இன்று சோமப்பிரதோஷம்
மஹா பிரதோஷ விரதக் கதையும் விளக்கமும். தொகுப்பு சிவஸ்ரீ அ.சாமிநாத சிவாச்சாரியார். நத்தம் மஹாவிஷ்ணு முதலான தேவர்கள் அமிர்தம் அடைவதற்காக பாற்கடலை கடைந்தபோது ஆலகால விஷம் தோன்றியது. அது கண்டு அஞ்சிய அனைவரும் உயிர் காத்தருள்க என்று ஓலமிட்டுக்கொண்டு இடமாகவும் வலமாகவும் சென்று சன்னதியின் முன்னுள்ள ரிஷப தேவனது அண்டத்தில் ஒளிந்து கொண்டனர். கருணாமூர்த்தியான சிவன் ரிஷப தேவனது கொம்பின் நடுவில் தோன்றி அவ்விஷத்தை உண்டுவிட்டார். அது கண்ட பார்வதி தனது கரத்தால் ஈசனது கழுத்தில் கைவைத்துத் தடுக்கவே விஷம் கண்டத்தில் நின்றது. ஈசன் நீலகண்டன் ஆனார். தேவர்களால் துதிக்கபட்ட சிவபார்வதியர் நந்தியின் கொம்பின் நடுவில் நடனமாடினர். இவ்வாறு நஞ்சை உண்டு தேவர்களை காத்த சமயம் கார்த்திகைமாத சனிப்பிரதோஷ காலமாகும் ஆகவே கார்த்திகை மாதத்தில் வரும் சனிபிரதோஷம் மிகவும் விசேஷமானது. இப்பிரதோஷக் கதை கடம்பவன புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பிரதோஷவகையும் காலமும்: பிரதோஷம்,நித்யபிரதோஷம்,மாதபிரதோஷம்,மஹாபிரதோஷம் என மூன்று வகைப்படும். நித்ய பிரதோஷக்காலம்: தினமும் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4 நாழிகை