ஆடு கால் பணம்! சுமை கூலி முக்கால் பணம்!


     ஆடு கால் பணம்! சுமை கூலி முக்கால் பணம்!


  காவிரியில்
  நீர் காணாமல் போனதால்
  காய்ந்து போயின
  தென் மாவட்ட வயல்கள்!

   தீய்ந்து போன வயல்களைப்
   பார்த்து உழைத்து
   ஓய்ந்த உழவனும்
  காய்ந்து போனான்!
  காய்ந்த வயல்களை பார்த்து
  இனி கஞ்சிக்கு வழிஏது என்று
  மாய்ந்து போனான்.

  வறட்சி மாவட்டம் என அறிவித்து
  உழுதவனுக்கு பழுதில்லாமல்
  அரசு தரவேண்டியது
   நிவாரணம்!

   மக்கள் கை கறையானதால்
   இன்று வெள்ளையாக வலம்
    வருகிறார்கள் மந்திரிகள்!
   தீய்ந்த வயல்களை பார்த்து
   மதிப்பிட வந்தார்கள்மந்திரிகள் குழு!
  
   சாலையோரவயல்களை காரில்
   இருந்தே விட்டார்கள் நோட்டம்!
   கொளுத்தும் வெயில் என்று
   எடுத்தார்கள் ஓட்டம்!

   ஏசி காரை விட்டு இறங்கவே
   மனம் வரா மந்திரிகள்!
   கூசிப் போகமால் தின்று தீர்த்தார்கள்
   ஒருவேளை உணவு!

  அதற்கு ஆன செலவு மட்டும்
  ரூபாய் எண்பத்தேழு ஆயிரம்!

   மாவட்ட ஊராட்சிகள் நகராட்சிகள்
  இதற்கு கொடுக்க வேண்டுமாம் பங்கு!
  எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே
  கிளம்பியிருக்கிறது வம்பு!

   ஆடு கால்பணம் கூலி முக்கால் பணம்
   என்னும் பழமொழி! உண்மையாகிறது இங்கே!
   எரிகின்ற வீட்டில் பிடுங்கும் கொள்ளையர்களாக
   தவிக்கின்ற விவசாயிகள் வயிற்றுக்கு தண்ணீர்
   ஊற்றாமல் கொள்ளியை சொறுகினார்கள்
    மந்திரிகள்!

   மலிவு விலை உணவு எல்லாம் மக்களுக்கே!
   மந்திரிகள் உணவெல்லாம் மலை அளவே!
   என்ன நாடு இது?
   தன்னுயிரையும் தந்து மக்களை காத்த
   மந்திரிகள் எங்கே?  திணையளவும் உதவாமல் தின்று
   குவித்த இவர்கள் எங்கே?
   இதையெல்லாம் கேட்க எதிர்கட்சிகள் எங்கே?
   சட்டமன்றம் பாராட்டு மன்றமாகி போனதில்
   மக்களின் குறையெல்லாம்
   செவிடன் காதில் ஊதிய சங்கானதென்ன?
தகவல் உதவி: தினமலர்
   டிஸ்கி:  சென்ற பதிவை வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி! என் உடல் நலனில் அக்கறை கொண்டு விசாரித்து அறிவுரை வழங்கியமைக்கும் நன்றி! சிரங்கு பிடித்தவன் கையும் வலைப்பூ தொடங்கியவன் கையும் சும்மா இருக்காது போல!  சும்மா இருக்க நினைத்தாலும் இதோ ஒரு கவிதை முளைத்துவிட்டது! பதிவிட்டு விட்டேன்!  இன்னும் பூரண குணம் ஆகவில்லை! விரைவில் உங்கள் பதிவுகளில் சந்திக்கிறேன்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 

Comments

  1. உண்மையை போட்டு உடைத்துள்ளீர்கள்..

    ReplyDelete
  2. உண்மை வரிகள்...

    உடல் நலத்தோடு தொடர வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. நிதர்சனத்தின் வெளிப்பாடு கவிதை !

    ReplyDelete
  4. // மக்கள் கை கறையானதால்
    இன்று வெள்ளையாக வலம்
    வருகிறார்கள் மந்திரிகள்! // சூப்பர் .

    // சிரங்கு பிடித்தவன் கையும் வலைப்பூ தொடங்கியவன் கையும் சும்மா இருக்காது போல!// புதுமொழி அட்டகாசம் போங்க ..

    ReplyDelete
  5. மலிவு விலை எல்லாம் மக்களுக்கே.தரமானதெல்லாம் தரமற்ற அரசியல் வாதிகளுக்கே.

    ReplyDelete
  6. உங்களின் ஆதங்கம் புரிகிறது.
    விரைவில் உடல்நலம் தேறி வாருங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2