பெரியது எது?
பெரியது எது?
மாமன்னர் ஹர்ஷர் துறவியான புத்தரை வரவழைத்து
உபசாரங்கள் செய்து அவரது சேவையை பாராட்டி பரிசுகள்
அளித்தார். ஹர்ஷரது ஆணைக்குட்பட்ட அரசர்களும் பிரபுக்களும் அந்த சமயத்தில் ஹர்ஷரது
அவைக்கு வந்து தங்களால் இயன்ற பொருளுதவிகளை புத்தரிடம் வழங்கினார்கள்
இந்த பரிசுகளை எல்லாம் ஆசனத்தில் அமர்ந்த
படி அனைத்தையும் ஒரே கையால் வாங்கிக் கொண்டார்
புத்தர். அப்போது அவைக்கு ஒரு மூதாட்டி வந்தார். அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத அந்த
மூதாட்டி புத்தரை வணங்கி, பெருமானே நான் ஒன்றுமில்லாத ஏழை! இரண்டு நாளாக உணவில்லாமல் இருந்தேன்.
இன்றுதான் ஒரு மாதுளங்கனி கிடைத்தது. அதில் பாதியை உண்டுவிட்டேன். அப்போதுதான் தாங்கள்
வந்திருப்பது அறிந்து தரிசிக்க வந்தேன்.
தங்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென
விரும்புகிறேன் என்னிடம் இருப்பது இந்த பாதி மாதுளங்கனிதான் ஏற்றுக்கொள்கிறீர்களா?
என்று பணிவுடன் கேட்டாள்.
அன்புடன் மாதுளங்கனியை ஈக வரும் மூதாட்டியை
கனிவோடு நோக்கிய புத்தர் உடனே எழுந்து தனது இரு கரங்களையும் பணிவோடு நீட்டி பவ்யமாக
அந்த பாதிக் கனியை பெற்றுக் கொண்டார்.
ஹர்ஷருக்கு ஆச்சர்யம்! பெரிய அரசனான
தானும் பிரபுக்களும் கொடுத்த பொருட்களை அலட்சியமாக ஒரு கையால் பெற்றுக் கொண்ட புத்தர்
இந்த கிழவி கொடுத்த பாதி கனியை இரு கைகளால் பணிவோடு வாங்கி கொள்கிறாரே! ஏன்? புத்தரிடம்
கேட்டேவிட்டார்.
மன்னா! நீயும் உன் பிரபுக்களும் பெரும்
செல்வந்தர்கள்! நீங்கள் எனக்கு கொடுத்தது அதில் சிறுபகுதி! அதுவும் புத்தருக்கு கொடுத்தோம்
என்று பெருமை பட்டுக் கொள்வதற்கு கொடுத்தீர்கள். அதனால் ஒரு கையால் வாங்கினேன்! ஆனால்
அந்த மூதாட்டி சுயநலம் ஏதுமில்லாமல் தனது ஒரே சொத்தான அடுத்த வேளை உணவான அந்த கனியை
எனக்கு அளித்தாள். அது அவளை பொறுத்தவரை பெரியது! எனவே பவ்யமாக இரு கை நீட்டி வாங்கினேன்
என்றார்.
பொருள்களை கொடுத்துவிட்டோம்! என்ற
மமதையில் இருந்த அரசர் ஹர்ஷரும் பிரபுக்களும் தலைகவிழ்ந்து நின்றனர்.
இது எப்போதோ எதிலோ படித்த கதை!
பக்தியும் இப்படித்தான் சுயநலம் இல்லாமல்
இருக்க வேண்டும்! ஆண்டவனிடம் இதை கொடு அதைக்கொடு என்று கேட்பதோடு இதை கொடுத்தால் இதை
செய்கிறேன் என்று வேண்டிக் கொள்பவர்கள் உண்டு! சிலர் சின்ன உதவி செய்து விட்டு பெரிதாக விளம்பரம்
தேடிக் கொள்வர்! இவர்களை தெய்வம் ஏற்காது!
தன்னலமில்லாத பக்தியும் தொண்டுமே
இறைவனை சென்றடையும்! சிறிய பொருளானாலும் அதன் மதிப்பு பெரிதாக இருக்க கூடும்! ஆகவே
இந்த புத்தாண்டில் சுயநலம் குறைத்து பொது நலம் பேணி வாழ்வோமாக!
டிஸ்கி} அப்பாடா! எப்படியோ பதிவு தேத்தியாச்சு! இந்த ஆண்டில் காப்பி- பேஸ்ட்
குறைத்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்! முடிந்த வரை தவிர்ப்பேன்! ஒன்றிரண்டு சுவையான
பகிர்வுக்காகவும் சினிமா செய்திகளுக்காகவும் மட்டும் தருவேன்! நல்ல ப்ளாக்கரா மாறிகிட்டு
வரேன்னு நினைக்கிறென்! 2012ல் ஐந்துமுறை வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளேன்! இதுவே
அதற்கு சாட்சி! தொடர்ந்து வந்து வாசித்து ஊக்கமளித்து வரும் அனைவருக்கும் நன்றி! இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம்!
புத்தா் புகன்ற புனித நெறிகளைச்
சித்தம் பதிப்போம் சிறந்து
புத்தாண்டு வாழ்த்துக்கள்! பூத்த மலா்ச்சோலை
கொத்தாண்ட நன்மணத்தைக் கொண்டுயா்க! - முத்தொளிரும்
உள்ளம் உயா்ந்தொளிர்க! ஓங்கு தமிழ்மொழியின்
வெள்ளம் பெருகும் விரைந்து!
கவிஞா் கி, பாரதிதாசன்
பிரான்சு
01.01.2013
nalla karuthu mikka sampavam .....
ReplyDeleteநெகிழ்ந்தேன் - பகிர்வுக்கு நன்றி நண்பா
ReplyDeleteஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துகள். இதே போன்ற கதைதான் நெல்லிக்கனி சங்கரருக்குத் தந்து கனகதாரா ஸ்தோத்ரம் உதித்த கதையும்! :))
ReplyDeleteஇந்த கதை ஏற்கெனவே கேட்டிருக்கிறேன். நன்றி
ReplyDelete