தளிர் அண்ணா கவிதைகள்

தொட்டில் குழந்தை

அன்று அழகே அமுதே
என்று ஆரத்தழுவி
அலங்கரித்த தொட்டிலில்
தொட்டிலில் இட்டு
ஆராரீரோ பாடினர்
ஆனால் இன்றோ அரசுத்
தொட்டிலில் அவசரமாய்
இட்டு ஒடுகின்றனரே!


வரதட்சணை

பெண் பார்க்க வந்தவர்
என்னை அழகுச்சிலை
என்றார்.அதனால்தானோ
ஐம்பதாயிரம் ரொக்கத்திற்கும்
இருபது பவுன் நகைக்கும்
ஹோண்டா பைக்கிற்கும்
விலைபேசப்பட்டேன்.

மரத்தின் கேள்வி?

நீங்கள் உயிர் வாழ
ஆக்ஸிஜன் தருகிரேன்
அனலாய் தகிக்கும் வெயிலுக்கு
நிழலாய் குடை விரிக்கிறேன்
உலர்ந்து போன பூமிக்கு
புயலாய் மழையைத்த்ருகிறேன்
உலர்ந்த பின்னும் விறகாய் எறிகிறேன்
உங்கள் இல்ல கதவாய் மூடி திறக்கிறேன்
சருகை தூவி பூமியை வளப்படுத்துகிறேன்
இருப்பினும் என்னை வளர்க்காமல்
அழிப்பது ஏன்? ஓ நீங்கள் மனிதர்கள் அல்லவா?

விலைமாதர்கள்

கல்யாணச் ச்ந்தையில்
விலைபோகாத
எங்களுக்கு கட்டில்
சந்தையில் நல்லவிலை!
காதலன் கிடைப்பானோ
என்று ஏங்கிய எங்களுக்கு
இன்று எத்தனையோ
காதலர்கள்!
பலரின் உடல்பசிதான்
எங்கள் வயிற்று பசியை போக்கும்
மருந்து.

Comments

  1. கவிதைகள் அருமை தொடர்ந்து நல்ல கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் ஸ்ரீ அனுராதா.

    ReplyDelete
  2. கவிதைகள் அருமை அதைவிட நீங்கள் போடும்படங்கள் அருமையோ அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2