தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

எல்லோராலும் ரசிக்கப்பட்டது
இழவு வீடு
தொலைக்காட்சி தொடர்

ஓய்வின்றி சுற்றி
வருகின்றன
கடிகார முட்கள்!

மானும் சிங்கமும்
அருகருகில்
கொலுப்படி!
 
கூரையில் இத்தனை
பொத்தல்களா?
இரவு வானம்!

சுட்டெரிக்கும் சூரியனை
பார்த்து சிரித்தன
மலர்கள்!

அழும் குழந்தை!
சமாதான படுத்துகிறது
கார்டூன் டீவி!
 
இரைச்சலில்
தொலைந்து போனது
மவுனம்!

காற்றை விற்று
சோற்றை வாங்குகிறான்!
பலூன் விற்பவன்!

பாராட்டுக்கு காத்திராமல்
ஓயாமல் இசைக்கிறது
தவளை!

குட்டி பாப்பாவுக்கு
சோறுட்டுகிறாள்
குட்டி பாப்பா!

வான மகளுக்கு
இத்தனை போட்டியா?
மேகக் கூட்டங்கள்!

உழைத்து தேய்ந்தவைகளுக்கு
ஒருநாள் ஓய்வு!
ஆயுத பூஜை!

புதைந்த ஞாபகங்கள்
தோண்டி எடுத்தது
 சந்திப்பு!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்து கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே! நன்றி!


Comments

 1. வணக்கம் பாஸ் எப்படி சுகம்?
  கவிதை சிறப்பு

  ReplyDelete
 2. Blogger K.s.s.Rajh said...

  வணக்கம் பாஸ் எப்படி சுகம்?
  கவிதை சிறப்பு

  April 10, 2012 4:58 PM
  Delete
  நலம் தான் நண்பா! ஆறுவழி சாலை விரிவாக்க பணிகளால் பிஎஸ் எல் பிராட்பேண்ட் இணைப்பு எங்கள் பக்கத்தில் துண்டிக்க பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக சரிவர பதிவிட முடியவில்லை! இப்போது ரிலையன்ஸ் நெட் கனெக்ட் இனைப்பு பெற்றுள்ளேன். ஆனாலும் இரண்டு நாட்களாக பிளாக்கர் சதி செய்கிறது!

  ReplyDelete
 3. அனைத்து ஹைக்கூ கவிதையும் அருமை அண்ணா

  ReplyDelete
 4. தளத்திற்கு வந்து பின்னூட்டம் இட்ட ராஜ், மற்றும் ஹிஷாலீக்கு என் நன்றிகள்!

  ReplyDelete
 5. அருமையான கவிதைகள் ! வாழ்த்துக்கள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!