தளிர் அண்ணா கவிதைகள் 1
முயற்சி செய்!
இளைஞனே!
கிணறு வற்றவற்ற
சுரக்கும்
புல் வெட்டவெட்ட
முளைக்கும்
நிலவு தேயதேய
வளரும்
ஆனால் நீமட்டும்
சோர்ந்துபோவதேன்?
முயற்சி செய் இளைஞா!
நாளை விடியல்
உனதுதான்.
வாய்ப்பினைத்தேடு!
இளைஞா! உறங்காதே!
உன் வாய்ப்பு பறிபோகிடும்.
இங்கு வாய்ப்புகள்குறைவு.
தேவைகள் அதிகம்.
உன் வாய்ப்பை பறிக்கபட
உன் உறக்கம் உதவிடும்
ஆகட்டும் பார்க்கலாம்
என அசையாமல் நின்றால்
அவதிதான் மிஞ்சும்.
நாளை வீணாக்காமல்
வேலை தேடு!
வாழ்க்கை வசப்படும்.
சோதனைகள் வாழ்வின் போதனைகள்
சோதனைகள் வாழ்வின்
போதனைகள் இளைஞா!
சோர்ந்து போகாதே!
ஒவ்வொரு சோதனையும்
ஓர் பாடமாய் உனக்கு
அமையும்.
அகிலம் உனக்கு புரிய
ஆரம்பிக்கும்
சாதனைகள் படைக்க
நினைப்பவனுக்கு
சோதனைகள்
சுண்டு விரலளவே
வேதனைப் படாதே!
வேகமாய் கடந்து
வெளியே வா
உன் நிலை உனக்கு
புரியும்!
சாதனைகள் படைக்க
நீ தேர்ந்திடுவாய்!
வெற்றி உன் பக்கம்.
நாட்கள் தேயத் தேய
நாமும் தேய்கிறோம் நண்பா!
நாளை நாளை
என வேலையை
தள்ளாது
வேளையைப்
பாராது உழைத்தால்
வெற்றி நிச்சயம் நண்பா!
விரைந்து செயல்படு
Comments
Post a Comment