Posts

Showing posts with the label ஒருபக்க கதை

வரன் ஒரு பக்க கதை

Image
  வரன்..ஒருபக்க கதை. நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. என்னங்க வயசுக் கூடிக்கிட்டே போவுது இன்னும் இப்படியே உக்காந்துகிட்டிருந்தா எப்படி சட்டு புட்டுன்னு ஒரு வரனை பேசி முடிச்சாத்தானே.. நான் என்ன சும்மா இருக்கிறேன்னு நினைச்சியா இதுவரைக்கும் தரகர்களுக்கு மட்டுமே முப்பதாயிரம் கொடுத்திருக்கேன். மேட்ரிமோனியல் தனிக் கணக்கு. ஒரு வரனாவது குதிர்ந்தாதானே.. பேசாம நம்ம ஜோஸ்யர்கிட்டே போய் ஏதாவது பரிகாரம் கேட்போமா? ஏண்டி தெரியாமத்தான் கேக்கிறியா இதுவரைக்கும் மாசத்துக்கு ஒர் பரிகாரம்னு நாட்டுல் இருக்க எல்லாக் கோயிலும் சுத்தி வந்தாச்சு அப்ப என்னதாஙக பண்றது? ஒண்ணும் பண்ண முடியாது. படிக்கிற காலத்திலே ஒழுஙகா படிச்சு நல்ல வேலைக்குப் போயிருந்தா இந்த கஷ்டம் இருந்திருக்காது... அதெல்லாம் சும்மாங்க..ஃபாரின்ல வேலைப்பார்க்கிற பசஙகளுக்கு கூட வரன் அமைய மாட்டேங்குது.. ஒத்தபைசா வரதட்சணை வேணாம்கிறோம். போதுமான சம்பாத்தியம் சொந்த வீடெல்லாம் இருந்தும் நம்ம பையனுக்கு வரன் அமைய மாட்டேங்குதே இது கலிகாலம் தான் அங்கலாய்த்துக் கொண்டனர் அந்த தம்பதிகள்.

வேலை! ஒருபக்க கதை

  வேலை !                            . நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. “ களை   பிடுங்க   கூப்பிட்டா   ஒருத் தரும்   வரமாட்டேங்கறீங்களே !  அப் படி   எங்கதான்   போறீங்க ?  நாளை   பி ன்னைக்கி   ஒரு   கஷ்டம்னா   நம்ம   கி ட்டேதான்   வந்து   நீப்பீங்க ?  பண் ணையார்   தனுஷ்கோடி   கத்த .. ” அதெல்லாம்   அந்த   காலங்க   ஐயா !  அரை   நாளு   சேத்துலே   இறங்கி   களை   பிடு ங்கினா   கூலி   அம்பது   ரூபாயை   தாண் ட   மாட்டேங்குது ..!  சேத்து   புண் ணு   வேற   வந்துசேருது !   வெயில்   வே ற   கொளுத்தும் !  ஒரு   நிமிஷம்   ஓய் வெடுக்க   முடியாது !  இப்ப   இதுக்கெ ல்லாம்   யாரும்   வரமாட்டாங்க !  எல் லோரும்   நூறு   நாள்   வேல...

குழந்தை மனசு! ஒருபக்க கதை!

Image
  குழந்தை மனசு! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. நகரின் பிரபலமான அந்த ஐஸ்க்ரீம் பார்லரின் மகள் யாழினியுடன்அமர்ந்திருந்தேன். யாழினி கேட்ட கேசர் குல்ஃபியை ஆர்டர் செய்தேன். சர்வர் குல்பி ஸ்டிக்கை எடுத்துவர வாசலில் நிழலாடியது. அழுக்கேறிய ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள். அவள் கண்கள் அங்கு ஒட்டப்பட்டிருந்த விதவிதமான ஐஸ்க்ரீம் படங்களை பார்த்துக் கொண்டிருக்க பார்லர் உரிமையாளன் கத்தினான். “ஏய்! என்ன பார்க்கிறே? கிளம்பு! கிளம்பு!” நிற்காதே இங்கே!” என்றான் “பிச்சைக்கார பசங்க! வந்துடறாங்க!” பிச்சையெல்லாம் கிடையாது போ போ! விரட்டினான். அவள் பரிதாபமாக கண்களில் நீர்தளும்ப வெளியேற முயல, ஹேய்! ஹரிணி! டிஸ்கைஸ் காண்டெஸ்ட்ல கலந்துட்டு அப்படியே வந்துட்டியா? வாட் எ சர்ப்ரைஸ்! என்று ஓடிச்சென்று அவள் கையைப்பிடித்து இழுத்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்ட என் மகள், என்ன சாப்பிடறே? என்றாள். அவள் கேட்ட ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுக்கச் சொன்ன என் மகள், பை ஹரிணி! சாப்பிட்டுட்டு பத்திரமா போய் வா! என்று கையசைத்துவிட்டு வெளியே வந்தாள். “யாரும்மா அது? உன் ப்ரெண்டா! நான் பார்த்ததே இல்லை! எனக்கும் தெரியாதுப்பா! ப...

நெத்தியடி! ஒரு பக்கக் கதை.

  நெத்தியடி! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. டாஸ்மாக்கிலிருந்து ஃபுல்லாக குடித்துவிட்டு தள்ளாடியபடி வீட்டுக்குள் நுழைந்த கதிரேசன் கண்களில் அவனது மகன் நரேஷ் தென்பட்டான். கை நிறைய சாக்லேட்களுடன் ஒன்றை உரித்து வாயில் போட்டு சுவைத்தபடி இருந்த நரேஷைப் பார்த்ததும் கதிரேசனுக்கு கோபம் கோபமாக வந்தது. “டேய் நரேஷ்! இங்க வாடா! உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?” சாக்லேட்ஸ் அதிகம் சாப்பிடக் கூடாதுன்னு? கை நிறைய சாக்லேட் வச்சிட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்கே?” கொஞ்சம் பம்மியபடி வந்த நரேஷ், ”அப்பா! சாக்லேட்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்பா!” என்றான். ”ஆனா சாக்லேட்ஸ் நிறைய சாப்பிட்டா உடம்புக்கு நல்லது இல்லை! பல் சொத்தையாகும், கறைபிடிக்கும்!” ”அப்ப சாக்லேட்ஸ் சாப்பிடக் கூடாதாப்பா?” ”உடம்புக்கு கெடுதின்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்? நீ சொன்ன பேச்சைக் கேட்க மாட்டியா?” ”அப்ப நம்ம உடம்புக்கு கெடுதி பண்ற எதையும் நாம சாப்பிடக் கூடாது சரியாப்பா?” “வெரிகுட் டா! கண்ணா! அப்பா சொன்னதை சரியாப் புரிஞ்சுகிட்டு இருக்கிறே? இனிமே சாக்லேட் சாப்பிடறதை விட்டுடு!” ”சரிப்பா! நான...

உறுதி! ஒருபக்க கதை

  உறுதி !                                                                     நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு நாற்பது நாட்களாய் குடிக்காமல் இருந்த உறுதி காணாமல் போயிருந்தது . நான் திருந்திட்டேன் காமாட்சி ! இனிமே டாஸ்மாக் பக்கம் தலைக்கூட வைச்சி படுக்கமாட்டேன் ! இப்போத்தான் சந்தோஷமா இருக்கேன் ! தெம்பா இருக்கேன் ! இனிமே நம்ம குடும்பம் நல்லா இருக்கப்போவுது ! என்று சொல்லிக்கொண்டிருந்த மனோகரனின் திடம் காணாமல் போயிருந்தது .   இதோ நாளைக்கு கடை திறக்கப் போகிறார்கள் . கடை முன் நிறைய க்யு நிற்கும் . விடியற்காலையிலே முதல் ஆளாய் போய் கடைவாசலில் நிற்க வேண்டும் . கை பரபரத்தது . கால்கள் நடுங்கின . மூளை முழுதும் குடி நிறைந்திருந்தது . ...

எதிர்வினை! ஒரு பக்க கதை. (குமுதம் வார இதழில் வெளியானது)

Image
 எதிர் வினை      ஒருபக்க கதை!   .      “ என்னங்க! நான் எங்க அம்மாவீட்டுக்கு போய் ஒருவாரம் இருந்துட்டு வரட்டுமா? போய் ஆறுமாசம் ஆகுது!” தேவி கேட்கவும்   ”ஒருவாரமா? அதெல்லாம் வேண்டாம்! போனமா வந்தமான்னு காலையிலே போயிட்டு சாயந்திரம் கிளம்பிடலாம்! நானும் வரேன்!” என்றான் நந்தன்.   ”ஏங்க பொண்ணுங்களுக்கு எவ்வளவு வயசானாலும் தாய்வீடுங்கிறது சொர்கம் மாதிரிங்க!நீங்க ஏன் அனுப்பவே மாட்டேங்கீறீங்க? அனுப்பினாலும் உடனே வந்துடனும்னு சொல்றீங்களே? உங்க அக்கா தங்கச்சியெல்லாம் இங்கே வந்து தங்கிட்டு போகலையா?”     “அதனாலேதான் வேணாம்கிறேன்!”  “என்னங்க சொல்றீங்க?”  எங்க அக்கா தங்கச்சி வந்தா நீ என்ன சொல்றே?  வந்துட்டாளுங்க! குடும்பத்து சொத்தை அள்ளி எடுத்துட்டு போக! கல்யாணம் கட்டிகிட்டு போகும்போதே எடுத்துகிட்டு போனது பத்தலைன்னு அப்பப்ப வந்து மூட்டைக்கட்டிகிட்டு போறாங்க!” புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் கோள்மூட்டி சண்டை மூட்டி விடறாளுங்க!” இப்படியெல்லாம் நீ புலம்பறே இல்லை?”     ”ஆமாம்! அதிலென்ன தப்பு?”   “தப்...