உறுதி! ஒருபக்க கதை
உறுதி!
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
நாற்பது
நாட்களாய் குடிக்காமல் இருந்த உறுதி காணாமல் போயிருந்தது.நான் திருந்திட்டேன் காமாட்சி! இனிமே டாஸ்மாக்
பக்கம் தலைக்கூட வைச்சி படுக்கமாட்டேன்! இப்போத்தான் சந்தோஷமா இருக்கேன்! தெம்பா இருக்கேன்! இனிமே நம்ம குடும்பம் நல்லா இருக்கப்போவுது! என்று சொல்லிக்கொண்டிருந்த மனோகரனின் திடம் காணாமல் போயிருந்தது.
இதோ நாளைக்கு கடை திறக்கப் போகிறார்கள். கடை முன் நிறைய க்யு நிற்கும். விடியற்காலையிலே முதல் ஆளாய்
போய் கடைவாசலில் நிற்க வேண்டும். கை பரபரத்தது.கால்கள் நடுங்கின. மூளை முழுதும்
குடி நிறைந்திருந்தது.
‘என்னங்க? ஒரே பரபரப்பா
இருக்கீங்க?” காமாட்சி கேட்க மென்று விழுங்கினான். “ஒண்ணுமில்லே காமாட்சி!” நீ போ! என்றான். அப்போது அவன் மகள் மாலதி அருகே வந்தாள்.
“அப்பா! ஒண்ணு சொல்லட்டுமா?” “சொல்லும்மா!”
”ஒரு
பொருள் கிடைக்காத போது அதை வாங்கி அனுபவிக்காம இருக்கிறதுக்கு பேர் உறுதி இல்லை! அதுக்குப்பேரு வாய்ப்பின்மை! ஒரு பொருள் நமக்கு கிட்டவே இருந்தாலும் அது நமக்குவேண்டாம் தீமை தரும்னு விலகியிருக்கிறதுக்கு பேர்தான் உறுதி.”
”இவ்வளவு
நாள் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலை! இப்போ வாய்ப்பு
கிடைச்சிருக்கு! இப்ப நீங்க மதுவைத் தொடாம உறுதியா இருப்பீங்கன்னு நம்பறேன்!
நீங்க
உறுதியை இழந்தா உறுதி இழக்கப் போறது உங்க குடும்பம்தான்! இதை நல்லா புரிஞ்சிகிட்டா நீங்க நாளைக்கு உறுதி இழக்க மாட்டீங்க!” என்றாள்.
மகள்
சொல்ல சொல்ல புத்தியில் ஏதோ உரைக்க இனி குடிப்பது இல்லை என்று உறுதி எடுத்தான் மனோகரன்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நல்ல உறுதி.
ReplyDelete