சென்னையில் நில அதிர்வு! மக்கள் பீதி!

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
சென்னை: சென்னையின் சில பகுதிகளில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது. மந்தைவெளி, மைலாப்பூர், எழும்பூர், ஆழ்வார்ப்பேட்டை போன்ற பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
மதுரையில் கட்டடங்களில் விரிசல்: இந்த நில அதிர்வு மதுரையின் பல பகுதிகளில் உணரப்பட்டது. இதனால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
ஊட்டி: ஊட்டி மெயின்பஜாரிலும் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள், கடைகள் குலுங்கின. குன்னூரின் மதியம் 2.10 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு காரணமாக ஓட்டல் ஒன்றில் கண்ணாடி நொறுங்கியது. இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவானைக்காவலில் 3 முறை நில அதிர்வு: இந்த நில அதிர்வு திருவானைக்காவல் பகுதியில் அடுத்தடுத்து 3 முறை உணரப்பட்டது. இதனால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள், வீடுகளில் இருந்த சேர்கள், டேபிள்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். சின்ன காஞ்சிபுரம், கலெக்டர் அலுவலக பகுதி, நத்தப்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

நாகையிலும் நிலஅதிர்வு: நாகை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் பள்ளிகளில் இருந்து மக்கள் வெளியே வந்தனர். இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவையின் ராமநாதபுரம், கீரநத்தம், சரவணன்பட்டி போன்ற பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

கடற்கரைகள் கண்காணிப்பு: சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் அந்தமான் தீவுகளில் உள்ள கடற்கரை பகுதிகளில் உஷார்நிலையில் இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. கவுகாத்தி, கோல்கட்டா, பாட்னா, விசாகபட்டினம், கொச்சி, பெங்களூரு சென்னை போன்ற நகரங்களில் இது உணரப்பட்டது.

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே நில நடுக்கம் மையமாக வைத்து ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 8.7 ஆக பதிவானது.

28 நாடுகளுக்கு சுனாமி எச்சரி்கை: கடுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து நிக்கோபார் தீவுகளுக்கு சுனாமி எச்சரி்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுமத்ராவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக இந்திய பெருங்கடல் சுற்றியுள்ள 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என ஐதராபாத்தில் உள்ள சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.

நன்றி தினமலர்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2