தளிர் ஹைக்கூ கவிதைகள்! 17


தளிர் ஹைக்கூ கவிதைகள்!
 
தலைசாய்த்து வெட்டினார்கள்
கத்தவில்லை!
முடி



வயிற்றில் புண்
வலிக்கவில்லை
 ஜோக்

 
இரவில் பூத்தன
மரங்கள்
மின்மினிபூச்சிகள்

ரொம்பநேரமாய் வாசித்தும்
கேட்கவில்லை
படத்தில் சரஸ்வதி

எத்தனை பெரிய பொட்டு
இட்டுக் கொண்டவானம்!
அந்திச் சூரியன்!

அறை முழுவதும்
நிறைந்திருந்தது
ஊதுபத்தி!

போகுமிடம் ஒன்றுதான்
பயணம் பலவழிகளில்
மரணம்!
 
சுகமான தழுவல்
சொக்கிவந்தது தூக்கம்
காற்று!

காலிப்பாத்திரத்தில்
சமைத்து பசி ஆற்றுகிறது
குழந்தை!

பிறந்தவுடன் பறந்து
மரணித்தது
நீர்க்குமிழி

உள்ளக் குமுறலில்
வார்த்தைகளில் வெடிக்கிறது
கோபம்!

மொட்டை போட்டன
மரங்கள்
இலையுதிர்காலம்!

வண்டுகள் இசையில்
தன்னை இழந்தன
 மலர்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. காலிப் பாத்திரங்கள் , மொட்டைப் போட்டன
    வெகுவாகக் கவர்ந்தது .
    அனைத்துமே அழகு தான்.

    ReplyDelete
  2. சுகமான தழுவல்
    சொக்கிவந்தது தூக்கம்
    காற்று!//

    ஆஹா ஆஹா சூப்பர்ப்.....!

    ReplyDelete
  3. அனைத்து ஹைகூ “ க்களும் நன்றாயிருந்தன பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அனைத்து ஹைகூக்களும் சூப்பர் அண்ணா

      Delete
  4. ovvontrum...


    arumai sako...


    vaazhthukkal....

    ReplyDelete
  5. தெளிவான படைப்பு .. வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  6. ஹைக்கூவை நன்கு புரிந்து படைத்த படைப்புகள்.தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  7. சொக்கும் இந்தக்
    கவிதைக்குச் சொந்தம்
    சுரேஷ்.

    (இதுவும் ஹைக்கூதான்)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2