பாச்சாஸ் ஃபன் கிளப்- 3 கிரிக்கெட் வித் கில்லி பாய்ஸ்!

 

பாச்சாஸ் ஃபன் கிளப்- 3

  கிரிக்கெட் வித் கில்லி பாய்ஸ்!

 


பாச்சா மாமாவுக்கு  உடம்பெல்லாம் பரபரத்தது. யூ ட்யூபில்  பழைய கிரிக்கெட் மேட்ச்களை பொழுது போவதற்காக பார்த்துக் கொண்டிருந்தார். அவர் .பி.எல் ரசிகர். வருஷா வருஷம் ஒரு .பி.எல் மேட்ச் விடாது பார்த்துவிட்டு ச்ச்சு மாமியிடம் திட்டு வாங்கிவிட்டு படுக்காவிட்டால் அவருக்கு தூக்கமே வராது.

 

   இந்த வருஷம் கொரானாவால் .பி.எல் ரத்தானாதால் யார் பாதிக்கப்பட்டார்களோ இல்லையோ? பாச்சாதான்  அதிகம் பாதிக்கப்பட்டார். .பி.எல் போச்சே? தோனி ஆட்டத்தை  பார்க்க முடியலையே என்று புலம்பித்தீர்த்துவிட்டார்.

 

தபேலாதான் யூ ட்யுபில் பழைய கிரிக்கெட் மேட்ச்களை பார்க்கலாம் என்று சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனான். அதுமுதல் விடாது கிரிக்கெட் மேட்ச்களை பார்க்க நெட் பேக் காலியாகிவிட்டது.

 

அடியேய்! பொஞ்சாதி! நெட் பேக் காலியாயிருச்சுடி கொஞ்சம் போட்டு விடுடி!”  கெத்தாக மாமியிடம் கேட்டார் பாஞ்சா.

 

நாட்ல பாதிபேரு வயிறு காலியாயிருக்குன்னு புலம்பறான்! நீங்க என்னடான்னா ஒரு மாச நெட் பேக்கை ஒன்பதே நாள்ல காலி பண்ணிட்டு புலம்பிட்டிருக்கீங்க! ஒருவாரம் தள்ளிப் போடுங்க! ”

 

ஒருவாரம் தள்ளிப்போட இதுலாக்டவுன்இல்லேம்மா! “டேட்டா டவுன்”!

அது பார்க் டவுனா இருந்தா கூட சரி! ஒரு பைசா தரமாட்டேன்!”

 

அடியே பாதகத்தி! தாலிகட்டின ஒம் புருஷனை இப்படி டேட்டா பேக் போடாம சாகடிச்ச பாவத்துக்கு ஆளாகதேடி!”

 

டோண்ட் கேர்! டோண்ட் அப்ரிஷியேட் யுவர் ரிடிகுலஸ் ஆக்டிவிடிஸ்! ஷுட் பி குளொஸ் யுவர் மொபைல் அட்லீஸ்ட் வீக்.. அண்டர்ஸ்டேண்ட்.”

 

  ..வூன்னா உன் இங்கிலீஷ் திமிரை காட்டறியா? இரு உன்னை …”

 

என்னா பண்னுவீங்க? ராத்திரி புவாவுக்கு இங்கதான் வரணும்! அடையும் அவியலும் பண்ணிவைச்சிருக்கேன்ரொம்ப எகிறுனா கண்ணுலேயே காட்டமாட்டேன்…!”

 

அவருக்கு பிடிச்ச அடை அவியலுக்காக அந்த சண்டைக்கு அப்போது தடை போட்ட  பாச்சா  டேட்டா பேக் போட என்ன செய்யலாம்னு யோசிக்க ஆரம்பித்தார்.

 

 மொட்டை மாடிக்கு சென்று படிக்கூண்டில் அமர்ந்தவாறு யோசனையில் அமர்ந்தவருக்கு  எங்கோ தபேலாவின் குரல் கேட்க மொட்டை மாடியிலிருந்து எட்டிபார்த்தார். வாசலில் தபேலா நின்றிருந்தான். உடன்  பிகிலும் இன்னும் சிலரும்.

 

 பாச்சாவை பார்த்த்தும்  கை அசைத்தான் தபேலா..

இருடா கீழே வர்றேன்! ”என்று மாடியிலிருந்து இறங்கி வாசலுக்கு வந்தார் பாச்சா.

 

சச்சு மாமி பாண்டவர் இல்லத்தில் மூழ்கி கிடக்க வாசலில் கௌரவர்களின் சதியாலோசனைக் கூட்டம் துவங்க ஆரம்பித்தது

 

  ஏண்டா தபேலாஎன்னடா கையிலே பேட்டும் பாலுமா எங்கடா கிளம்பிட்டீங்க!”

 

   தல  கிரிக்கெட் ஆடப்போறோம்! எங்க டீம்தான் கிரிக்கெட்ல இந்த ஏரியாவுல கில்லி,,”

 

   டேய் டேய்,, தபேலா என்னையும் உங்க டீம்ல சேர்த்துக்கோங்கடா..!”

 

என்னா தலை  ரிடையர் ஆகி அம்பயரிங் பண்ற வயசிலே டீம்ல சேர்த்துக்க சொல்றே? எல்லாம் சிரிப்பாங்க!”

 

 மத்தவங்களை சிரிக்க வைக்கிறது எவ்ளோ பெரிய கலை தெரியுமாடா?”

 

 ஆனா உன்னை டீம்ல சேர்த்துகிட்டா எங்களை அழ வைச்சிருவியே…!”

 

அப்படியெல்லாம் சொல்லாதடா தபேலா ஒரு காலத்துல… ”  ப்ளாஷ்பேக் மோடுக்கு போன பாச்சாவை ரீவைண்ட் செய்து ப்யுச்சருக்கு திருப்பினான் தபேலா.  தல  நீ கொசுவர்த்தியெல்லாம் கொளுத்த வேணாம். ”எங்களுக்கும் ஒரு ப்ளேயர் கொறையுது உன்னை ஒப்புக்கு சப்பா சேத்துக்கறோம்

 

ஒப்புக்கு சப்போ உப்புக்கு சப்போ! உங்களுக்கு ஒரு கப்பு வாங்கித்தராம விடமாட்டான் இந்த பாச்சா!”

 

 எந்த டோர்ணமெண்ட்ல தலை..!”

 

அதுக்கு எதுக்குடா டோர்ணமெண்டு!  செல்வ விநாயகர் மெட்டல்ஸுக்கு போனா விதவிதமா இருக்குதுடா கப்பு.”

 

 அதானே பார்த்தேன்நீயாவது கப்பு  ஜெயிக்கிறதாவது…!”

 

ஜெயிச்சு வாங்கினா அது வேர்ல்ட்கப்பு..! ஜெயிக்காமலேயே பழைய பித்தளை கடையிலே வாங்கினா அது. ஓல்டு கப்பு!”

 

இன்னிக்கு நம்ம கில்லி பாய்ஸ்  மேட்டு தெரு  சில்லி பாய்ஸ் கூட  மேட்ச் ஆடப்போறோம் வாங்க புறப்படுவோம்பிகிலு சொல்ல அவர்களுடன் கிளம்பினார் பாச்சா மாமா.

 

 ஊரைத்தாண்டியிருந்த அந்த பெரிய கிரவுண்டில்  ஒன்றிரண்டு புதர் செடிகளும் ஓரே ஒரு மரமும் இருக்க நடு மையத்தில் ஸ்டம்ப் நட்டு  வைக்கப்பட்டிருந்த்து. சிலர் பந்துவீசி பயிற்சி எடுத்து கொண்டிருக்க  கில்லி பாய்ஸ் உள்ளே நுழைந்தது.

 

   அங்க இருந்த ஒருத்தன்  நக்கலாக வந்து பாச்சாவை பார்த்துவிட்டு பிகிலிடம் கேட்டான்.

 

  என்னடா  தாத்தாவையெல்லாம் கேம் ஆட கூட்டி வந்திருக்கீங்க?”

 

 ஏய் அவரு யாரு தெரியுமா தாத்தா இல்லே  எங்கதாதா” ! ஓவராக பில்டப் செய்தான் கில்லி.

 

 யாரு? இவுரா பார்த்தா சோதா மாதிரி கீறாரு!  இவ்ரு தாதாவா?”

 என்னா பெருசு நீ பேட்ஸ்மேனா? பவுலரா?”

 

தன்னை கிரவுண்ட் முழுக்க சுற்றி அடிக்க போகிறார்கள் என்பதை அறியாத பாச்சா  ஆல்ரவுண்டர்என்றார்.

 

டாஸ் போட்டார்கள். கில்லி டீம் வென்றது.  பேட்டிங் எடுடா! நான் தான் ஓப்பனிங் ஆடுவேன்!” என்றார் பாச்சா,

 

அப்ப ஓப்பனிங்கே ரண களம்தான்.” என்றான் சில்லி பாய்ஸ் ஒருவன்.

 

பாச்சாவின் நாடி நரம்பெல்லாம் முறுக்கெடுத்தது.  பாய்ஸ் நீங்க என்னை ரொம்பவே சீண்டறீங்க! வேண்டாம்”… என்றார்.

 

ஆஸ்திரேலியன் டீமுக்கு அண்ணனான சில்லி பாய்ஸ்  பெருசு,.. சீண்டறதுக்கு நீ என்ன சின்ன பாப்பாவா?  போ.. போய் விள்ளாடு..! ”என்றார்கள்.

  தபேலாஎன்னை ஓப்பணிங் எறக்குடா! இவங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்! நான் பேசமாட்டேன் என் பேட் பேசும்,,” என்று முழங்கினார் மாமா.

 

 தலே.. இதுக்குள்ளாம் டென்சன் ஆக கூடாது..! டோனி மாதிரி கூலா இருக்கணும்! டாஸ் வின் பண்ணா பவுலிங் எடுக்கிறதுதான் சரிசேசீங் பண்றதுதான் சரிப்பட்டு வரும்.”

 

  தபேலா.. எந்த வில்லன் இங்கே ஹீரோயினை தூக்கிட்டுப் போறான் சேஸிங் பண்ணலாம்னு சொல்றே? முதல்ல பேட் பண்ணலாம் அப்பத்தான் பெட்டை தேத்த முடியும்

 

  தல.. நீ கிரிக்கெட்டுக்கு புச்சு! நம்ம டீமுக்கு தபேலாதான் டோனி மாதிரி உன்னை இன்னிக்கு ஒப்புக்கு சப்பாவாதான் கொண்டுவந்திருக்கோம்! கம்னு இரு தபேலா முடிவெடுக்கட்டும்!”

 

ஒப்புக்குச் சப்பான்னு சொல்லியே என்னை ஓரங்கட்டறேங்களாடா…! ”

 

 கோச்சுக்காதே,.. இப்ப நீ தேர்ட் மேன்ல போய் நில்லு..”

 

நான் தேர்ட் மேன்னா..  மத்த ரெண்டு பேரு யாரு..”

 

அய்யோ! வெறுப்பேத்தாதே  தமிழ்லே சொல்றேன் நீதான் மூணாவது மனுசன்..”

 

கிரிக்கெட்ல கூட என்னை மூணாவது மனுசனாத்தான் நினைக்கிறீங்களாடா…!”

 

 பீல் ஆகாதே மாம்சுஅப்போ ஃபைன் லெக்லே நிக்கறியா?”

 

  என்னை  ஷைன் பண்ண விட மாட்டீங்களா?”

 

 பார்த்தியாபாயிண்ட்டுக்குவந்திட்டே..!”

 

என்னைகவர்திசையிலே நிக்க சொல்ல மாட்டீங்களா?”

 

அதுக்குன்னே    எக்ஸ்ட்ரா கவர்கொடுத்து உள்ளே வந்த பசங்க இருக்காங்க பேசாம நீ லாங் ஆன் போயிரு..!”

 

கிரிக்கெட்டை விட்டு என்னை தூரமா போகச்சொல்றீங்க! சரி சரி போறேன்!” மாமா லாங் ஆன் திசைக்கு போனார்.

 

சில ஓவர்களை கில்லி டீம் வீச சில்லி டீம் வெளுத்து வாங்கியது. ஆறு ஓவர்களில் அறுபது ரன்களை எடுத்துவிட்டது சில்லி டீம். மாமாவுக்கு கோபமாக வந்தது.

 

  டேய் தபேலா…! என்னடா பவுலிங் போடறீங்க!  நான் போடறேண்டா! இந்த ஓவர்ல நான் விக்கெட் எடுக்கறேன்! இல்லேன்னா நான் கிரிக்கெட்டையே விட்டுடறேண்டா.. எனக்கு ஒரு சான்ஸ் கொடுடா..” என்றார்.

ஒப்புக்கு சப்பாவுக்கு எல்லாம் ஓவர் கொடுக்க முடியாது..! இப்பவே ரன் ரேட் எகிறிக்கிடக்குது! உன் ஓவர்லே  விளாசிட்டா அப்புறம் ஜெயிக்கவே முடியாது..”

 

டேய் நான் கூக்ளி போடுவேன்! கேரட்பால் போடுவேன்! மான் கராத்தே விக்கெட் தெரியுமாடா உனக்கு?”

 

மாமா அது மன்கெட் விக்கெட்! கேரட் பால் இல்லே கேரம்பால்..! ”

 

அது கேரம் பாலோ மசாலா பாலோ ஏதோ ஒண்ணு நான் விக்கெட் எடுத்தே ஆகனும்! பவுலிங் எங்கிட்ட கொடுப்பியா மாட்டியா?” மாமா கெஞ்ச

 

சரி ஒரு ஓவர்தான் அப்புறம் திரும்பவும் கேட்க கூடாது!”

 

இதெல்லாம் உங்களுக்குஒவராத்தெரியலையாடா!”

 

ஒவராபேசாத முதல்ல ஒருஓவர் பவுல் பண்ணு!”

 

ஓக்கேடா..!

 

மாமா கையில் பந்து கொடுக்கப்பட்டது.

 

பெருமிதமாக கையில் பந்தை எடுத்துக்கொண்டு கீரிஸுக்கு வந்தார். அப்போது மேலேஉஸ்என்ற சத்தம் கேட்க.

 

தபேலா.. பாத்தியாடா!  மாமாவோட திறமையை படம்பிடிக்க  ட்ரோன் கேமராவே வந்திருக்கு…!”  பாச்சா கத்த…!

 

 அய்யோ பெருசு! ஓடு..! ஓடு! ஒளிஞ்சுக்கோ! அது போலீஸ் கேமரா.. மாட்னே  செத்தே.”.

 

 அந்த பொட்டல் வெளியில் எல்லோரும் மூலைக்கு மூலை ஓட துரத்தி துரத்தி படம் எடுத்தது கேமரா.

 

தல.. நிற்காதே.. ஓடு.”. தபேலா வந்த வழியே ஓடி எஸ்கேப் ஆக அவன் பின்னாலேயே  நில்லுடா தபேலா என்று  ஓடினார் மாமா! அவர்களை துரத்திக்கொண்டே மேலே பறந்தது கேமரா.

 

லைப்ல முத முதலா லைவ்வா கிரிக்கெட் ஆடலாம்னு வந்தது தப்பாடா?

 

இப்படி லைவ் ரிலே பண்ணி ஓட விடறீங்களே!”

 

தல முகத்தை மூடிக்கோ!  இல்லேன்னா ஊர் பூரா உன் பேஸ் புக் ஆயிரும்!”

 

லைக் விழுமாடா!?”

 

லைக் விழுதோ இல்லையோ மாமிகிட்டே  அடி நிறைய விழும்!”

 

அடேய் தபேலா கிராதகா…!”

பேஸ்புக்லே லைக் போட்டிட்டு இருந்தவனை  இப்படி பேஸ்புக்லே லைவ் வீடியோ காட்ட வச்சிட்டியேடா!”

 

 நீதானே தலை கிரிக்கெட்டு ஆடனும்னு ஆசைப்பட்டே!”

 

 கடைசியிலே இப்படி அது சிரிக்கெட்டு ஆயிருச்சேடா.  சேசிங் பண்ணலாம்னு சொல்லிட்டு இப்படிகேமரா விங்க் சிக்க வைச்சிட்டியேடா!”

 

 வுடு தலை…! நாளைக்கு பார்த்துக்கலாம்!”

 

 என்னத்தை வீடியோவுல என்னை எத்தனை பேரு பார்த்தாங்ககறதையா?”  ஓட ஆரம்பித்தார் பாச்சா  

 

 சத்தம் போடாமல் வீட்டுக்குள் நுழைந்தார் பாச்சா..!

 

  ப்ராண நாதா! எங்கே சென்று வருகிறீர்கள்! உங்களை காணாது தவித்துப் போய் இருக்கிறாள் உங்கள் சகதர்மிணி.”

 

 சச்சு! உனக்கு என்ன ஆச்சு! திடீர்னு பழைய சினிமா டயலாக் பேசறே?”

உங்களுக்கு இங்கிலீஷ் பேசினா பிடிக்கலையே! அதான் முரசு சேனல்ல பழைய சினிமாவா பார்த்து பேசி பழகிட்டிருக்கேன்! ஆமா எங்க போயிட்டு வர்றீங்க? ”


பொழுது போகாம அப்படியே ஒரு வாக்கிங் போயிட்டு வரேன்..” சமாளித்துவிட்டு உள்ளே நுழைந்தார் பாச்சா.

 

இரவு டிவி முன் அமர்ந்து நியுஸ் சேனலை போட்டார் சச்சு.  பக்கத்தில் அமர்ந்து அடை அவியலை வெளுத்து கட்டியபடியே பார்த்துக்கொண்டிருந்தார் பாச்சா.

 

ஊரடங்கை மதிக்காமல் கிரிக்கெட் ஆடும் பாய்ஸ்களை ட்ரோன் கேமரா மூலம் படம்பிடித்து துரத்தி அடித்தது போலீஸ், என்று அந்த காட்சிகளை காட்ட   மாமா முகத்தை மூடிக்கொண்டார்.

 

  அதானே பார்த்தேன்இங்க முகத்தை மூடிக்கிட்டு என்ன பிரயோசனம்? அங்க பாருங்க! கைல பாலை வச்சிக்கிட்டு கேமராவுக்கு என்னாமா போஸ் கொடுத்துட்டு நிக்கறீங்க! இந்த வயசில இது உங்களுக்கு தேவையா? ”

 

 சச்சு மாமி முறைக்க   ஸாரி சச்சு! நீ டேட்டா பேக் போட்டிருந்தா நான் பாட்டுக்கு கிரிக்கெட் பாத்துட்டு இருந்திருப்பேன் இல்லே!  நீ டேட்டா போடாத விட்டதாலே ஊரே என் டேட்டா வை பார்க்க வேண்டியாயிருச்சு! ” 

யூ.. யூ! ரிடிகுலஸ் மேன்.. நாட் ஒன்லி கட் டேட்டா பேக்! ஆல்சோ கட்  யுவர் டின்னர் பேக் இன் டுடே…! ”

 

பாச்சா கையில் இருந்த தட்டை பிடுங்கிக் கொண்டு கிச்சனுக்குள் சச்சு போய்விட பரிதாபமாக  நின்றார் பாச்சா மாமா!(கொரானா ஊரடங்கின் போது எழுதிய கதை)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில்  பகிர்ந்து செல்லலாமே! நன்றி!

 

 

 

 

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2