சிரிச்சுக்கிட்டே இருங்க! பகுதி 3

 

சிரிச்சுக்கிட்டே இருங்க! பகுதி 3

 


1.   அவர் தக்காளி வியாபாரின்னு எப்படி சொல்றே?

  ரூபாய் நோட்டுக்களை ஃப்ரிசரில் வெச்சிருக்காரே!

 

2.    நாம மீண்டும் ஆட்சியை புடிச்சா மக்கள் நினைவிலே நிலைத்திருக்கிற மாதிரி எதையாவது செய்யனும்யா!

  500 ரூபா 200 ரூபா நோட்டெல்லாம் செல்லாதுன்னு திரும்பவும் செல்லாதுன்னு அறிவிச்சிடலாமா தலைவரே!

 


3.   மெகாசீரியல் டைரக்டரை கட்சியிலே சேர்த்த்து தப்பாப் போயிருச்சா ஏன்?

  மீட்டிங்லே எதிர்கட்சியோட கதை முடிஞ்சிருச்சுன்னு பேசச்சொன்னா  எத்தனை எபிசோட்லன்னு கேக்கறாரே!

 

4.    தலைவர்கிட்டே எதைக்கேட்டாலும்  எனக்குத் தெரியாது! நினைவில் இல்லை!  ஆதாரமில்லைன்னு சொல்லிக்கிட்டிருக்காரே! ஏன்?

   ஒண்ணுமில்லே  ஈ.டி ரெய்டுலே இருந்து இன்னும் அவர் மீண்டு வரலை அதான்!

 


5.    தலைவர் எல்லாவேலையையும் தானே இழுத்துப்போட்டுக்கிட்டு செய்வாரு!

   ம்ம்.. அதுக்காக மகளிர் அணித்தலைவியை  கையைப்பிடிச்சு இழுத்துவிட்டு  பேசச்சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர் !

 

6.    புலவரே ஏன் இப்படி எகிறி குதிக்கிறீர்?

   மன்னர் கொடுத்த செக் “பவுன்ஸ்” ஆகிவிட்டது மந்திரியாரே!

 


7.    பக்கத்து வீட்டுக்காரங்க “அடகு கடை” தான் வெச்சிருக்காங்கன்னு எப்படி சொல்றே?

  அவசரத்துக்கு ஒரு டம்ளர் சீனி கைமாத்தா கேட்டா டம்ளரை அடமானமா கேக்கறாங்களே!

 

8.   வேட்டைக்குப் போக வேண்டாம் என்றால் கேட்டீர்களா மன்னா?

     ஏன் என்ன ஆயிற்று மந்திரியாரே!

    எதிரி கோட்டை புகுந்து விட்டான் மன்னா!

 


9.     ஹீரோவோட புதுப்படம் ரீலீஸ் ஆகியிருக்கே  எப்படி இருக்கு!

     ஆடியன்ஸ் எல்லோரும்  “வீட்டுச்சிறை”யிலேயே இருக்கிறதா முடிவெடுத்துட்டாங்களாம்!

 

10. பாதயாத்திரை போக தலைவர் முடிவெடுத்துட்டாருன்னு எப்படி சொல்றே?

சொகுசு பஸ் எல்லாம் வாங்கி ரெடி பண்ணிட்டிருக்காரே!

 

11.  கல்யாண வீட்டுக்காரங்க புதுசா யோசிச்சிருக்காங்கன்னு எப்படி சொல்றே?

   தாம்பூல பையில தேங்காய்க்குப் பதிலா தக்காளி போட்டு கொடுத்து இருக்காங்களே!

 


12. அந்த அரசியல் வாதி “கல்நெஞ்சக் காரர்னு எப்படி சொல்றே?

      பொதுக்கூட்டத்துலே பேசும்போது  பாக்கெட் நிறைய கூழாங்கல்”  போட்டு வைச்சிக்கிட்டிருக்காரே!

 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை கமெண்ட் செய்து விட்டு போகலாமே! நன்றி!

 

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2