தளிர் ஹைக்கூ கவிதைகள்!

 

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

 


கும்மிருட்டு

காவலுக்கு நிற்கிறது

அய்யனார் சிலை!

 

வெடிச்சத்தம்

பீதியில் தெருநாய்கள்!

கோயில் திருவிழா

 


வேண்டுதலுக்காக

உயிரைக்கொடுத்தது

பலி ஆடு!

 

சூடான தேநீர்

குளிர்வித்தது

யாசகனின் பசித்தீயை!

 


வேகமாய் பயணிக்கிறது

காலத்தோடு

சாலையில் வாகனங்கள்!

 

கோயில் மணியோசை

எழுப்பி விடுகிறது

காகத்தின் பசியை!

 

துளைத்து எடுத்தது

ரசித்துக்கொண்டிருந்தான்

காதலியின் பார்வை!

 

கோயில் முழுக்க பக்தர்கள்!

காலியாக இருக்கிறது

பிரசாத கூடை!

 

பனிவிழும் இரவு

குளிரில் நனைகிறது

விரையும் வண்டிகள்!

 


திரை போட்டதும்

கலைத்தது காற்று!

வான்மேகம்!

 

ஒளித்து வைத்தது

வெப்பத்தை

மரத்தின் நிழல்!

 

 கால்நடைகளின் பசி

 தீர்ந்ததும் காய்ந்த்து

 மேய்ச்சல் நிலம்!

 

  நீண்ட வரிசை

  தீரவில்லை பசி

  அன்னதானக்கூடம்!

 

  உடைந்து போனது

  குழந்தையின் மகிழ்ச்சி!

வெடித்தது பலூன்!

 


புல்லாங்குழல் விற்பவன்

விட்டுச்செல்கிறான்

ஓசையை!

 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

 

 

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2