Posts

Showing posts from April, 2020

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 101

Image
ஆபரேசன் பண்றதுக்கு முன்னாடி நோயாளிக்கு நம்பிக்கை ஊட்டறா மாதிரி ஏதாவது ரெண்டு வார்த்தை பேசச்சோன்னேனே என்ன பேசினீங்க சிஸ்டர்?     தினம் தினம் செத்து பிழைக்கறதோட ஒரே முறை செத்து போறது பெஸ்ட் இல்லையான்னு கேட்டேன் டாக்டர்! . கட்சி கட்டுப்பாட்டை மீறினா உடனே கட்சியை விட்டு நீக்கிடுவேன்னு நீங்க அறிக்கை விட்டது தப்பா போச்சு தலைவரே! ஏன் என்ன ஆச்சு? கட்சியிலே இப்ப தொண்டர்களுக்கு தட்டுப்பாடா ஆகிப்போச்சு படம் ஆரம்பிக்கிறப்போ ஹீரோயின் தன்னோட உயிரைக் காப்பாத்திக்க ஓட ஆரம்பிக்கிறா படம் முடிகிற வரைக்கும் அவ தன்னோட ஓட்டத்தை நிறுத்தவே இல்லை….!      என்னய்யா இது? நல்ல உயிரோட்டமான கதை வேணும்னு கேட்டீங்களே அதுதான் இது…! சிக்னல் விழுந்தும் ஏன்யா நிற்காம வேகமா வந்துகிட்டிருக்கே? கூட வந்த பைக் காரன் “இருமி”கிட்டே இருந்தான்யா ஊரடங்கு போட்டிருக்குதே எதுக்குய்யா வெளியே வந்து சுத்திக்கிட்டிருக்கே?   ஊட்டுக்கு அடங்காம் இருக்கேன்னு துரத்திவிட்டுட்டாங்க சார்! தல

எடை!

Image
  எடை !    நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு உச்சிவெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்த்து . வாசலில் அமர்ந்து நியுஸ் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்த மணிவாசகம் காம்பவுண்ட் கேட் திறக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்தார் . கேட்டை திறந்தபடி ஒரு 50 ஐ கடந்த நபர் நின்றிருந்தார் .    அழுக்குச்சட்டை , எண்ணெய் காணாத தலை , கிழிசல் லுங்கி அணிந்திருந்த அவர் சிநேகமாய் சிரித்தவாறே ஐயா , பழைய நியுஸ் பேப்பர் எடுக்கறேங்க ! அம்மா வரச்சொல்லியிருந்தாங்க என்றார் .   ஊம் .. என்ற மணிவாசகம் , ” என்ன விலைக்கு எடுத்துக்கறே ?”   ” இங்கிலீஷ் பேப்பர்னா 12 ரூபா கிலோ ! தமிழ்னா பத்து ரூபாங்க !”   “ ரொம்ப கம்மியா யிருக்கே !” ” இல்லீங்க போனமாசம் 10 ரூபா   8 ரூபாதான் எடுத்தேங்க ! இப்ப ரெண்டு ரூபா கூடியிருக்கு !”   ” ஒரு மாசம் பேப்பர் பில் எவ்வளவு தெரியுமா ?”   “ நமக்கெதுக்குங்க அதெல்லாம் ?”   “230 ரூபா சில சமயம் 250 கூட ! ஆனா ஒரு மாசம் பழைய பேப்பரை வித்தா பத்து ரூபாதான் கிடைக