துரத்தும் நிழல்! பகுதி 6
துரத்தும் நிழல்! பகுதி 6 முன்கதை: பாக்கம் கிராமத்தில் கோவில் பூஜை செய்து வரும் வைத்தியநாத குருக்கள் இளம் மனைவியும் குழந்தையோடு வசித்துவருகிறார். திடீரென குருக்களின் மனைவி ஹேமாவதிக்கு கால் வீங்கி போகிறது. வைத்தியம் செய்ததில் குணமாகவில்லை! அவருடைய மாமனார் ஒரு கோபக்காரர். அவர் தன் மகளின் நோய்க்கு காரணம் வைத்தியநாதனும் அவருடைய தாயும் தான் என்று குற்றம் சாட்டுகிறார். வைத்தி அதை நிருபீக்க சொல்கிறார். இனி: வைத்திக்கு தன் அம்மாவின் மேல் பெரிதாக அப்படியொன்றும் பாசம் இல்லை என்றாலும் பெற்றவளை குறைசொல்கிறார்களே என்று இருந்தது. அவரது திருமணம் முதலே பெற்றோர்களுக்கும் அவருடைய மனைவி வீட்டாருக்கும் தகறாரு இருந்து வந்தது. இத்தனைக்கும் தேடிச்சென்று பெண் கேட்டு திருமணம் செய்துவைத்தார் வைத்தியின் தந்தை. ஆயினும் திருமணம் தொடங்கியதில் இருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை அரங்கேறிக் கொண்டிருந்தது. அது இப்போது பெரிதாகி அவரது அன்னை மீது குற்றச்சாட்டாக வந்து முடிந்திருக்கிறது. சரி ஆனது ஆகட்டும் இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டியதுதான். தன் அன்னை மீது குற்றச்சாட்டு வ...