“கண்”டதை சொல்கிறேன்!
“கண்”டதை சொல்கிறேன்!
சென்ற மாதத்தில் ஒரு
நாள் என் ஊரிலிருந்து சென்னை செல்ல நேரிட்டது! என் ஊர் ஒரு கிராமம் பஸ் வசதி
கிடையாது. என்னிடம் ஒரு டி.வி.எஸ். எக்ஸ்.எல் உண்டு. அவ்வண்டியில் அருகில் உள்ள
பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பஸ் பிடித்து செல்வேன். ஆனால் நான் சென்னையில் ஒரு
நாள் தங்க வேண்டியிருந்ததால் என் வண்டியை எடுத்துச் செல்லவில்லை. வீட்டிலிருந்து
சென்றதும் நண்பர் ஒருவர் லிப்ட் கொடுக்க அவருடன் பஸ் நிலையம் வந்தேன். மாலை நேரம்
சுமார் ஐந்து மணி இருக்கும் கல்லூரி பள்ளிகள் விட்டு மாணவர்கள் வந்து
கொண்டிருந்தனர்.
எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு
பொறியியல் கல்லூரியில் இருந்து தொடர்ச்சியாக பஸ்கள் வந்து கொண்டிருந்தன. சுமார்
ஐம்பதுக்கும் மேல் அந்த பஸ்கள் வரிசை நீளவே பெரிய நெரிசலே ஏற்பட்டது அந்த சாலை
சந்திப்பில் அப்படி ஒரு நீண்ட வரிசையில்
பஸ்கள் அணி வகுத்தன.
சாலையில் நின்ற நான் கண்ட காட்சிஅந்த பஸ்ஸில்
படிக்கும் இளசுகளை பற்றியது. எப்படியோ கஷ்டப்பட்டு கடனை வாங்கி படிக்க அனுப்பும்
பெற்றோர் கூடவே ஒரு செல்போனையும் வாங்கி கொடுத்து விடுவார்கள் போலும். அனைவர்
காதிலும் கவச குண்டலம் போல் செல்போன் ஹியரிங்க் கையில் செல்போன் அதில் விரல்கள்
நர்த்தனமாடின.
இவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ எஸ்.எம்.எஸ்
அனுப்புகிறார்கள் இவர்களால் செல்போன் கம்பெனிக்காரர்கள் வாழ்கிறார்கள். அப்படி
எங்கெங்கு காணினும் செல்போனடா! என்று எவர்கையிலும் இன்று செல்போன் தவழ்கிறது. ஆயிரம்
ரூபாய்க்கு மூன்று என்று கூவி அழைத்து விற்காத குறைதான்!
ஒழிந்து போகட்டும் செல்போனில் பாட்டு
கேட்கட்டும்! அரட்டை அடிக்கட்டும், ஆனால் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள
வேண்டும் என்ற நாகரீகம் கூடவா தெரியாது. பொது பேருந்தில் இந்த மாணவர்கள் ஏறி
அடிக்கும் கும்மாளம் பார்க்க சகிக்கவில்லை! இதைக் கூட பொருத்துக் கொள்ளலாம்.ஆனால்
நான் கண்ட ஒரு காட்சிதான் இக்கட்டுரையை எழுத வைத்தது. பட்ட பகலில் என்று சொல்ல
முடியாது தான் ஆனால் முழுதும் இருட்டாத பொழுதில் ஒரு பேருந்தில் சற்று இருக்கைகள்
காலியாக உள்ள பேருந்து தான் அது அதில் நான் கண்ட காட்சி என்னை
அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அப்படி எதை கண்டுவிட்டாய் என்கிறீர்களா அந்த
பேருந்தின் கடைசி இருக்கைக்கு முன் உள்ள மூன்று பேர் அமரும் இருக்கை அது அதில் இரு
மாணவர்கள் அமர்ந்து வந்தார்கள் அதில் என்ன தவறு என்கிறீர்களா?
மாணவன் ஒருவன் மற்றவள்
மாணவி மாணவன் அம்மாணவியின் மடியில் அமர்ந்து வந்தான். இதில் சில்மிஷங்கள் வேறு.
இதற்கு முன் சீட்டிலும் பயணிகள் இருந்தார்கள் பின்னால்தான் யாரும் இல்லை! இதை நான்
வெறொரு பேருந்தில் இருந்து பார்த்தேன். என் உள்ளம் கொதித்தது.
இவர்களை படிப்பதற்குத் தானே கல்லூரிக்கு
அனுப்புகிறார்கள்! இப்படி உரசுவதற்கா அதுவும் இப்படி பப்ளிக்காகவா? சே என்ன
ஜன்மங்கள் இது! இவர்களுக்கு யார் இந்த தைரியத்தை கொடுத்தது? அந்த பஸ்ஸில் இருந்த யாரும் இதை கண்டு கொள்ள
வில்லையே இப்படி எல்லாம் என்னுள் கேள்விகள் எழுந்தன?
இது ஏன்? படிக்கும் வயதில் இந்த காமம் தேவையா?
இவர்களுக்கு இந்த தைரியம் எப்படி வந்தது? நமது கலாச்சாரம் பண்பாடு என்கிறோமே அது
எங்கே போனது?
நம் வீட்டு வறவேற்பறை
வந்துவிட்ட ரியாலிட்டி ஷோக்கள் செய்யும் வேலையா? இனையம் செய்யும் வேலையா? ஒன்றும்
புரியவில்லை!
இதை விடுங்கள் இப்போதைய சிறுவர்கள் கூட
ரொம்பவே விவரமாகி விட்டார்கள்! எங்கள் ஊரில் நாலாவது படிக்கிறான் ஒரு பையன்! அவன்
தன் சகாவை மிரட்டிக் கொண்டிருந்தான்! டேய் என்ன ரொம்ப ஒட்டி உரசி பழகறே அவ என் ஆளு
கவனமிருக்கட்டும் என்று.
இந்த கலாசார மாற்றம் எங்கு கொண்டு போய் முடியுமோ
தெரியவில்லை!
எங்கோ ஆரம்பித்து
இங்கு வந்து விட்டோம். செல்போனை காதில் மாட்டிவிட்டால் அருகில் எதுவுமே
சிலருக்குத் தெரிவது இல்லை. அவர்கள் பாட்டுக்கு பாட்டு கேட்டுக்
கொண்டிருக்கிறார்கள். சென்னையில் பேருந்துகளில் ஏறும் அனைத்து இளைஞர் இளைஞிகளுமே
கையில் இயர் போனுடன் செல் போனுடன் தான் காணப்படுகிறார்கள்.
அவர்கள் பேசுவதில்லை. வரும் அழைப்புக்களுக்கு
பதில் பேசுகிறார்கள். நம்மால் இரைச்சலில் ஒழுங்காக பேச முடிவதில்லை. ஆனால்
அவர்களும் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் மணிக் கணக்காக. இதன் நடுவே வீட்டிலிருந்து
தந்தையோ தாயோ அழைக்க கட்செய்து பின் மிஸ்டு கால் கொடுக்கிறார்கள்.
ஒரு பெண் ஒருசமயம் பஸ்ஸில் ஏறி அமர்ந்து பேசி
வந்தவள் பேட்டரி தீர்ந்ததும் வேறு பேட்டரி போட்டுக் கொண்டு பேச
ஆரம்பித்துவிட்டாள். இவர்களுக்கு காதுவலிக்காதா தெரியவில்லை!
எல்லா இளைஞிகள் கையிலும் ஒரு செல்போன் வீட்டை
விட்டு சிறிது தூரம் சென்றதும் எடுத்து பேச ஆரம்பிப்பவர்கள் தன் ஆபிஸோ கல்லூரியோ
வந்தபின் தான் நிறுத்துகிறார்கள். அதே போல் திரும்பும் போது வீடு வந்தவுடன் தான்
நிறுத்துகிறார்கள்.
வாழட்டும் செல்போன்
கம்பெனிக்காரர்கள்!
ணிபொறியை Assembling செய்வது எப்படி? -- http://mytamilpeople.blogspot.in/2009/08/assembling.html
ReplyDelete