நான் தான் மாஸ் ஹீரோ! பவர் ஸ்டார் அட்ராசிட்டி!எப்பவுமே நான் தான் மாஸ்...! மார்தட்டுகிறார் பவர்ஸ்டார்


தன்னை தானே மிகைப்படுத்தி கொள்வதில் பவர்ஸ்டாருக்கு நிகர் பவர்ஸ்டார் தான். தன்னுடைய முதல்படமான லத்திகா படம் வெளிவருதற்கு முன்பே டாக்டர் சீனிவாசன் என்ற பெயருக்கு முன்னால் பவர்ஸ்டார் என்று தன்னை பிரபலப்படுத்தியவர். அதுமட்டுமின்றி அவ்வப்போது இன்றைய நடிகர்களில் தனக்கு போட்டியான ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே, எனது நடிப்பை பார்த்து ஷங்கரே அவரது படத்தில் நடிக்க வைத்தார், என்னுடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டார் என்று ஏக வசனம் பேசுபவர். இவர் நடித்த முதல்படமான லத்திகா படம் தியேட்டர்களில் ஓடாமலேயே 300 நாட்கள் ஓடியதாக தமிழகம் முழுக்க போஸ்டர் அடித்து விளம்பரபடுத்தியவர், உண்மையிலேயே அவரது படம் ஹிட்டானால் சும்மாவா இருப்பார். ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து வருகிறார். 

இந்த பொங்கலுக்கு நடிகர் சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்து வெளிவந்து இருக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளதால் மனுசனை பிடிக்கவே முடியவில்லை. ஏக குஷியில் இருக்கிறார். ஏற்கனவே தன்னை பவர்ஸ்டார் என்று பிரபலப்படுத்தியவர் இப்போது தான் ஒரு மாஸ் ஹீரோ என்று கூறி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் என்னுடைய நடிப்பை ரசிகர்கள் மிகவும் கொண்டாடுகிறார்கள், மகிழ்கிறார்கள். இன்றைய ரசிகர்களின் ரசனையை உணர்ந்து நான் நடித்து வருகிறேன். அதனால் தான் அவர்கள் என்னை கொண்டாடுகிறார்கள். எப்பவுமே நான் தான் மாஸ் ஹீரோ என்று மார்தட்டி கொள்கிறார். சந்தானத்தை ஓவர்டேக் செய்த டாக்டர் சீனிவாசன்!


சில சமயங்களில் எதிர்பார்த்தது ஒன்றாக இருக்க, நடந்தது வேறு ஒன்றாக இருக்கும். அப்படித்தான் லத்திகா படத்தில் நடித்த டாக்டர் சீனிவாசன், தனக்குத்தானே பவர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்துக்கொண்டு செய்யுற அலம்பலை தாங்க முடியாமல் தனது கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிக்க அழைத்தார் சந்தானம். மேலும், அவரே கடுப்பாகி இத்தோடு சினிமா விட்டே ஓடிவிட வேண்டும் என்கிற அளவுக்கு படம் முழுக்க அவரை செம கலாய்ப்பு கலாய்க்கும்படியான வசனங்களையும் இணைத்தார் சந்தானம். ஆனால் அவை அத்தனையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு நடித்தார் சீனிவாசன். 

விளைவு, சந்தானத்தின் கலாய்ப்பு அனைத்தையும் வெகுளித்தனமாக ஏற்றுக்கொண்டு நடித்த சீனிவாசனின் நடிப்பைப் பார்த்து தியேட்டர்களில் ரசிகர்கள் கைதட்டி ரசிக்கிறார்களாம். இதையறிந்து செம காண்டில் இருக்கிறாராம் சந்தானம். இப்படியே நம்ம படங்களில் தொடர்ந்து இவர் நடிச்சா, நம்மளை வீட்டுக்கு அனுப்பிடுவார் போல இருக்கே என்று உஷாராகி விட்டார். அதனால் இனிமேல் தனது படங்களில் சீனிவாசனுக்கு சான்ஸ் கொடுப்பதில்லை என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளார் சந்தானம்.                                                              நன்றி: தினமலர் சினிமா மலர்

Comments

 1. சினிமாவில் அரசியல்!

  ReplyDelete
 2. டாக்டருன்னா, நெஜமாவே டாக்டருங்களா?

  ReplyDelete
 3. இந்த லட்டை திங்க ஆசையாதான்ய்யா இருக்கு, படம் கண்டிப்பாக பார்க்கவேண்டும்...!

  ReplyDelete
 4. இந்த பவர்ஸ்டார் நடிச்ச படம் ஏதானும் நீங்க பாத்திருக்கீங்களா? அலப்பறைதான் அதிகமா சவுண்ட் விடுரது போல இருக்கே?

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2