புகைப்பட ஹைக்கூ 73

புகைப்பட ஹைக்கூ 73


வெடித்து
கூடியது வானம்!
மின்னல்!

வெளிச்சக் கீற்றுக்கள்
விதைத்தது மழை!
மின்னல்!

உடைத்து பார்த்ததும்
ஒளிவிட்டது
மின்னல்!

வேர்விட்டது வானம்
விரவி வந்தது மழை!
மின்னல்!

வான்மகளை தழுவ
வானத்தில் மேகமோதல்!
மின்னல்!

கீறல் விழுந்த வானம்
தூறலாய் மழை!
மின்னல்!

வேர்பிடித்தும்
கொடிபிடிக்கவில்லை
மின்னல்!

வெளிச்சச் சிதறல்கள்
ஒளிந்துகொண்டன
மின்னல்!

மேக இருளை
மோகித்தது
மின்னல்!

கண்ணொளி பறித்தது
மின்னொளி
மின்னல்!

வெள்ளம் பாய்ந்தது
விபத்து இல்லை!
மின்னல்!

மின் வெட்டில்
ஒளிர்ந்தது
மின்னல்!

கிளைவிட்டது
இலைவிடவில்லை!
மின்னல்!

வெளிச்சக் கீற்றை
விழுங்கியது வானம்!
மின்னல்!

மேகம் பிரசவித்த
மோகினி
மின்னல்!

ஒளிவெள்ளம்
ஒளிந்து விளையாடியது!
மின்னல்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. // வான்மகளை தழுவ
  வானத்தில் மேகமோதல்!
  மின்னல்!//

  அருமை

  ReplyDelete
 2. மின்னல் மட்டுமே பொருளாய்க் கொண்டு இத்தனை ஹைக்கூ..... அத்தனையும் அருமை. ரசித்தேன்.

  ReplyDelete
 3. அனைத்தும் அருமை அருமை
  ரசிதேன் நண்பரே

  ReplyDelete

 4. வணக்கம்!

  மின்னலை எண்ணியே மீட்டிய சொல்லெல்லாம்
  கன்னலை ஊட்டும் கமழ்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 5. //வேர்பிடித்தும்
  கொடிபிடிக்கவில்லை
  மின்னல்!//

  சூப்பர்...

  ReplyDelete
 6. மின்னலுக்கு இத்தனை ஹைக்கூக்களா!!! அத்தனையும் அ;ருமை நண்பரே!

  ReplyDelete
 7. ஒவ்வொரு வரிகளும் அருமை. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. எத்தனை மின்னல் அத்தனையும் அருமை ! வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2