்கிட்டு போவுது!
அந்த சாமியாரோட ஆசிரமத்துக்கு போன பெண்களுக்கு நாலு தள்ளிப்
போயிருச்சாம்!
17. என்னப்பா இட்லி கேட்டா
எத்தனை முழம்னு கேக்கற?
நீங்கதானே சார் மல்லிபூ மாதிரி இட்லி கேட்டீங்க!
18. ஊர் ஊரா சுத்தி உன் பையனுக்கு ஒரு பெண்ணை கட்டி வச்சியே எப்படி
இருக்கான்?
அந்த பொண்ணையே சுத்தி சுத்தி வரான்!
19. தலைவர் நம்ம கட்சி மானத்தை வாங்கிட்டார்?
எப்படிச் சொல்றே?
கூட்டணிக்கு கட்சிகள் தேவைன்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்து
இருக்காரே!
20. மன்னா! எதிரி நாட்டு மன்னன் கோட்டை வாசலை முற்றுகை இடுகிறான்!
சேடிப்பெண்களை ஆடிப்பாட சொல்லி முற்றுகையை தளர்த்திவிட
வேண்டியதானே அமைச்சரே!
21. தலைவரோட பிரச்சார கூட்டத்தில என்ன கலாட்டா?
மட்டன் பிரியாணி போடறேன்னு கூட்டி வந்து சிக்கன் பிரியாணி போட்டு செலவை சிக்கன படுத்தினதால தொண்டர்கள் கொதிச்சுப் போயிட்டாங்களாம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட்
செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
எல்லாமே அருமை.
ReplyDeleteஅருமை நண்பரே அருமை
ReplyDeleteஆஆஆ ஹா எவ்ளோ ஜோக்ஸ் ..எல்லாமே சூப்பர்
ReplyDeleteஹா... ஹா... கலக்கல்ஸ்...!
ReplyDeleteஎல்லாமே அருமை.
ReplyDelete"//உன் மனைவி புடவை எடுக்க கடைக்கு போனதும் கடைக்காரன் மயக்கம் போட்டு விழுந்துட்டானா ஏன்?
ReplyDeleteவழக்கமா நூறு புடவையை கலைச்சு ஒரு புடவை செலக்ட் பண்றவ அன்னிக்கு பார்த்த முதல் புடவையையே ஓக்கே பண்ண ஆனந்த அதிர்ச்சியிலதான்!//"
அந்த புடவை அவுங்க மாமியாருக்காம்!!!!!!!!!!!!!!!!!!!!!
அனைத்துமே அருமை சுரேஷ்....
ReplyDeleteஇவ்வளவு ஜோக்ஸ், அத்தனையும் யோசிச்சு சொந்தமா எழுதியிருக்கீங்க......... சூப்பர்!!
ReplyDelete