கவிதைத் தேன்!
கவிதைத் தேன்!
அனாதைகள்!
பத்துமாதம் சுமந்தவள்
பதினோராம் மாதம்
சுமக்க மறுத்ததால்
நாங்கள் அனாதைகள்!
ஐய்யோ பாவம் என்பதே
தாலாட்டு ஆகிவிட்டது.
குப்பை தொட்டிகள்
எங்கள் தொட்டில்கள்
உதவும் கரங்களால்
உயிர் பிச்சை
பெற்றவர்கள் நாங்கள்.
எது குற்றம்?
சாலையில் நாங்கள்
பிச்சையெடுத்தால்
அலுவலகத்தில்குளுகுளு அறையில்
மேஜைக்கு கீழே கை நீட்டினால்
அது அன்பளிப்பாம்!
மேகம்
வானத்துபெண்ணிற்கு
இயற்கை
அளித்த சேலை
வீழ்வது எழுவதற்கே!
கலைக்க கலைக்க
எழும் புற்றைப்பார்!
செதுக்க செதுக்க
முளைக்கும்புல்லைப்பார்!
தேயத் தேய
வளரும் நிலவைப்பார்!
மறைய மறைய
உதிக்கும் சூரியனைப்பார்!
இறைக்க இறைக்க
சுரக்கும் கிணற்றைப்பார்!
விழுவது எழுவதற்குத்தான்
வீழ்ந்து போவதற்கல்ல
எழுந்திரு இளைஞா!
சிரிப்பு
அவள் சிரித்தாள்
என்னைப்பார்த்து
நான் மகிழ்ந்தேன்
காதலி கிடைத்தாள் என்று
அவள் அவனோடு
சேர்ந்து சிரித்தபோது
நான் அழுதேன் அவள்
அவன்காதலி என்று
அவள் நினைவாக நான்
சிரித்தபோது உலகம்
என்னை பைத்தியமாக்கி
சிரித்தது.
Comments
Post a Comment