Posts

Showing posts from April, 2013

ஆசையை வெல்ல பெண்களை நிர்வாணமாக்கி உடன் தூங்கினார் காந்தி: அமெரிக்க இணையத்தளம் பரப்பும் அவதூறு!!

Image
  வாஷிங்டன்: மகாத்மா என்று இந்திய மக்கள் கொண்டாடும் காந்தி தனது ஆசிரமத்தில் இருந்த பெண்களை நிர்வாணமாக தன்னுடன் படுக்குமாறு கூறியதாக கிராக்கெட் டாட் காம் என்ற அமெரிக்க இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க இணையதளமான கிராக்கட் டாட் காம் மகாத்மாக காந்தி குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பல போராட்டங்கள் நடத்தி இந்தியாவுக்கு சதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தியை புனிதராக மக்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அவர் தனது 70 வயதில் கூட இளம் பெண்களை நிர்வாணமாக ஆடையின்றி இருக்கும் தன்னுடன் படுத்து தூங்குமாறு கூறியுள்ளார். காந்தி ஆசிரம விதிப்படி அங்குள்ள பெண்கள் ஆடையின்றி காந்தியுடன் தூங்க வேண்டும். ஆசையை வெல்ல அவர் இவ்வாறு செய்தாராம். காந்தி வங்கம் சென்றபோது தனது 18 வயது உறவுக்கார பெண்ணை தன்னுடன் ஆடையின்றி தூங்கச் செய்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், காந்தியை பற்றிய பிற சர்ச்சைகள் குறித்து இன்னொரு பத்திரிக்கையின் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவல்கள்... ஹிட்லருக்கு கடிதம் காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தில், உங்கள் நாட்டின

முழு முட்டாள்களும் பவர் ஸ்டாரின் பலமும்! படித்ததில் பிடித்தது!

Image
2 முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு. சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு. பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு. ‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான். ‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு. ‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு. அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான். ‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான். ‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு. ‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட, ‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு. அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க

பி பி சியில் பேசிக் படித்த கதை! பகுதி 3

Image
பி பி சியில் பேசிக் படித்த கதை! பகுதி 3 வில்லன் ரஜினி நாங்கள் படித்த கோர்ஸ் டி.பி.சி.எஸ். அதில் அரசு டிரைசெம் கோர்ஸ் தனியாக கம்ப்யூட்டர் ப்ரொகிராமர் என்று ஒன்று. இரண்டுக்கும் சேர்த்து பயிற்சி காலம் ஓர் ஆண்டுகள். ஜுலை 95ல் எக்சாம் என்று ஞாபகம். மொத்தம் மூன்று பேட்ச்சாக 30 பேர் படித்தோம். அதில்லாமல் டிரைசெம் கோர்ஸில் தனியாக ஒரு பத்து பேர் இருந்தார்கள். அப்படி இப்படி என ஜூலை மாதத்தில் சேர்ந்த நாங்கள் நவம்பர் வரை பொழுதை ஓட்டிவிட்டோம்.    நவம்பர் இறுதியில் தான் வில்லன் ரஜினி வந்து சேர்ந்தார். இவர் இன்ஸ்ட்டியூட் ஓனர் ரமேஷின் நண்பர் போலும். அப்போது சென்னையில் பிரபலமாக இருந்த சத்யம் கம்ப்யூட்டரில் படித்து வந்தவர் இவர். வேறு வேலைக்கு செல்லும் முன் எங்களுக்கு கோர்ஸ் எடுக்க வந்தார். Cobal என்று ஒரு லாங்க் வேஜ் அதை எடுக்க வந்தார் இவர்.    ஆரம்பத்திலேயே அவரை எங்கள் குருப்பிற்கு பிடிக்கவில்லை! அவர் பாடம் எடுத்தவிதமும் எங்களிடம் நடந்து கொண்ட விதமும் சரி ஒன்றும் எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை! அதுவரை ஒழுங்காக வகுப்புக்கு சென்று கொண்டிருந்த நாங்கள் அவர் வந்த பின் கட் அடிக்க ஆரம்பித்தோம

முருகர் எப்படி தூங்குவார்?நடிக வேளும் முருக வேலும்! உண்மை நிகழ்ச்சி!

Image
கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், "சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.? கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள். வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?” அவர்கள் இருவரும் "இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள். வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார். ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை... உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?" என்றார்.                                                                                                          

தளிர் ஹைக்கூ கவிதைகள்! 21

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! வெப்ப மூச்சை வெளியே விட்டது மின்விசிறி! நிழலைத் தேடுகையில் சுட்டது வெட்டிய மரங்கள்!  வயல்களில் முளைத்தன  வண்ணமிகு வீடுகள்!  நகர வளர்ச்சி! கட்டிவைத்தார்கள் மணத்தது கூந்தலில் பூ!   ஒளிந்து கொண்டது காற்று ஓடிப்போனது தூக்கம்! கூட்டம் கலைத்தது வெடிச்சத்தம் பறவைகள்! முரட்டுத்தழுவல் தள்ளாடியது கொடி காற்று! சாய்ந்து கொண்டதும் ஒய்வெடுத்தார்கள் நிழல்! துகில் உரித்ததும் பசி அடங்கியது வாழை! பூத்துக் கொட்டின பொறுக்க முடியவில்லை! நட்சத்திரங்கள்! காவல் இருந்தும் கவர்ந்தன கண்கள் இமைகள்! மிதிபட்டன புற்கள் உருவானது பாதை! பூக்கவில்லை மணத்தது மண் மழை! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

பாக்யராஜிடம் இளையராஜா கற்ற பாடம்!

Image
‘வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடவே வராது' என இளையராஜா தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் ‘சித்திரையில் நிலாச் சோறு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிவகுமார், சத்யராஜ், இளையராஜா, ஆர். சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் இளையராஜா பேசினார். அப்பொழுது அவர் வில்லன்கள் முகத்தைப் பார்த்தால் இசை அமைக்கவே வராது என்றார். இறைவனுக்கு நன்றி... பொதுவா இந்த அரங்கத்துலயே நடந்த நான் இசையமைத்த படங்களுக்கு நான் வந்ததில்லை, இந்த படத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையை இறைவன் ஏற்படுத்தி விட்டான். உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி. இசையை கேட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்... நான் இசையமைக்கிற படத்தை பத்தி பொதுவா சொல்றதில்லை. இந்த படத்துல இதை பண்ணியிருக்கேன், அதை பண்ணியிருக்கேன்னு பேசறது தேவையில்லாதது. ஏன்னா, இசையை கேட்டால் நீங்களே முடிவு பண்ணிடப் போறீங்க. வில்லனுக்கு பாட்டு.. ரொம்பக் கஷ்டம் சில வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடறதுக்கு வரவே வராது. பல நடிகர்களை நீங்க யோசிச்சி பாருங்க. அவங

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி2

Image
சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி2 1.நம்ம ஏட்டையா பத்திரிக்கைகளுக்கு ஜோக் எழுதி அனுப்புவாரா?  எப்படி கபாலி கண்டுபிடிச்ச? மாமூலுக்கு பதிலா ஐநூறு அஞ்சல் அட்டை வேணும்னு கேக்கறாரே?                             அ. பேச்சியப்பன். 2.தலைவர் கம்ப்யூட்டருக்கு தார் பூசி அழிக்கும் போராட்டம் தொடங்கப் போறேன்னு சொல்றாரே ஏன்?  பேஸ்புக்கில யாரோ அவரை பத்தி தாறுமாறா எழுதிக்கிட்டே இருக்காங்களாம்!                                   பி. பர்சானா. 3.தமிழகத்திலே பவர் கட்டை பத்தி கவலைப்படாத ஒரே வியாபார நிறுவனம் எது தெரியுமா?   தெரியலையே?   இருட்டுக்கடை அல்வா கடைதான்!                                டி.கே சுகுமார். 4 சம்பாதிக்கறதுக்கு தலைவருக்கு மட்டும் எப்படித்தான் புதுபுது ஐடியாவா தோணுதோ!  ஏன் என்ன செய்யறார்?  நாலு ஆசிரமங்களை லீஸுக்கு எடுத்து நடத்தறாரே!                                         பி. முத்துசாமி. 5.குடிச்சுட்டா எதைத்தான் பேசறதுன்னு விவஸ்தையே இல்லாம பேசக்கூடாது தலைவரே!   ஏன்யா அப்படிச் சொல்றே?  பின்னே முதல் அமைச்சராக முடியலைன்னா வட்டி அமைச்சராவது ஆவேன்னு நீங

சித்திரை முழுநிலா நாள்!

Image
     சித்திரை  முழுநிலவு நாள் அன்று, நிலா சோறு சாப்பிடும் வழக்கம், இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.தமிழர் பண்பாட்டில், பவுர்ணமிக்கு தனி இடம் உண்டு. சங்க இலக்கியங்களில், பவுர்ணமி அன்று கொண்டாடப்பட்ட விழாக்கள் பற்றிய தனிப் பட்டியலே இருக்கிறது.முழு நிலவை கொண்டாடுவது என்பது உலகம் முழுவதும் இருந்தாலும், தமிழகத்தில் அதற்கு ஒரு நீண்ட வரலாறே உண்டு. குறிப்பாக சித்திரா பவுர்ணமி தினத்தன்று, வீடுகளிலும் கோவில்களிலும் பல்வேறு சிறப்பான சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. அன்றைய இரவு பொழுதை, ஆற்றங்கரைகளில், குடும்பத்துடன் கழித்து மகிழும் பழக்கம் தமிழர்களிடையே இருந்து வருகிறது. உலகமயமாதல் போன்றவற்றால் சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், இதுபோன்ற பாரம்பரிய பழக்கங்கள் இன்றும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது. ஆற்றங்கரை தோப்புக்கள்...: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, வேகவதி, செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் உள்ளன. இந்த ஆற்றங்கரைகளில், அடர்ந்த, அருமையான தோப்புக்களும் உள்ளன.சித்திரை முழு நிலவு அன்று, சொந்தங்கள் எல்லாம் ஒன்று கூடி, விதம் விதமான உணவுகளை சமைத்து, இந்த ஆ

பி.பி.சியில் பேசிக் படித்த கதை பகுதி 2

Image
அன்புக்கு பணிந்த கதையும்!  ஆணவத்தினை பணியவைத்த கதையும்! சென்ற பகுதியில் பிபிசியில் பேசிக் படித்த கதை என்று கணிணி கற்றுக் கொண்ட நாள்களை நினைவு கூர்ந்தேன்! ஆமாம் அது என்ன பிபிசி என்று யாராவது கேட்பீர்கள் என்று பார்த்தேன். நீங்களும் கேட்கவில்லை! நானும் கதை நிகழ்ந்த வேகத்தில் சொல்லவில்லை! பாரத் பிரில்லியண்ட் கம்ப்யூட்டர் செண்டர் என்பதன் சுருக்கமே பிபிசி.      சென்ற பகுதியில் பவானி மேடம் டெஸ்ட் வைத்தார்கள் நாங்கள் யாரும் ஐந்து மதிப்பெண்களை கூட தாண்ட வில்லை! என்று சொல்லியிருந்தேன். மேடம் கிளாஸிற்கு வராமல் ரிசப்ஷனில் அழுது கொண்டு இருந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா?. ரமேஷ் சார்! இனிமே மேடம் கிளாஸ் எடுக்க மாட்டேன்னு சொல்றாங்க! வேலையை விட்டும் நின்னுக்க போறாங்களாம்! நீங்க என்ன இந்த மாதிரி விளையாட்டுத்தனமா இருக்கீங்க என்றார்.   அன்று ஆகஸ்ட் பதினைந்து சுதந்திர தினம். நான் அப்போது நடத்திக் கொண்டிருந்த சங்கத்தில் கொடியேற்றி விட்டு இன்ஸ்ட்யூட்டில்  அனைவருக்கும் கொடியும் சாக்லேட்டும் கொண்டு சென்று  கொடுத்திருந்தேன். என்னப்பா சுரேஷ்! கொடியெல்லாம் ஏத்தி சுதந்திர தினம் கொண்டாடறே! ஆனா படிக்க

புகைப்பட ஹைக்கூ 25

Image
புகைப்பட ஹைக்கூ 25  ஈரம் வற்றியதும்  வெடித்தது  பூமி! உடைந்தது நிலம் உடையவில்லை நட்பு! வற்றல் பூமியில் வட்டமேசை மாநாடு! காய்ந்த ஏரியில் மேய்ந்தன பிள்ளைகள்! சுட்டெரித்த சூரியன் சுருங்கிப் போன நிலமகள்! இரத்தம் வற்றியதும் சுருங்கிப்போனது முகம்! விளையாட்டு மைதானமானது கோடையில் ஏரி! குடித்துக் கெட்டது குளம்! வற்றிப் போனதால் வறண்டு போனது நிலம்! வாய் பிளந்த நிலம் தாகம் தீர்க்குமா மழை! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

ஐந்து முட்டாள்கள்! பாப்பாமலர்!

Image
நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது . உடனடியாக அமைச்சரை வரவழைத்தார் . “ நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும் , புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன் , ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா ?” “ ஆம் மன்னா !” “ அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார் ?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு ” என்றார் . அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை , புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம் . முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால் ?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே , “ சரி மன்னா ” என்று ஒத்துக் கொண்டார் . ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார் . அதைப் பார்த்ததும் மன்னர் , “ அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ ??” “ இல்லை மன்னா ! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும் !” என்றார் அமைச்சர் . “ தொடரும் ” என்றார் மன்னர் . “ மன்னா ! நான் நா