Posts

Showing posts with the label செய்திவிமர்சனம்

சாதனைபெண் டுட்டி சந்த்! உவேசா சிலேடை! கதம்பசோறு!

Image
கதம்ப சோறு! சுவாதி கொலை!         நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் அதிகாலை வேளையில் பலர் முன்னிலையில் துடிதுடிக்க கொல்லப்பட்டிருக்கிறார் சுவாதி. ரயில்நிலையத்தில் பாதுகாப்பு இல்லை என்பது ஒருபுறம் இருக்க ஒருவர் கூட இதை தடுக்கவோ கொலையாளியை விரட்டி பிடிக்கவோ முனையவில்லை என்பது தமிழ்நாட்டில் மனிதாபிமானம் செத்துப்போனதை காட்டுகிறது. இதற்கிடையில் பேஸ்புக்கில் சிலர் இறந்த பெண்ணிண் ஜாதியை காரணம் காட்டி அவர்கள் திமிர் பிடித்தவர்கள் வருந்த வேண்டாம் ஜாதி மோதலை உருவாக்கி வருகின்றனர். ஒய். ஜி மகேந்திராவும் தன் பங்கிற்கு முஸ்லிம் நபர்தான் கொலை செய்தது என்று ஒரு பெயரைச் சொல்லி பின்னர் நான் சொல்லவில்லை என்று பல்டி அடிக்கின்றார். பட்டப்பகலில் ஒரு கொலை நடந்திருக்கிறது. பலர் கூடும் இடத்தில் நடந்திருக்கிறது. மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதை பேசாமல் இப்படி ஜாதிய நோக்கோடு இந்த கொலை பேசப்படுவது ஆரோக்கியமானது இல்லை!  கெஜ்ரிவால்- மோடி மோதல்!      டெல்லியில் ஆட்சியை பிடித்தாலும் அர்விந்த் கெஜ்ரிவால் கல்யாணம் பண...

புத்தக சந்தையில் வெந்ததும் புதுவையின் அரசியலும்! கதம்ப சோறு பகுதி 1

Image
கதம்ப சோறு!  பகுதி 1 சென்ற வருடம் வரை இந்த பகுதியை தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தேன். இடையில் நின்றுவிட்டது. மீண்டும் தொடர்கிறேன். ஆரோக்கிய அரசியல்!         கருத்துக்கணிப்புக்களை பொய்யாக்கி மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிட்டார் அம்மா. ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் கொடுத்தார் என்று ஓர் சர்ச்சை எழ அதற்கு விளக்கம் கொடுத்தார். ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டார். சபாநாயகர் தேர்வு செய்து இருக்கையில் அமர செய்கையில் அவர் விடுத்த அறிவிப்பும் நன்றாகத்தான் இருக்கிறது. ஸ்டாலினும் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பார் என்று சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் தான் எதிர்கட்சிகள் எதிரிகட்சிகளாக இத்தனை நாள் பாவிக்கப்பட்டு இருந்தது. இப்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் நிலையை கொஞ்சம் மாற்றுவதாக அமைந்துள்ளது. ஆனால் கலைஞர் மட்டும் இன்னும் மாறாமல் பழைய சம்பவங்களை கிளறி அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார். வெட்டிப் பிடிவாதங்களை இரு தரப்பும் கலைந்து  இணைந்து செயல்பட்டால் தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லும். இதை உணர வேண்டும் இருதரப்பும். வண்டலூர் விஜயம்!   ...

மோடி -லேடி சந்திப்பும்! கப்பைக்குழம்பும்! கதம்ப சோறு! பகுதி 64

Image
கதம்ப சோறு! மோடியும் லேடியும் சந்திப்பு:        சென்னையில் அரசுமுறைப்பயணமாக முதல் முறையாக பிரதமர் மோடி வந்ததும் அவரை முதல்வர் ஜெயலலிதா வரவேற்றதும், விருந்து அளித்து உபசரித்ததும் இந்தவார டாபிக் ஆகிவிட்டது. பாராளுமன்றத் தேர்தலில் எதிரும் புதிருமாக மோடியா லேடியா என்று மோதிக்கொண்டவர்கள், தமிழக பா.ஜ.க வேறு ஆளும் அரசை கடுமையாக விமரிசித்து வரும் சூழல், பா.ஜ.க தலைவர் அமித் ஷா தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது என்று விமரிசித்து பேசியநிலை இதையெல்லாம் கடந்து முதல்வர் ஜெ. பிரதமரை வரவேற்று விருந்து உபசரிசத்தது நல்லதொரு ஆரம்பமாக அமைந்துவிட்டது. கூட்டாட்சி தத்துவத்தில் நடைபெறும் இந்திய அரசியலமைப்பில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவது மாநிலத்துக்கு நல்லது அல்ல. இந்த சந்திப்பு சுமூக உறவை இரு தரப்பிற்கும் அளித்து தமிழகத்திற்கு நல்லது செய்தால் நன்றாக இருக்கும். இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இந்த சந்திப்பை கள்ள உறவென்று வர்ணிக்கிறார். திமுகவும் மற்றுமொரு கேவலமான சொல்லாடலில் விமர்சிக்கிறது. இந்த இருவர் சந்திப்பில் அரசியல் இருந்தாலும் சரி மாநிலத...

தமிழக அரசியல் கட்சிகளின் மதுவிலக்கு நாடகம்! கதம்ப சோறு! பகுதி 63

Image
கதம்ப சோறு!   தமிழக அரசியல்கட்சிகளின் மதுவிலக்கு நாடகம்!  தீடிரென தமிழகத்து அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது ஓர் நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் உதித்துவிட்டது. உடனே வரிந்து கட்டிக்கொண்டு ஆளாளுக்கு மதுவிலக்கு என்று அறிக்கைவிட ஆரம்பித்து மீடியாக்களில் வலம் வந்தனர். ஆனால் பாவம் இந்த கண்ணாமூச்சி விளையாட்டுக்களுக்கு எல்லாம் குடிமகன்கள் கொஞ்சமும் பயப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லோருக்கும் எப்படியாவது சரக்கு கிடைத்துவிடும் என்று தெரியும். அதனால் பயப்படாமல் குடித்துக் கொண்டிருந்தார்கள். தமிழக அரசும் டாஸ்மாக்கை மூடப்போவது போல ஒரு பாவ்லா ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் வழக்கம் போல் குடிமகன்களுக்கு எந்தபாதிப்பும் இல்லை! புதிதாக எலைட் பார்கள் திறக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள். தலைக்கவசம் மீது இருக்கும் அக்கறைகூட குடிவிலக்கில் இல்லை அரசுக்கு. இரண்டுக்குமே காரணம் வருமானம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மதுவிலக்கைச்சொல்லி ஆட்சியை பிடித்துவிடலாம் என திமுக நினைக்கிறது. குடிமக்களின் ஆதரவோடு ஜெயித்துவிடலாம் என அம்மா திமுக நினைக்கிறது. பணநாயகம் இருக்கும் வரையில் உண்மையான ...