தவளை ராணி! பாப்பா மலர்!
தவளை ராணி! பாப்பா மலர்! முன்னொரு காலத்துல வேங்கடபுரி என்ற நாட்டை வேங்கட நாதன் என்ற ராஜா ஆண்டுவந்தாரு. அவருக்கு மூணு பசங்க. இளவரசருங்க மூணு பேரும் குருகுலம் போய் கல்வியும் வில், வாள் பயிற்சியெல்லாம் எடுத்து வாலிபர்களாக வளர்ந்து நின்னாங்க. அவங்களுக்கு திருமணம் பண்ணி வைக்கணும்னு ராஜா நினைச்சாரு. அந்த சமயத்துல அந்த நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தாரு. வந்தவர் ராஜ தர்பாருக்கு வந்து. “வேங்கடநாதா, நான் தருகிற மூன்று அம்புகளை ஒவ்வொரு மகனிடமும் ஒரு அம்பு கொடுத்து வில்லில் பூட்டி எய்தச் சொல். அந்த அம்பு எங்கே சென்று விழுகிறதோ அங்கு உனக்கு மருமகள் கிடைப்பாள்” அவளையே நீ உன் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இதில் மாற்றம் கூடாது! அப்படின்னு சொல்லிட்டு அம்புகளை கொடுத்துட்டு புறப்பட்டு போயிட்டாரு. அரசனும் தன் மகன்கள் கிட்டே அம்புகளை கொடுத்து எய்தச் சொன்னான். முதல் மகன் எய்த அம்பு பக்கத்து நாட்டு அந்தப்புரத்தில் விழுந்தது. இரண்டாவது மகன் எய்த அம்பு மந்திரி குமாரியின் மடியில் விழுந்தது. மூன்றாவது மகன் எய்த அம்பு ஒரு குளத்தில் இருந்த தவளை மீது விழுந்தது. இரண்டு மகன்களுக்க