மாறுவேடம்! தினமலர் பெண்கள் மலரில் வெளியான ஒருபக்க கதை
மாறுவேடம். நத்தம்.எஸ். சுரேஷ்பாபு "என்னங்க இன்னிக்கு ஸ்கூல்ல நடக்கிற மாறுவேடப் போட்டியிலே நம்ம குழந்தைஙக கலந்துக்கிறாங்க சாயந்திரம் ஸ்கூலாண்ட வந்திறங்க!" லட்சுமி சொல்லவும் கோபமாய் கத்தினார் அரசியல்வாதி ஆறுமுகம். " ஏண்டி எனக்கு அதெல்லாம் ஏதுடி நேரம். கட்சி பொதுக்கூட்டம் இருக்கு என்னால வர முடியாது. " "எப்பப் பாரு கட்சி பொதுக்கூட்டம்னு திரிஞ்சிக்கிட்டிருந்தா புள்ளைங்க ஏங்கிப் போயிருதுல்ல ஸ்கூல்ல கூட கேட்டாங்க எப்பவும் நீங்களே வர்றீஙகளே அப்பா வரமாட்டாரான்னு!" "அவனுங்க ஆயிரம் கேப்பானுங்க சொளையா 50 ஆயிரம் வாங்கிட்டுத்தானே அட்மிசன் கொடுத்தாங்க சும்மாவா கொடுத்தாங்க?" " இருக்கட்டுமே.. நம்ம குழ்ந்தைங்களுக்காக ஒருநாள் கட்சி கூட்டத்தை விட்டுட்டு வாங்களேன்!" " சரி முயற்சி பண்றேன் "என்றவன் கட்சி ஆபிஸுக்குச் சென்றான். " வாய்யா ஆறுமுகம்! இன்னிக்கு நம்மக் கூட்டத்திலே உன் பேச்சுல பொறி பறக்கணும். அந்த மதவாதக் கட்சியை எதிர்த்து கடவுள் மறுப்பை ஆழமாப் பேசனும் என்றார் தலைவர். மாலைக் கூட்டத்தில் அனல் தெறிக்க கடவுளைத் திட்டி நாத்திகம் பேசிவி...