மூன்றாவது ஆண்டில் தளிர்!


மூன்றாவது ஆண்டில் தளிர்!

அன்பார்ந்த வாசக நெஞ்சங்களே! நண்பர்களே! அன்பர்களே! உங்களின் மகத்தான ஆசிகளுடனும் ஆதரவுடனும் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தளிர்.
     இதே நான்காம் தேதி ஜனவரி 2011ல் தளிர் துளிர்விட ஆரம்பித்தது! வலைப்பூ என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு வலைப்பூ ஆரம்பித்தேன்! அப்போது நான் டியுசன் வகுப்பு எடுத்து கொண்டிருந்தேன்! அந்த மாணவர்களுக்கு வருடம் தோறும் பொங்கல் வாழ்த்து தருவேன்! அந்த வாழ்த்தையே முதல் பதிவாக போட்டேன்!
    எனது முதல் பதிவை வாசித்தவர்கள் மிகவும் குறைவு! ஒரு நாளைந்து பதிவுகளுக்கு அப்புறம் பின்னூட்டம் கிடைக்கவில்லை! என்று என் மனைவியையே முதல் பின்னூட்டம் இடச்செய்து நானே அனானியாக ஒரு கமெண்டும் போட்டுக்கொண்டு மகிழ்ந்தேன்! பாலோயர் இல்லை என்று இரண்டு மூன்று அக்கவுண்டில் பாலோயர் ஆக இணைந்தேன்.
   அப்புறம் தற்செயலாக ப்ளாக்கர் நண்பன் தளம் பார்க்க நேர்ந்து  அவரது ஆலோசனைகளை படித்து திரட்டிகளில் இணைத்தேன். இதற்குள் ஏப்ரல் மாதம் வந்து விட்டது. இதற்கிடையில் இணைய இணைப்பு இரு முறை துண்டிக்கப்பட்டது. அப்புறம் அலேக்ஸாவில் இணைந்தேன். பின்னர் தமிழ் மணம்.
    தமிழ் மணத்தில் இணையும்போது 1050வது ரேங்கில் இருந்தேன்! அப்போது ஜீலை மாதம் என்று நினைக்கிறேன். ஆகஸ்ட் செப்டம்பருக்குள் 500 ரேங்குக்குள் வந்தேன். அப்போதுதான் ஆரம்பித்தது பிரச்சனை!
    தளிர் என்றாலே களைகள் இருக்கும் அல்லவா? காப்பி _ பேஸ்ட் என்ற களை  தளிரில் புகுந்தது. இதனால் அலேக்ஸா ரேங்கும் அதிகமாக கிடைக்க களை அதிகரித்து விட்டது. தமிழ் மணம் எச்சரிக்கை செய்தாலும் கண்டு கொள்ளவில்லை! அதனால் நீக்கிவிட்டது. பின்னர் அதுவே தொழிலாகி போனது.
   2012 ஜனவரியில் பிறந்த நாள் கொண்டாட பி.எஸ்.என்.எல் விட வில்லை! இணைய இணைப்பு நான்கு வழி சாலை பணிகளால் துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில் எனது அலேக்ஸா ரேங்க் படு பாதளத்திற்கு சென்று விட்டது ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு மேல் பதிவிட வில்லை!
      ரிலையன்ஸ் இணைப்பு வாங்கி மீண்டும் காப்பி_பேஸ்ட் செய்து வெளியிட ஓரளவுக்கு பழைய நிலை வந்தது. தமிழ் மணத்திற்கு மெயில் அனுப்பினேன். ஆனால் என் போதாத காலம் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய ஒரு பதிவு காப்பி_ பேஸ்டாக அமைய  அவர்கள் இணைக்க மறுத்து விட்டார்கள்.
     மீண்டும் அதே சாக்கடையில் விழுந்தேன்! காப்பி_ பேஸ்ட் நிறைய செய்தேன்! பதிவு அதிகரித்தது. வாசகர்கள் அதிகரிக்கவில்லை! தவறு செய்கிறோம் என்று தோன்றியது. பலரது வலைப்பூக்களை அப்போதுதான் படிக்க ஆரம்பித்தேன் அவர்களது வலைப்பூவில் இணைந்தேன். கருத்திட்டேன். எனக்கும் வாசகர்கள் வர ஆரம்பித்தார்கள். கருத்துரைகளும் குவிந்தன
   அப்புறம் தினம் ஒரு விதத்தில் பதிவு என்று ஆரம்பித்து அதன் படி செய்து வருகிறேன்! இதற்கிடையில் கொன்றை வானத்தம்பிரான் என்ற வாசக அன்பரோடு ஓர் உரசல் வேறு.
    வலைப்பூ ஆரம்பித்த புதிதில் தமிழ்வாசி பிரகாஷ் என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தார். இது என் முதல் வலைச்சர அறிமுகம். அப்புறம் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை! 2012 ல் மீண்டும் முதன் முதலாக அறிமுகம் ஆன போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது ஐந்து முறை வலைச்சர அறிமுகம் கிடைத்தது. பாலோயர்கள் இல்லாமல் இருந்தது இப்போது 127 பாலோயர்கள்.
   நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்!
காப்பி_ பேஸ்ட் என்னும் களைக்கு கொஞ்சம் மருந்தடித்து உள்ளேன்! அவ்வப்போது தளையெடுத்தாலும் களையெடுத்து சிறப்பான வலைப்பூவாக தளிர் இந்த ஆண்டில் மிளிரும் என்பது என் நம்பிக்கை!
   உங்களின் ஆதரவோடு அந்த நம்பிக்கை பூர்த்தியாகும் என்றே நினைக்கிறேன்!
தொடர்ந்து வந்து வாசித்து கருத்துரை இட்டு மகிழ்வித்து வரும் அன்பர்களுக்கும் கருத்துரை இடாது சைலண்ட் ரீடராக இருக்கும் அன்பர்களுக்கும் எனது நன்றிகள்.
  முதல் கருத்துரை இட்டவர் mahan thamesh. அவருக்கு நன்றிகள்! இப்போது அவர் வந்து படிக்கிறாரா என்பது தெரியவில்லை! இப்போது தவறாமல் வந்து கருத்திட்டு ஊக்குவிப்பவர் சீனிகவிதைகள் சீனி. இது தவிர எழில், ரமணி ஐயா, எங்கள் பிளாக் ஸ்ரீராம், டி.என் முரளிதரன், திண்டுக்கல் தனபாலன்,போன்றோரும் தொடர்ந்து கருத்திட்டு ஊக்குவித்து வருகிறார்கள்!
   இதில் பெயர் சொல்லாதவர்கள் கோபித்து கொள்ள வேண்டாம்!  உங்களை எனக்கு நினைவில் இருக்கிறது! பதிவின் சுவாரஸ்யம் கெடாமல் இருக்க சுருக்கமாக ஒன்றிரண்டு நபர்களை மட்டும் குறிப்பிட்டேன்! முதலில் கமெண்ட் வராமல் கஷ்டப்பட்டேன் இன்று இதுவரை 2092 கருத்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளேன்! இதில் இருந்து ஒன்றை தெரிந்து கொண்டேன்! முயற்சி திருவினையாக்கும்! நல்ல பதிவுகள் கட்டாயம் வரவேற்பை பெறும் என்பதுதான்!
   1280 பதிவுகள் கடந்தாலும் சொந்த பதிவுகள் கம்மிதான்! இந்த ஆண்டு அது அதிகரிக்கும் என்றே நம்புகிறேன்! உங்கள் ஆசிகளுடனும் ஆதரவுடனும் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்! கரம்பற்றி அழைத்துச் செல்வீர்!
         அன்புடன்!
                         தளிர்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வாழ்த்துக்கள் சுரேஷ்.
    திறமைசாலி நீங்கள்; காபி பேஸ்ட் வேண்டாம். அந்த செய்தியை உங்கள் பார்வையில் விமர்சனமாக எழுதுங்கள். நிச்சயம் கூடுதல் வரவேற்பு கிடைக்கும்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.. இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றி ஆண்டாக அமையட்டும்.

    அன்புடன்
    அமர்க்களம் கருத்துக்களம்,
    http://www.amarkkalam.net/

    ReplyDelete
  3. சுரேஷ் சார் உங்க இந்தப்பதிவு எனக்கு ரொம்பவே உபயோகமாக இருக்கும். நான் வலிப்பூ ஆரம்பித்தே 4 தினங்கள்தான் ஆகிறது. நிறைய கற்றுக்கொள்ள ஆசைதான் ஆனா யாரைக்கேட்டுத்தெரிந்து கொள்வது என்பதில் சிறு குழப்பம். நானும் முதலில் சைலண்ட் ரீடராகத்தான் படித்துக்கொண்டிருந்தேன். பலரின் வலைப்பூக்கள் போயி 0படித்துப்பார்த்ததும் கமெண்ட் போடவோ ஃபாலோவராக இணைச்சுக்கவோ முடியவில்லை.அப்புறம் தான் நாமே ஒரு வலைப்பூ தொடங்கலாமேன்னு நினைத்து 2013-ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வெற்றிகரமாக பூந்தளிர் என்னும் பெயரில் வலைப்பூ தொடங்கி விட்டேன். இப்ப எல்லார் பக்கத்திலும் கமெண்டும் போட முடிகிறது, ஃபாலோவரகவும் இணைச்சுக்க முடிகிறது. என் பக்கமும் நிறைய பேரு வந்து கமெண்ட் போட்டு என்னை உற்சாகப்படுத்துகிறார்கள்.இது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. சுரேஷ் சார் என்னமோ திரட்டி பற்றியெல்லாம் சொல்லி இருக்கீங்க. எனக்கு சரியா விளங்கவே இல்லியே. அது எப்படி இணைச்சுக்கணும்?

    ReplyDelete
    Replies
    1. இண்டிலி, தமிழ்மணம், தமிழ்10 யுடான்ஸ் போன்றவை திரட்டிகள்! இது நம்பதிவுகளை திரட்டி ஒரே இடத்தில் தரும். இவைகளை இணைப்பது குறித்த தொழில் நுட்ப தகவல்களுக்கு ப்ளாக்கர் நண்பன் இணையதளம் செல்லவும்.

      Delete
  5. தொடருங்கள் சுரேஷ்.புதிய உயரங்களைத் தொட வாழ்த்துகள்

    ReplyDelete
  6. பழைய நினைவுகளை மறக்காமல் நினைவில் வைத்துள்ளவர்கள் வெகு சிலரே...இதில் இருந்தே தெரிகிறது...
    நீங்க நிச்சயமாக சோதனைகளை
    தகர்த்தெரிந்து சாதனையாக மாற்றுவீர்கள்...

    ReplyDelete
  7. பழைய நினைவுகளை மறக்காமல் நினைவில் வைத்துள்ளவர்கள் வெகு சிலரே...இதில் இருந்தே தெரிகிறது...
    நீங்க நிச்சயமாக சோதனைகளை
    தகர்த்தெரிந்து சாதனையாக மாற்றுவீர்கள்...

    ReplyDelete
  8. மென்மேலும் சிறப்பான பதிவுகளிட்டு சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சுரேஷ். உங்கள் பதிவுகளை ஓரளவுக்குத் தொடர்வதனால் சொல்கிறேன். உங்கள் எழுத்துக்களை நம்புங்கள் அதுவே அருமையாக இருக்கும்போது மற்றவர் எழுத்துக்களை ஏன் பதிவிடுகிறீர்கள்? பதிவுகள் குறைந்தால் தவறில்லை... நம் சொந்தப் பதிவுகள் என்றுமே நம் குழந்தைகள் அதன் வளர்ச்சியில் நமக்கு மகிழ்வுதானே?

    ReplyDelete
  10. வாழ்த்திய அனைத்து அன்பர்களுக்கும் மிக்க நன்றி! உங்கள் கருத்துரைகள் அறிவுரைகள் ஏற்று சிறப்பாக தளிர் பூக்கும்! மிக்க நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2