தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்

 தமிழ் தோட்டம் எனும் தளத்தில் திருக்குறளை எளிமை படுத்தும் பொருட்டு சென்ரியுவாய் திருக்குறள் என்ற தலைப்பில் நானும் இன்னும் சில கவிஞர்கள் மு ரமேஷ்,ஹிஷாலி போன்றோர் எழுதி வருகிறோம்! இதுவரை 75 குறள்களுக்கு சென்ரியு எழுதி உள்ளோம். நான் 65 குறள்களுக்கு எழுதி உள்ளேன்! 
   வள்ளுவன் போல் புலமை இல்லாவிடினும் ஏதோ என்னால் ஆன தமிழ் தொண்டு?!!

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 1

ஒலி
ஒளி
உலகின்நாடி

பேச்சுக்கு ஒலியும் உயிர் வாழ்க்கைக்கு ஒளியும் முதன்மை

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 2

கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இயற்கை

எல்லாம் கற்றிருந்தாலும் இயற்கையிடம் பணிந்து போகிறான் மனிதன் என்ற பொருள்!

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 3

கலையாத
அணிகலன்
தமிழ்

தமிழை அணிகலனாக கொண்டவன் புகழ் நிலைத்து நிற்கும்

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்4

மேடு பள்ளம்
அணைக்கிறது
கடல்!

ஏற்ற தாழ்வின்றி மேடு பள்ளங்களையும் தன்னுள் அணைத்துக் கொள்கிறது கடல்.

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 5

அகத்தினுள் அன்பு
புறத்தினுள்
இருவினை!

அன்பாகிய இறைவன் அகத்தினுள் புகுந்தால் இருவினைகளும் புறத்தே தள்ளி நிற்கும்!

 •  தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

 1. அண்ணா உங்கள் சென்ரியு அனைத்தும் அருமை

  ReplyDelete
 2. Blogger ஹிஷாலீ said...

  அண்ணா உங்கள் சென்ரியு அனைத்தும் அருமை

  April 11, 2012 3:38 PM
  Delete

  நன்றி சகோதரி!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2