துணுக்குத் தோரணம்
பணியா
வட இந்திய வியாபாரிகல் பணியாக்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் ஒருமரத்தின் அடியில் தங்கி வழிபாடு செய்வதை கண்ட ஆங்கிலேயர்கள் அந்த மரத்துக்கு “பண்யான் ட்ரீ” என்று பெயரிட்டனர். ஆலமரத்துக்கு ஆங்கிலப்பெயர் இப்படித்தான் வந்தது.
கொசுப்பெருக்கம்.
பெண்கொசு இனப்பெருக்க விஷயத்தில் ரொம்பரொம்ப வளப்பம் பெற்றது.ஒரு ஆண்டில் ஒரு பெண் கொசு பதிணைந்துகோடி கொசுக்களை உற்பத்தி செய்கிறது.
வாட்டர்கலர்.
வாட்டர் கலரை ஆங்கிலேயரான் வில்லியம் ரீவஸ் என்பவர் முதன்முதலாக 1766ம் ஆண்டில் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
முதல் தபால் தலை
சுதந்திரம் அடைந்தபின் இந்தியா வெளியிட்ட முதல் தபால் தலையின் விலை மூன்றரைஅணா. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையுடன் அந்த ஸ்டாம்ப் 1947நவம்பர் 21ல் வெளியானது.
கலோரி
உணவுச்சத்தை கலோரி என்கிறோம்.ஒரு கலோரி என்பது ஒருகிராம் எடையுள்ள சுத்தமான நீரை ஓர் டிகிரி உஷ்ணம் பெறக்கூடியதாக செய்யும் சக்தியின் அளவாகும்.
முதல் டிரான்சிஸ்டர்.
ஜான் பார்டின், வால்டர் பிராட்டைன் என்ற இரண்டு விஞ்ஞானிகள் முதல் டிரான்சிஸ்டரை 1947 டிசம்பரில் தயாரித்தனர். இன்னொரு விஞ்ஞானியான ஷாக்லி என்பவரின் ஆலோச்னையின் பேரில் இதை தயாரித்தனர்.ஷாக்லி டிரான்ஸிஸ்டரின் தந்தை என்று வழங்கப்படுகிறார்.
தெரியுமா?
சீன மொழியில் 1500 எழுதுக்கள் உள்ளன.
நீர் குடிக்காத விலங்குகள் எலி, கங்காரு.
அரபிக் கடலின் ராணி கேரளம்
நீந்தத் தெரியாத மிருகம் ஒட்டகம்
பார்த ரத்னா விருதை முதன்முதலில் பெற்றவர் இராஜாஜி.
மேட்டூர் அணையின் வேறுபெயர் ஸ்டான்லி நீர்த்தேக்கம்.
இதழியலின் தந்தை
1780ல் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்ற ஆங்கிலேயர் தான் முதன்முதலாக அச்சுவடிவ செய்தித்தாள் கல்கத்தாவிலிருந்து வெளிவரக்காரணமானவர்.அவர் இந்திய இதழியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அந்த செய்தித்தாளின் பெயர் பெங்கால் கெஜட்.
Comments
Post a Comment