மதுரை அஷ்டமி சப்பரத் திருவிழா!


 மதுரை சொக்க நாதரும் மீனாட்சி அம்மையும் ஒரு சமயம் விளையாட்டாக பேசிக் கொண்டு இருக்கையில் ஒரு கேள்வி எழுந்தது. இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ படி அளப்பது யார்? என்ற கேள்விதான் அது!
    இதில் என்ன சந்தேகம்! அனைத்து உயிர்களையும் காத்து ரட்சிக்கும் பரமேஸ்வரனானே நானே அனைத்துயிர்களுக்கும் படி அளந்து வருகிறேன் என்று சொக்க நாதர் கூறினார்.
   அது எப்படி உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான உயிர்கள் இருக்கின்றன. அவை அனைத்திற்கு உங்களால் உணவு வழங்க முடியுமா? என்று அம்பிகை சந்தேகம் எழுப்பினாள்.
  நீ வேண்டுமானால் சோதித்து பார்த்துக் கொள்! எல்லா உயிர்களுக்கும் அன்றாடம் தேவையான உணவை நான் படியளந்து விடுகிறேன் என்று சிவபெருமான் சொக்கநாதர் கூறினார்.
    அம்பிகையும் சிவபெருமானை சோதிப்பதற்காக ஒரு சிற்றெரும்பை பிடித்து ஒரு டப்பாவினுள் அடைத்து வைத்தார். பின்னர் சொக்கநாதரிடம் சுவாமி! இன்று நீங்கள் அனைத்து உயிர்களுக்கும் படி அளந்து விட்டீர்களா? என்று வினவினார். ஈசனும் அதிலென்ன சந்தேகம் அனைத்து  உயிர்களுக்கும் இன்று படி அளந்தாகிவிட்டது என்று கூறினார்.
   அம்பிகை விஷமமாக இன்று நீங்கள் ஒரு உயிர்க்கு படி அளக்க வில்லை! அந்த உயிரை நான் இந்த டப்பாவில் அடைத்து வைத்திருக்கிறேன் என்று கூறினாள்.
    ஈசன் சிரித்தபடி, தேவி! டப்பாவை திறந்து பார்! என்றார். டப்பாவினுள் எறும்புக்கு உணவாக அரிசி ஒன்று இருந்தது. ஈசனின் கருணையை நினைத்து அம்பிகை வியந்து வணங்கினாள்.
   இது மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி தினமாக கருதப்படுகிறது! இந்த நிகழ்ச்சியை மார்கழி அஷ்டமி சப்பர திருவிழா என மதுரை சொக்கநாதர் கோயிலில் கொண்டாடப்படுகிறது.
    அன்றைய தினம் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். அப்போது உயிரினங்களுக்கு படி அளக்கும் விதமாக வீதிகளில் அரிசிப் பொடி தூவி இறைவனை வணங்கி மகிழ்வர் மக்கள்!
இந்த மாதம் இத்திருவிழா நாளை மதுரை மாநகரில் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் சுவாமி வீதி உலா வர உள்ளார். வீதிகளின் இருபுறமும் அரிசிமாவு தூவி வழிபட தயாராக உள்ளனர் மக்கள்!
  நாமும் நமது வீடுகளில் அரிசிமாவு கோலமிட்டு ஆலயங்களுக்கு சென்று வழிப்பட்டு வருவோமாக!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

 

Comments

  1. ஏற்கனவே படித்து தெரிந்து கொண்ட தகவல்தான். மறுபடி படிக்க பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2