பன்னாட்டு பழமொழிகள்!
பன்னாட்டு பழமொழிகள்!
சகோதரர்கள் ஒன்றுபட்டு உழைத்தால் மலையைக் கூட தங்கமாக
மாற்றலாம்.
சீனா.
முறிந்த கையைக் கொண்டு உழைக்கமுடியும். ஆனால் உடைந்த
உள்ளத்தைக் கொண்டு உழைக்க முடியாது.
பாரசீகம்.
மனிதன் பதவியை அலங்கரிக்கிறான். பதவி மனிதனை
அலங்கரிப்பதில்லை!
இத்தாலி.
எந்த மனிதன் சாகும்போதும் அவனுடைய பாதி ஆசைகள் கூட
நிறைவேறுவது இல்லை!.
ஹீப்ரு
குழந்தைகள் இளமையாக இருக்கும்போது பெற்றோர்களுக்குத்
தலைவலி. அவர்கள் வயதானபோது பெற்றோர்களுக்கு நெஞ்சுவலி.
ஸ்காட்லாந்து.
ஒரு மனிதனின் நல்லதிர்ஷ்டமும் துரதிருஷ்டமும் அவனது
மனைவியே!
ஸ்பெயின்.
காரியங்கள் தாமாக நடப்பது இல்லை!
நடக்கச்செய்யவேண்டும்!
இங்கிலாந்து.
நம் கைகளை உபயோகிப்பதனால் நாம் மேலும் பலமடைகிறோம்.
மூளையைஉபயோகிப்பதனால் மேலும் அறிவு அடைகிறோம். இருதயத்தை உபயோகிப்பதனால்
கருணையுடையவர்களாகிறோம்.
ரஷ்யா.
காரியங்களை திட்டமிடுபவன் மனிதன், அவைகளை
நிறைவேற்றுபவன் இறைவன்.
சீனா.
கடவுளை ஏமாற்ற நினைக்கிறவன் ஏற்கனவே தன்னை
ஏமாற்றிவிட்டான்.
இத்தாலி.
தொடக்கத்தைவிட முடிவைப்பற்றி அதிகமாக சிந்தனை செய்!
ஆர்மீனியா.
சமாதானம் செல்வத்தை உண்டாக்குகிறது! செல்வம் சண்டையை
உண்டாக்குகிறது!
பிரான்ஸ்.
சமயத்தில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட
தங்க ஆப்பிள் மாதிரி!
சைலீஷியா.
Comments
Post a Comment