ஓல்டு ஜோக்ஸ் பகுதி 6


ஓல்டு ஜோக்ஸ் பகுதி 6
 (1 முதல் 7வரை  டூ ஓல்டு அதாங்க ரொம்பப்பழசு)
1.இதென்ன புதுப்புடவையிலே கிழிசல், ஒட்டு, தையல்?
 இந்த புடவைக்கு “பிச்சைக்காரி”ன்னு பேர். பிச்சைக்காரி படத்துல ஹீரோயின் கட்டியிருந்த புடவை இதாம்மா! இதுதான் இப்ப பேஷன்.
                                   சுதர்ஸன்.

2.உனக்கு எது பிடிக்கும்? வீரமா? கல்வியா? செல்வமா?
 வீ.ரமா சார்!
                  தூத்துக்குடி ஜோ.

3.டார்லிங்க்! இவ்வளவு வேகமா போகாதீங்க பயமா இருக்குது!
என்னைப் போல கண்ணை மூடிக்கோ! பயமே இருக்காது!
                          எம்.கே வெங்கடேசன்.

4.அத்தை நான் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன்!
அடே! எப்படி?
ஒவ்வொரு பாத்திரமா விற்றுக் காசாக்கிட்டேன்!

5.மிருக இயல் ஆய்வுக்கூடத்திற்கும் விரிவுரை வகுப்பிற்கும் என்ன வித்தியாசம்?
அங்கு நாங்க அறுப்போம்! இங்க நீங்க அறுக்கறீங்க?
                                     கலியபெருமாள்.

6.கல்யாணமானதிலேருந்து எனக்கு வாழ்க்கையே கசந்து விட்டதடா?
அடப்பாவமே ஏன் இப்படி?
என் மனைவிக்கு பாகற்காய் கறி, வேப்பம்பூ ரசம் இரண்டுதான் சமைக்கத் தெரிஞ்சிருக்கு!

7.ஸாரி சார்! கை தவறி உங்க பேண்ட் மேலே காப்பியைக் கொட்டி முன்பக்கமெல்லாம் கறைபடுத்திவிட்டேன். இன்னொரு கப் காப்பிக்கு ஆர்டர் தருகிறீர்களா? இதேபோல் பின்பக்கமும் கொட்டிவிடுகிறேன் இரண்டுபக்கமும் ஒரே நிறமாக போய்விடும்.
 (8 முதல் 21 வரை ஓல்டு அதாங்க பழசு)
8.சார் உங்க படத்துல க்ளைமாக்ஸிலே எல்லா கேரக்டர்களும் செத்திடுறாங்களே ஏன்?
 எவனும் சம்பளமுன்னு வந்திடக்கூடாதுன்னுதான்!
                             சென்னிமலை சி.பி. செந்தில்குமார்.

9.சென்சார் அதிகாரிகளுக்கு பிடிச்ச காய் எது தெரியுமா?
 கத்திரிக்காய்தான்!

                         ஆதி நாராயணன்.
10.மதுக்கடைக்காரர் படம் எடுக்கிறாராம். என்ன பெயர் வெச்சிருக்காரு?
மப்புக்காகவாம்!

                          பசுவை எம்.எஸ்.ராஜா. தஞ்சாவூர்.

11.இருநூறு ரூபாய்ல புடவை எடுத்திட்டு ஐநூறு ரூபாய்க்கு பில் போடச் சொல்றீங்களே எதுக்கு?
பக்கத்து வீட்டுக்காரி நானூறு ரூபாய்ல புடவை எடுத்திருக்கா. அவகிட்ட காண்பிக்கத்தான்!
                                      சுகுமார், அவிநாசி.

12.எங்க தலைவரை எதிர்கட்சிக்காரங்க ஜெயில் கம்பி எண்ண வைக்கிறோம்னு சொல்றாங்க. அது மட்டும் நடக்காது..
 ஏன்?
எங்க தலைவருக்குத்தான் ஒண்ணு ரெண்டே தெரியாதே!
                                     வி. சாரதிடேச்சு.

13.அந்த ஆளுக்கு வியாபாரத்துல நல்ல பணம் வந்ததும் உடம்பு ஊதிப்போச்சு!
என்ன வியாபாரம் பண்றாரு?
பலூன் வியாபாரம்!
                             வி.சாரதிடேச்சு

14.என்னம்மா! கர்ணன் அண்டு கோ என்று டைப் பண்ணுவதற்கு கும்ப கர்ணன் அண்டு கோ ன்னு டைப் பண்ணியிருக்கே?
தூக்க கலக்கத்திலே தவறு நடந்துடுச்சு சார்!
                                        ஜி.குமரேசன்.

15.ஏம்பா பட்டப்பகல்ல கொள்ளை அடிச்சிருக்கியே?
என்ன செய்யறது சாமி! வயசாயிருச்சி. ராத்திரி கண்ணு சரியா தெரியலை!
                                       எஸ் விஜயா சீனிவாசன்.

16.உங்க பையன் பெரிய ஆளா இருக்கிறார். ஆனால் ஒரு சின்ன பையன் கூட ஃப்ரெண்ட்ஷிப் வச்சிருக்கார்!
அவனோட “பால்ய” சினேகிதன்ங்க!
                                  வி.சுகுமார்.

17.என்ன நீ மூணு வேளையும் இப்படி பிச்சை கேட்டு வர்றீயே?
நான் வேளா வேளைக்கு சாப்பிடணும்னு என் ஃபேமிலி டாக்டர் சொல்லிவிட்டார் அதனாலதான் தாயீ!
                       ரேஸ்.கிருஷ்ண ரத்னம்.

18.டாக்டர் வீடுவீடா பிச்சை கேக்குற மாதிரி கனவு வருது டாக்டர்!
வேறொண்ணுமில்லை! தேர்தலுக்கு தயாராயிட்டீங்க, அவ்வளவுதான்!
                               அ. முத்துசாமி.

19.பஸ் கண்டக்டரை ஏன்யா இழுத்துட்டு வந்தீங்க?
ஈவ் டீசிங் சார்! பஸ்ஸில பொம்பளைங்க இருக்கும் போது விசில் ஊதறார்!
                            சம்பத்குமாரி.

20.ரொம்ப அடிபட்டு வாழ்க்கையிலே முன்னுக்கு வந்தேன்!
என்ன தொழில் பண்றீங்க?
ஸ்டண்ட் மாஸ்டரா இருக்கேன்!
                      சென்னிமலை சி.பி செந்தில்குமார்
.
21.நன்றியுள்ள நாடு பாகிஸ்தான் தாண்டா!
எப்படிடா சொல்றே?
அதுதானே நம்மகிட்ட வாலாட்டிகிட்டே இருக்கு!
                           க. பூங்கொடி.

நன்றி: குமுதம் பழைய இதழ்கள்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. ஹா ஹா ஹா ஹா !!! செம சிரிப்பு நண்பரே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!