இளைய தலைமுறை!


இளைய தலைமுறை!

அந்த பேருந்து நிறுத்தத்தின் முன் கல்லூரி மாணவ மாணவியரின் கூட்டம் நிரம்பிவழிந்தது.பக்கத்து பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரியும் எனக்கு அந்த மாணவ கும்பலின் நடத்தை அறுவெறுப்பை உண்டாக்கியது. கும்பலாக நின்று ஆண் பெண் வித்தியாசம் பாராமல் அரட்டை அடிப்பதும் சிரிப்பதும் தொட்டு பேசுவதும் அந்த பஸ் ஸ்டாண்டே அவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தது.
       சக மாணவர்களை வாடா போடா என்று விளித்து பேசி அவர்களை கிண்டலடிப்பதும் அவர்கள் சொன்ன பதிலுக்கு சிரிப்பதுமான அவர்களின் விளையாட்டு எனக்கு எரிச்சலாக இருந்தது. ச்சே என்ன பெண்கள் இவர்கள்? இது இருபதாம் நூற்றாண்டுதான். புதுமைபெண்களாக இருக்க வேண்டியதுதான் ஆனால் இப்படியா நடு ரோட்டில் நாலைந்து ஆண்களுடன் கும்மாளம் அடிப்பது இவர்களெல்லாம் படித்து நாட்டை திருத்தப் போகிறார்களா என்ன? மனதிற்குள் முணுமுணுத்துக்கொண்டேன். நல்ல வேளையாக பஸ் வரவே முண்டி அடித்து ஏறினோம் நல்ல கூட்டம் பஸ் நிரம்பி வழிந்தது.
      இதை பயன்படுத்தி ரோமியோ ஒருவன் அந்த மாணவியின் இடையை கிள்ள திரும்பி பளாரென அறைந்தாள் அப்பெண். சக மாணவர்களிடம் சகஜமாக தொட்டு பேசிப்பழகிய அவள் இதை கண்டும் காணாமல் விட்டு விடுவாள் என்றுதான் நினைத்தேன். ஆனால்...
           டேய் பொறுக்கி நீ அக்கா தங்கச்சி கூட பொறக்கலியா நாயே! என்று அவன் சட்டைக்காலரை பிடித்து ஒர் அறை விட அவன் அவமானத்தால் குன்றி பஸ்ஸை விட்டு இறங்கி ஓடினான்.
     நான் அந்த பெண்ணிடம் கேட்டேவிட்டேன் ஏம்மா பஸ் ஸ்டேண்டில நாலு ஆம்பள பசங்க கூட சிரிச்சு பேசி தொட்டு விளையாடின நீ பஸ்ல இந்த மாதிரி ந்டந்துகிட்டது என்னால புரிஞ்சுக்கவே முடியலயே
         அவங்க என் கிளாஸ்மேட்ஸ் தப்பான எண்ணத்தோட பழகமாட்டாங்க தப்பாவும் நடந்துக்கவும் மாட்டாங்க என் மேல என்னெ விட அவங்களுக்குத்தான் அக்கறை அதிகம். நான் அவனைத்தொட்டாலும் அவன் என்னை தொட்டாலும் அதுல அசிங்கம் இருக்காது நட்புதான் இருக்கும். ஆனா இந்த தெரு பொருக்கி கேவலமான எண்ணத்தோட என்னை உரசினான் அதான் பத்த வைச்சிட்டேன்.
      அவள் தெளிவாக கூறிவிட்டு கிளம்ப இந்த காலத்து பிள்ளைகள் ரொம்பத்தெளிவாக இருக்கிறார்கள் என்பது எனக்கு உறைத்தது.

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?