Posts

Showing posts from January, 2013

ஓல்டு ஜோக்ஸ் பகுதி 7

Image
ஓல்டு ஜோக்ஸ் பகுதி 7 1.இவனோட அப்பா நம்ம நாட்டுக்காக உயிரையே கொடுத்தவரு..   பெரிய தியாகியா?  உஹூம் பெரிய ரவுடி போலீஸே சுட்டுக் கொன்னுட்டாங்க!                                            நிதின். 2.டேய்! உனக்கு நம்ம மானேஜர் கிட்ட இருந்து போன் வந்திருக்கு!  ஏன் போன் அவருக்கு வேணாமாமா?                                பாஸ்கி. 3.உங்களுக்கு வாரண்ட் வந்திருக்கண்ணே!  ஐயையோ!  ஊழலை கண்டு பிடிச்சிட்டாங்களா?  அட இது இண்ட்ரஸ்ட் வாரண்ட் அண்ணே!                                  பாஸ்கி 4.மாமியாருக்கு சர்க்கரை வியாதின்னு  டாக்டர் சொன்னதும் உடனே நான் ஸ்வீட் சாப்பிடறதையே விட்டுட்டேன்! பரவாயில்லையே உன் மாமியார் மேல அவ்வளவு பாசமா?  நீ வேற! அந்த நியுஸே எனக்கு ஜென்மத்துக்கும் ஸ்வீட் சாப்பிட்டமாதிரி ஆயிருச்சு!                             வி.சாரதிடேச்சு 5.அந்த ஆள் ஏன் கோபப்பட்டார்? அவர் பேத்தியோட இருக்கார் என்ற அர்த்தத்தில் பேத்திகிட்டே இருக்காருன்னு சொல்லிட்டேன் அதான்.                      சாயம் வெ.ராஜாராமன். 6.ஆபிஸ் வேலைக்கு போறவங்களை மட்டும் மையமா வச்சி ஒரு படம் எடுக்

புகைப்பட ஹைக்கூ 1

Image
                                                                                                                                                                             பூக்களோடு பூவாய் பூத்து நிற்கிறது வண்ணத்துப் பூச்சி! வண்ணத்து பூச்சியின் அழகில் தனை இழந்தது மலர்! முத்தமிட்டதும் சிவந்து போனது மலர் வண்ணத்துப்பூச்சி! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

உறுத்தல்

Image
உறுத்தல்      சிறுகதை ‘அய்யா” அழைத்தது குரல். வராண்டாவில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்த நான் தலைநிமிர்ந்தேன். “என்ன?” என்றேன் பார்வையால் வணக்கமுங்கய்யா என் பேரு முனுசாமி ஜாதிச்சான்றிதழ் வேணுமுங்கய்யா அதான் ஐயாவண்ட வந்தேனுங்கய்யா கையில் வைத்திருந்த விண்ணப்பத்தை நீட்டினான்.      உயரமாய் ஒடிசலாய் கைக்கட்டி நிற்கும் அவனைப்பார்த்து எதுக்குய்யா கம்யூனிட்டிசர்டிபிகேட் என்றேன். . “கடை ஒண்ணு போடனுங்க” “என்ன கடைப்பா” தலையை சொறிந்துகொண்ட அவன் செருப்பு பை எல்லாம் தெச்சி விக்கிறதுக்கு சாமி” என்றான்.      “அப்படியா நான் கையெழுத்துப் போடனுமுன்னா 100ரூபா வேணுமே”    “ சாமி இல்லாதவன் கொஞ்சம் இரக்கம் காட்டுங்கய்யா”   “இதுல பாரபட்சமே கிடையாதுப்பா லஞ்சம் எல்லோருக்கும் பொதுவுடைமை ஆகிப்போச்சு 100ரூபா ரெடி பண்ணிட்டுவா கையெழுத்து வாங்கிட்டுப்போ” “சரிங்கய்யா” அவன் அகன்றான். நான் அந்தப்பகுதி வி.ஏ.ஓ.எந்த ஒரு வேலைக்கும் என்னிடம் தான் வரவேண்டும் அந்த இறுமாப்பில் தான் திருப்பி அனுப்பினேன்.மாலை ஆபீசில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தேன்.தீடிரென செருப்பின் வார் அறுந்துவிட்டது.

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 31

Image
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 31 உங்கள் பிரிய “பிசாசு” முன்கதைசுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண் செல்வியின் உடலில் ப்ரவீணா என்ற பெண்ணின் ஆவி புகுந்து கொள்கிறது. குஹாத்ரி மலை சுவாமியிடம் அது வந்த சமயம் அங்கு ப்ரவீணாவை கொன்றவனை முன் நிறுத்துகிறார் சுவாமிஜி.    முந்தைய பகுதிகளுக்கான லிங்க்:       http://thalirssb.blogspot.in/2012/06/blog-post_3637.html  பகுதி  1 http://thalirssb.blogspot.in/2012/07/2.html  பகுதி  2 http://thalirssb.blogspot.in/2012/08/3.html  பகுதி  3 http://thalirssb.blogspot.in/2012/08/4.html   பகுதி  4   http://thalirssb.blogspot.in/2012/08/5.html   பகுதி  5 http://thalirssb.blogspot.in/2012/08/6.html     பகுதி  6 http://thalirssb.blogspot.in/2012/09/7.html     பகுதி  7 http://thalirssb.blogspot.in/2012/09/8.html    பகுதி  8 http://thalirssb.blogspot.in/2012/09/8.html     பகுதி  9 http://thalirssb.blogspot.in/2012/10/10.html   பகுதி  10  http://thalirssb.blogspot.in/2012/10/11.html    பகுதி 11 http://thalirssb.blogspot.in/2012/10/

தளிர் ஹைக்கூ கவிதைகள் 18

Image
இரவல் நகை ! பாராட்டினார்கள் ! நிலா ! பயந்து பயப்படுத்துகிறது பாம்பு ! தொங்கிக் கொண்டே இருக்கிறது வலிக்கவில்லை ! பல்பு !   ஒளித்து வைத்ததை உடைத்து குடித்தார்கள் ! இளநீர் ! அலைந்து கொண்டே இருக்கிறது அவதிப்படுகிறோம் மனசு ! பிள்ளைகள் வளர்கையில் வயதாகிறது நமக்கு ! கண்சிமிட்டின களங்கம் அடையவில்லை ! நட்சத்திரங்கள் ! விளக்கினடியில் விருந்து தவளை ! அழுகை சத்தம்! மகிழ்ந்தார்கள்! பிரசவம்! வலி! இன்பமானது சுக பிரசவம்   மை பூசியதும் பொட்டு இட்டுக்கொண்டது வானம் ! நிலா !   வானில் பிறந்தாலும் மண்ணோடு கலக்கிறது நீர் ! அழகான பூ மிதிபட்டது ! மிதியடி ! துப்பறிந்ததும் விரட்டப்படுகின்றன ! எறும்புகள் ! அசைந்தாலும் நகரவில்லை ! நீரில் நிழல் !   தேடிக்கொண்டே இருக்கின்றன எதையும் தொலைக்கவில்லை ! எறும்புகள் !  தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!

உங்களின் தமிழ் அறிவு எப்படி? கொஞ்சும் தமிழ்!

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? சில தமிழ் சொற்களை இந்த பகுதிகளின் வாயிலாக கடந்த வாரங்களில் அறிந்து கொண்டோம்! இந்த முறை கொஞ்சம்  கொஞ்சும் தமிழை பார்ப்போமா? இவை நான் பழைய புத்தகங்களில் படித்து ரசித்தவை! இவை தமிழுக்கே உரியன!  தமிழ் அத்தனை வளமையும் இனிமையும் கொண்டது. இனி நான் ரசித்த தமிழை பார்ப்போமா? முகம் தெரியும் போது வந்துவிடு! திருமணமான கொஞ்ச நாள் சென்றதும் மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான். போகுமுன் தாயாரிடம், “ நான் எப்பொழுது திரும்பி வர?”  எனக் கேட்டான்.அவன் தாய் எதையும் உள் அர்த்தமுடனும் சுருக்கமாகவும் பேசக்கூடியவள். “முகம் தெரியும் போது வந்துவிடு” என்று கூறி அனுப்பினாள்.          பையன் புறப்பட்டுச் சென்றான். மாமியார் வீட்டில் நல்லவிதமாக கவனித்தனர்.ஒரு மாதமாயிற்று. மவுசு மெல்லக் குறைந்தது. வாழை இலை தையல் இலை ஆயிற்று.பிறகு கிண்ணத்தில் சாப்பாடு வந்தது. ஒரு நாள் மாப்பிள்ளை சாப்பிடுவதற்கான கிண்ணத்தை குனிந்து எடுத்தான். அன்று கஞ்சிதான் தரப்பட்டது. அதில் அவர் முகம் தெரிந்தது. உடனே தாயார் சொன்னது நினைவுக்கு வந்தது. அன்றே கிளம்பி விட்டான் வீட்டுக்கு! பெரியவர

பத்ம விருதுகள் அறிவிப்பு! விருதை நிராகரித்த பின்னணி பாடகி ஜானகி!

Image
பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மயிலானந்தன், நடிகை ஸ்ரீதேவி, டாக்டர் தேவராஜன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கலை, சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பிரிவுகளில், சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தையொட்டி, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர், பெயர் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம், 108 பேர், பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், நான்கு பேர், பத்ம விபூஷன் விருதுக்கும், 24 பேர் பத்ம பூஷன் விருதுக்கும், 80 பேர், பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதுக்கு தேர்வானவர்களில், 24 பேர் பெண்கள்.ஒடிசாவை சேர்ந்த ரகுநாத் மெகாபத்ரா, டில்லியை சேர்ந்த ஹெய்தர் ரஸா, உ.பி.,யைச் சேர்ந்த பேராசிரியர் யாஷ்பால், கர்நாடகாவைச் சேர்ந்த பேராச

கண்ணா லட்டு தின்ன ஆசையா? கமலின் தவிப்பு! பாப்பா மலர்!

Image
கண்ணா லட்டு தின்ன ஆசையா? கமலின் தவிப்பு! பாப்பா மலர்! “கமல்! கமல்! எழுந்திருடா! மணி ஏழு ஆகப்போவுது! இன்னும் அரை மணி நேரத்துல ஸ்கூல் வேன் வந்திரும்!” “இரும்மா! இன்னும் ஒரு பத்து நிமிஷம் படுத்து தூங்கிட்டு வரேன்!” “ஆமாம் இப்படியே தூங்கிகிட்டு இருந்தா அப்புறம் எப்படி ஸ்கூலூக்கு போறது?”  “எழுந்து பத்து நிமிசத்துல ரெடியாகிடுவேன்மா!” “என்னத்தை ரெடியாகிடுவே? ஒழுங்கா பல் தேய்க்க மாட்டே! காக்கா குளியல் குளிச்சிட்டு டிபன் சாப்பிடாமா அரக்க பரக்க வேனுக்கு ஓடுவே?”  “ இப்படி பேசியே என் தூக்கத்தை கெடுத்திட்டேம்மா!” என்று எழுந்து வந்தான் கமல்.   இது அந்த வீட்டில் அன்றாடம் நடக்கும் தாய்க்கும் மகனுக்குமான உரையாடல்! கமல் பன்னிரண்டு வயது சிறுவன். பக்கத்து கான்வெண்டில் ஏழாம் வகுப்பு படிக்கிறான். எல்லாவற்றிலும் கெட்டிக்காரன். படிப்பில் படு சுட்டியாக இருப்பான். ஆனால் இந்த தூக்கம் மட்டும் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்! காலை 7.30 மணிக்கு பள்ளி வேன் வரும் என்றால் 7.15 வரை தூங்கிக் கொண்டிருப்பான். அப்புறம் அந்த பதினைந்து நிமிடத்தில் அரக்க பரக்க ரெடியாகி பல் துலக்காமல்,சரியாக உண்ணாமல் வேனைப்பிடிக