நான் ரசித்த சிரிப்புக்கள் 10

நான் ரசித்த சிரிப்புக்கள் 10 தலைவருக்கு என்ன திடீர்னு தமிழ்மேல பற்று ? செல்போனை கைபேசின்னு தூய தமிழ்ல சொல்லுறாரு? செல்லுன்னா அவருக்கு ஜெயில் ஞாபகம் வருதாம்! வி.சகிதா முருகன். திருட்டுப் பணத்தை செலவழிச்சு கபாலி வீடு கட்டறானாமே? ஆமா அது அவனோட களவு வீடு! கவின் அந்த நர்ஸ் என்மேல உயிரையே வச்சிருக்காங்க டாக்டர்! எப்படி சொல்றீங்க? ஆபரேஷணுக்கு சம்மதிக்க வேணாம்னு அட்வைஸ் பண்ணினாங்களே! பி,ஜி.பி இசக்கி. அவர் மனைவியாலே அதிகம் பாதிக்கப்பட்டவர் போலிருக்கு! எப்படி சொல்றே? வாய்ப்பூட்டு கிடைக்குமான்னு கேட்டு வந்திருக்காரே! பெ.பாண்டியன். மன்னரை வெயிட் தூக்கக்கூடாதுன்னு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க! சரி அதுக்காக வாளுக்கு பதில் இடுப்புல பிளேடு கட்டி தொங்க விட்டா எப்படி? எஸ் பிரேமா. தலைவருக்கு அடுத்த வருஷம் டாக்டர் பட்டம் தரப்போறாங்களாம்! அதனால! இந்தவருஷம் தன்பெயருக்கு முன்னால ஹவுஸ் சர்ஜன்னு போட்டுக்கலாமா