இன்று அனுமன் ஜெயந்தி!
இன்று அனுமன் ஜெயந்தி!
அனைத்து கிரக தோஷங்களுக்கும் அனுமனை வழிபட நிவர்த்தி கிடைக்கும்! அனுமனுக்கோ
ராமநாமம் பிடிக்கும்! ராமநாமம் எங்கு ஒலிக்கிறதோ அங்கு அனுமன் கட்டாயம் வீற்றிருப்பான்.ராமநாமம்
ஜபிக்கும் வீட்டில் அனுமன் கடாட்சம் நிறைந்திருக்கும். இத்தகைய வாயுபுத்திரன் அனுமன்
உதித்த வரலாற்றை பார்ப்போம்!
ராமாவதாரம் நிகழ இருந்த வேளையில்
அவருக்கு சேவை செய்ய விலங்கினங்கள் பறவைகள் எல்லாம் முன் வந்தன. பரமேஸ்வரனுக்கும் அந்த
அவதாரத்திற்கு சேவை செய்யும் ஆசை வந்தது. தன் விருப்பத்தை அவர் தேவியிடம் தெரிவித்தார்.வானரப்பிள்ளை
ஒன்றை பெற்றுத்தர கேட்டார்.தேவியோ அழகான இரு பிள்ளைகள் இருக்க வானரப்பிள்ளை தேவையில்லை
என்று மறுத்துவிட்டாள்.
எனவே ருத்ராம்சமான தன் சக்தி உலகத்தில்
எத்தனையோ குழந்தை இல்லாத தாய்மார்களில் ஒருத்திக்கு கிடைக்கட்டுமே என நினைத்தார் பரமேஸ்வரன்.
தன் சக்தியை எடுத்துச் செல்லும்படி வாயுபகவானுக்கு உத்தரவிட்டார். புஞ்ஜிகஸ்தலை என்ற
தேவலோக அப்சரஸ் பூலோகம் வந்தாள். வந்தவள் ஒரு காட்டில் தவம் செய்த ரிஷியை கேலி செய்தாள்.
அந்த ரிஷி அப்பெண்ணை குரங்காக போகும்படி
சபித்தார். உடனே அவள் தன் தவறை உணர்ந்து வருந்தி சாப விமோசனம் கேட்டாள். அவளது கண்ணீர்
கண்ட முனிவரும் பெண்ணே நீ நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியை தருகிறேன்
என்று வரம் தந்தார்.
அந்த பெண் அடுத்த பிறவியில் கேசரி
என்ற வானர மன்னனுக்கு வாழ்க்கைபட்டாள்.அந்த பிறவியில் அவளுக்கு அஞ்ஜனை என்று பெயர்.
அஞ்ஜனை என்றால் மை பூசிய பேரழகி என்று பொருள். ஒருநாள் அவள் அப்சரஸாக மாறி ஒரு மலைச்சிகரத்தில்
உலவிக்கொண்டிருந்தாள்.
அப்போதுதான் வாயுபகவான் அவளை பார்த்து
அவள் அழகில் மயங்கி அவளை தழுவிக் கொண்டார். தன்னை யாரோ அணைப்பதை உணர்ந்த அஞ்ஜனை ஒரு
பெண்ணிடம் இப்படியா நடப்பது என்று கதறினாள்.
அப்போது வாயுபகவான் காட்சி அளித்து
பெண்ணே உன்னை நான் தவறான நோக்கத்துடன் நான் தழுவ வில்லை! மனதால் மட்டுமே ஸ்பரிசித்தேன்.
ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன் அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை
நீ அறிந்திருக்கத்தானே செய்கிறாய்! நானும் ஒரு தேவன் என்பதால் உன் கற்புக்கேதும் களங்கம்
ஏற்படவில்லை! நீ உலகம் புகழும் ஒரு உத்தம புத்திரனை பெறுவாய் என்று ஆசிர்வதித்து மறைந்தார்.
அஞ்ஜனை கர்பமானாள். மார்கழி மாத மூல
நட்சத்திரத்தில் அழகான ஒரு புத்திரனை பெற்றெடுத்தாள். வாயு மைந்தன் பிறந்தவுடனேயே வானில்
பறக்க ஆரம்பித்தான். அழகில் சிறந்த அவனுக்கு முதலில் மாருதி என்ற பெயர்சூட்டினாள் அன்னை
அஞ்ஜனை. பின்னர் அஞ்ஜனை மைந்தன் ஆஞ்சநேயர் ஆனார்.
அனுமனின் குரு சூரியன். சூரிய பகவானிடம்
வியாகரணம் படித்தார் ஆஞ்சநேயர் அதற்கு குருதட்சனையாக சூரியன் மைந்தன் சுக்ரீவனுக்கு
மந்திரியாக இருந்து வழி நடத்தி சென்றார்.
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்
கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்
எம்மை அளித்து காப்பான்.
பொருள்: வாயுவுக்கு பிறந்த அனுமன் ஆகாயத்தில் பறந்து கடல் தாண்டி இலங்கை சென்று
பூமாதேவியின் மகளான சீதையைக் கண்டு அவளை மீட்க இலங்கைக்கு தீ வைத்தான். அத்தகைய தீரம்
மிக்கவன் தம்மையே அளித்து நம்மை காப்பான்.
அஞ்சிலே ஒன்று- வாயு
அஞ்சிலே ஒன்றைத்தாவி நீர் - ஆகாயம்
அஞ்சிலே ஒன்றுபெற்ற - பூமி
அஞ்சிலே ஒன்று வைத்தான் நெருப்பு
தகவல் உதவி: ஆன்மீக நூல்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
ReplyDeleteஅஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்
கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்
எம்மை அளித்து காப்பான்.
தெளிவான அர்த்தமுடன் பகிர்ந்ததற்கு நன்றிங்க. ஜெய் ஆஞ்சனேயா.
அணைத்து இந்துக்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய சரித்திர கதை
ReplyDeleteஅருமையான பதிவு....உங்களுக்கு என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/