கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 101
ஆபரேசன் பண்றதுக்கு முன்னாடி நோயாளிக்கு நம்பிக்கை ஊட்டறா மாதிரி ஏதாவது ரெண்டு வார்த்தை பேசச்சோன்னேனே என்ன பேசினீங்க சிஸ்டர்?
தினம் தினம் செத்து பிழைக்கறதோட ஒரே முறை செத்து
போறது பெஸ்ட் இல்லையான்னு கேட்டேன் டாக்டர்!
. கட்சி கட்டுப்பாட்டை மீறினா உடனே கட்சியை
விட்டு நீக்கிடுவேன்னு நீங்க அறிக்கை விட்டது தப்பா போச்சு தலைவரே!
ஏன் என்ன ஆச்சு?
கட்சியிலே இப்ப தொண்டர்களுக்கு தட்டுப்பாடா ஆகிப்போச்சு
என்னய்யா இது?
நல்ல உயிரோட்டமான கதை வேணும்னு கேட்டீங்களே
அதுதான் இது…!
சிக்னல் விழுந்தும் ஏன்யா நிற்காம வேகமா வந்துகிட்டிருக்கே?
கூட வந்த பைக் காரன் “இருமி”கிட்டே இருந்தான்யா
ஊரடங்கு போட்டிருக்குதே எதுக்குய்யா வெளியே வந்து சுத்திக்கிட்டிருக்கே?
ஊட்டுக்கு அடங்காம் இருக்கேன்னு துரத்திவிட்டுட்டாங்க சார்!
தலைவரை பார்க்க போகும் போது எதுக்குய்யா கிருமி நாசினி கொண்டு போனே?
அவர் எல்லோர் கிட்டேயும் சீக்கிரமே ஒட்டிக்குவார்னு சொன்னாங்களே!
போர்க்களத்தில் எதற்கு மன்னர் உருண்டு புரண்டு பார்க்கிறார்?
எதிரியிடமிருந்து தப்பி ஒடுகையில் முள் கள் குத்தாமல் இருக்குமா என்று ட்ரையல் பார்க்கிறாராம்!
“கொரானா” விழிப்புணர்வை நம்ம தலைவர் சிறப்பா செஞ்சுகிட்டு வரார் தெரியுமா?
எப்படி?
யார் கூடவும் சேராம “தனித்து” செயல்படறாரே...!
புலவரே நீர் பாடிய பாட்டை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே...!
லாக் டவுனில் இருப்பதால் பழைய பாட்டையே மீண்டும் பாடிவிட்டேன் மன்னா...!
மன்னர் வாசலில் விளக்கேற்ற சொல்கிறாரே எதற்கு?
எதிரி மன்னன் கண் மண் தெரியாமல் வருகிறானாம்!
எப்படி?
யார் கூடவும் சேராம “தனித்து” செயல்படறாரே...!
புலவரே நீர் பாடிய பாட்டை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே...!
லாக் டவுனில் இருப்பதால் பழைய பாட்டையே மீண்டும் பாடிவிட்டேன் மன்னா...!
மன்னர் வாசலில் விளக்கேற்ற சொல்கிறாரே எதற்கு?
எதிரி மன்னன் கண் மண் தெரியாமல் வருகிறானாம்!
ஹா ஹ ஹா எல்லாமே ரசித்தோம் சுரேஷ்.
ReplyDeleteதுளசிதரன், கீதா
ஜோக்ஸ் அருமை
ReplyDeleteதொடர்க
இரசித்தேன்!
ReplyDeleteஇன்னும் தேவை!!
சிறப்பான பதிவுகள்
ReplyDelete