அதே பழைய கதை!
அதே பழைய கதை!
நடுத்தர வயது மனிதர் ஒருவர், அந்த கல்லூரி விடுதிக்கு வந்து ஒரு குறிப்பிட்ட
அறையின் கதவை தட்டினார். அந்த அறையில் இருந்த மாணவர் கதவைத் திறந்து, என்ன வேண்டும்?
எனக் கேட்டார்.
வந்தவர், தான் அந்த கல்லூரி பழைய மாணவன் என்றும் ஹாஸ்டலில் அதே அறையில்
தங்கி படித்ததாகவும், பழைய ஞாபகம் வந்ததால் பார்த்து விட்டு போக வந்தேன் என்றும் சொன்னார்.
அவரை உள்ளே வரச்சொன்னான் மாணவன்.
அதே பழைய மேஜை! அதே பழைய புத்தக ஷெல்ப்!
அதே பழைய நாற்காலி! என்றார் அவர்.
பிறகு பீரோவின் அருகே சென்று “அதே பழைய
பீரோ!” என்று கூறியபடியே அதன் கதவைத்திறந்தார்.
உள்ளே ஒரு அழகான பெண் மறைந்து கொண்டிருந்தாள்.
அந்த மாணவன் சொன்னான்: அவள் என் கசின்!
“அதே பழைய கதை!” என்றபடியே வாசலை பார்க்க
நடந்தார் வந்தவர்!
பழைய
புத்தகம் ஒன்றில் படித்தது.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்து கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
எல்லாம் ஒரே கதைதான் போல..........பகிர்விற்கு நன்றி சுரேஷ்.
ReplyDeleteஇளமைத் துள்ளலின் இனிய நினைவுகள் அழகான கவிதையானது! பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteஆஹா கதையா இது. அப்ப நல்லாதான் இருக்குங்க.
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅதே பழைய கதை .
ReplyDelete