சிரிச்சுக்கிட்டே இருங்க!பகுதி 4
சிரிச்சுக்கிட்டே
இருங்க!பகுதி 4
1.
தலைவர்
ரொம்பவும் உஷார் பேர்வழின்னு எப்படி சொல்றீங்க?
பள்ளிக்கூடத்துலே கொடியேத்தும்போது அடுத்த வருஷமும்
நான் தான் கொடியேத்துவேன்!னு சொல்லி மறைமுகமா பர்மிஷன் வாங்கிட்டாரே!
2.
மேடையிலே
பேசிக்கிட்டிருக்கும்போதே தலைவர் உணர்ச்சிவசப்பட்டு அழுதுட்டாராமே..!
இல்லையா பின்னே இத்தனை கூட்டமும் இன்னும் நம்ம பேச்சை
நம்பிகிட்டிருக்கேன்ற ஆனந்த கண்ணீர்தான் அது!
3.
தலைவர்
மீட்டீங்கிற்கு பெண்கள் கூட்டம் அள்ளுதே!
கூட்டத்துக்கு வர்ற பெண்மணிகளுக்கெல்லாம் இரண்டு
கிலோ தக்காளி கொடுக்கிறதா சொல்லி கூட்டி வந்திருக்காங்களாம்!
4.
எதிரி
நாட்டு மன்னன் தண்ணீரை திறந்துவிட மறுத்துவிட்டான் மன்னா! போருக்குப் புறப்படலாமா?
ராணியின்
கண்களில் கண்ணீரைப் பார்ப்பதற்கு உங்களுக்கு ஏன் அவசரம் மந்திரியாரே!
5.
அந்த
டாக்டர் ட்ரெண்டியா வைத்தியம் பார்க்கிறாரா எப்படி?
நர்ஸா ஏஐ கேர்ளை அப்பாயிண்ட் மெண்ட் பண்ணி வைச்சிருக்காரே!
6.
அந்த
ஜோஸ்யர் போலின்னு எப்படிச் சொல்றே?
ஜாதகத்துலே பித்ரு தோஷம் இருக்கு! அதை போக்கடிக்க
ஆசிர்வாத் கோதுமை மாவை வாங்கி சப்பாத்தி பண்ணி சாப்பிடச்சொல்றாரே!
7.
புதுசா
ஒரு இ- ஸ்கூட்டர் வாங்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தியே என்னாச்சு?
அதனோட விலையைக் கேட்டதும் அப்படியே ஷாக் ஆகிட்டேன்!
8.
என்னப்பா
சர்வர் கல் தோசையை சாப்பிட்டதும் ஒரே விக்கலா வருது!
இது விக்கல் தோசை சார்!
9.
ஒருத்தருக்கொருத்தர்
விட்டுக்கொடுத்துப் போறதுதான் வாழ்க்கைன்னு என் பொண்டாட்டிக்கிட்டே சொன்னது தப்பா போயிருச்சு!
ஏன் என்ன ஆயிருச்சு?
இன்னிக்கு
சமைக்கிற வேலையை உங்களுக்கு விட்டுக்கொடுத்திடறேன் சாப்பிடற வேலையை எனக்கு விட்டுக்கொடுத்துடுங்கன்னு
சொல்லிட்டா!
10. மண்ணைக் காக்க போராடுவேன்னு தலைவர் அறிக்கை விடறாரே
என்ன விஷயம்?
ஆறுவழிச்சாலையிலே
அவரோட நிலமும் இருக்குதாம்!
11.
"அதோ போறாரே அவர் எல்லோர்கிட்டேயும் ரொம்ப மரியாதைக் கொடுத்துத்தான்
பழகுவாரு.."
"எப்படி சொல்றே?"
"கூகுள் வாய்ஸ் சர்ச்சில் பேசும்போது கூட ரெஸ்பெக்ட்ட்
கூகுள்னுதான் பேசுவார்னா பார்த்துக்கோயேன்..."
12. நடைபயணம் கிளம்பிய
மன்னரின் திட்டம் திடீரென மாறிவிட்ட்தாமே?
ஆமாம் எதிரி மன்னன் படையெடுத்து அதை
“ஓட்டப்பந்தயம்” ஆக்கிவிட்டான்!
சிரித்து மகிழ்ந்தேன் நண்பரே
ReplyDelete