பி பி சியில் பேசிக் படித்த கதை! பகுதி 3


பி பி சியில் பேசிக் படித்த கதை! பகுதி 3
வில்லன் ரஜினி



நாங்கள் படித்த கோர்ஸ் டி.பி.சி.எஸ். அதில் அரசு டிரைசெம் கோர்ஸ் தனியாக கம்ப்யூட்டர் ப்ரொகிராமர் என்று ஒன்று. இரண்டுக்கும் சேர்த்து பயிற்சி காலம் ஓர் ஆண்டுகள். ஜுலை 95ல் எக்சாம் என்று ஞாபகம். மொத்தம் மூன்று பேட்ச்சாக 30 பேர் படித்தோம். அதில்லாமல் டிரைசெம் கோர்ஸில் தனியாக ஒரு பத்து பேர் இருந்தார்கள். அப்படி இப்படி என ஜூலை மாதத்தில் சேர்ந்த நாங்கள் நவம்பர் வரை பொழுதை ஓட்டிவிட்டோம்.
   நவம்பர் இறுதியில் தான் வில்லன் ரஜினி வந்து சேர்ந்தார். இவர் இன்ஸ்ட்டியூட் ஓனர் ரமேஷின் நண்பர் போலும். அப்போது சென்னையில் பிரபலமாக இருந்த சத்யம் கம்ப்யூட்டரில் படித்து வந்தவர் இவர். வேறு வேலைக்கு செல்லும் முன் எங்களுக்கு கோர்ஸ் எடுக்க வந்தார். Cobal என்று ஒரு லாங்க் வேஜ் அதை எடுக்க வந்தார் இவர்.
   ஆரம்பத்திலேயே அவரை எங்கள் குருப்பிற்கு பிடிக்கவில்லை! அவர் பாடம் எடுத்தவிதமும் எங்களிடம் நடந்து கொண்ட விதமும் சரி ஒன்றும் எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை! அதுவரை ஒழுங்காக வகுப்புக்கு சென்று கொண்டிருந்த நாங்கள் அவர் வந்த பின் கட் அடிக்க ஆரம்பித்தோம். இதனால் எங்கள் பேட்ச்சில் யாரும் அந்த லாங்வேஜை ஒழுங்காக படிக்கவில்லை! அது என்னமோ தெரியவில்லை நமக்கு ஒருவர் மீது அபிமானம் வந்து மிகவும் பிடித்துவிட்டால் அவரைத்தவிர யாரையும் பிடிக்காமல் போகிறது டீச்சர்களை பொறுத்தவரை. என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பிலும் ஹிஸ்டரி ஆசிரியர் திரு சண்முக சுந்தரம் மாற்றலாகி திரு முத்தையா வந்தபோது சுத்தமாக அவர் நடத்தியது எனக்கு பிடிக்கவில்லை! அதுவரை நல்ல மதிப்பெண்கள் எடுத்த நான் குறைவாக எடுக்க ஆரம்பித்தேன். இது ஏன் என்று தெரியவில்லை.
  அது போன்ற ஒருசூழலே கம்ப்யூட்டர் செண்டரிலும் ஏற்பட்டது. ரஜினியை எங்களுக்கு பிடிக்கவில்லை! எங்கள் குருப் பெண்களுக்கும் தான். மொத்தமாக சென்று பவானி
மேமிடம் சொன்னோம். நீங்களே வகுப்பு எடுங்கள் ரஜினி வேண்டாம் என்று ஆனாலும் அது நிர்வாகம் சம்பந்தமான விசயம் என்று மேம் மறுத்துவிட்டார். ரஜினியை பழிவாங்குவதாக நினைத்து நாங்கள் வகுப்புகளை புறக்கணித்தோம். இதற்கிடையில் ஒரு நாள் ரிசப்ஷனில் பவானி மேமுடன் ரஜினி பேசிக் கொண்டிருந்தார். சில நிமிடத்தில் மேம் அழ ஆரம்பித்து விட்டார். இதை உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு ரஜினி மீது மேலும் வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது. ஜனவரி முதல் வாரத்தில் பவானி மேம் விடை பெற ரஜினியே கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார். எங்களுக்கு வேறு வழி இல்லை! வேண்டா வெறுப்பாக தொடர்ந்தோம். நல்ல வேளை முக்கிய பாடங்களை பவானி மேம் சொல்லிக் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.
     மே மாதத்தில் சில நாட்கள் யூனிவர்சிட்டி எக்ஸாம் காரணமாக நான் இன்ஸ்ட்டியூட் செல்லவில்லை! தேர்வு முடிந்து சென்றபோது  ரெகார்ட் ஒர்க் நிறைய கொடுத்தார்கள் அவசர அவசரமாக முடித்தோம் பிரிண்ட் அவுட் எடுப்பது எல்லாம் வெங்கட் குமார் செய்தான்.  அப்போதுதான் பிராக்டிகல் எக்ஸாம் பொன்னேரியிலேயே வேண்டுமென்றால் கூடுதல் பணம் தர வேண்டும் என்றார்கள் ஒத்துக் கொண்டோம்.
    அதுவரை நான் சிஸ்டத்தில் ஒரு பத்து மணி நேரம் உட்கார்ந்திருந்தால் அதிகம்! அந்த லட்சணத்தில் இருந்தது என் படிப்பு. பிராக்டிகல் எக்ஸாமில் முதலில் வைவா ரஜினிதான் கேள்விகள் கேட்டார். ஐந்து கேள்விகள் இருபத்தைந்து மதிப்பெண்கள் என்று நினைக்கிறேன். நான் ஒன்றொ இரண்டோதான் சரியாக பதில் கூறினேன். ரஜினி தலையில் அடித்துக் கொண்டார். வைவாவில் எனக்கு குறைந்த மதிப்பெண்களே கிடைத்தது. அதுவும் அருணா மேம் சொல்லி அந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ரஜினி வழங்க மறுத்துவிட்டார்.
  பிராக்டிகல் தேர்வு 400 மதிப்பெண்கள் அதில் வெங்கட் குமாருக்கு மட்டுமே அதிகபட்ச மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. எனக்கு 378 மதிப்பெண்களே வழங்கப் பட்டது. அடுத்து தியரி எக்ஸாமும் சோசியல் ஸ்டடி என்று ஒரு தேர்வு இது இரண்டும் மீஞ்சூரில் உள்ள விநாயகா ஐடிஐ யில் வைக்கப்பட்டது.
   தேர்வுகளை எழுதி முடித்தோம். ஒரு மாத இடைவெளிக்கு பின் முடிவுகள் வெளிவந்தன. பிராக்டிகலில் அதிக மதிப்பெண் பெற்றதால் வெங்கட் குமார்தான் எங்கள் பேட்ச்சில் அதிக மதிப்பெண் பெறுவான் என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருந்தனர். அந்த கனவை கலைத்து நான் அவனை விட இரண்டு மதிப்பெண்கள் கூடுதல் பெற்று முந்திவிட்டேன். யாராலுமே இதை நம்ப முடியவில்லை! எனக்கு தியரியும் சோசியலும் கை கொடுத்தது. அனைவரும் பிரிய முடியாமல் பிபிசியை விட்டு பிரிந்தோம்.
    இந்த இறுதி காலங்களில் வெகேஷனுக்கு பழவேற்காடு சென்று வந்தோம். பொன்னேரி தியேட்டரில் சதிலீலாவதி படம் பார்த்தோம். அப்போது எங்களுடன் படித்த உமா தியேட்டரில் எங்களுக்குகாக பத்து சீட்களை மடக்கி வைத்துக் கொண்டு மற்றவர்களிடம் திட்டு வாங்கி கொண்டிருந்தார். அப்படியும் எங்களுக்கு சீட் போதாமல் ஸ்டூல் போட்டுக் கொண்டு படம் பார்த்தோம்.
   என்னுடன் படித்த கணேசன், வெங்கட்குமார், ஜகன், தயாளன்,வேதவல்லி, ரமாதேவி, அனுராதா,மீனாட்சி,ஜெயந்தி, லீலாமானுசா ஆகியோரில் வெங்கட் , ஜகன் , தயாளனோடு இன்னும் தொடர்பில் உள்ளேன். மற்றவர்கள் நிலை தெரியவில்லை!  கவிஞர்கள் கூறுவது போல அது ஒரு அழகிய நிலாக் காலம்! நினைவுகள் நினைக்க நினைக்க இனிக்கும்.

டிஸ்கி: முதல் பகுதியில் சொன்னது போல என் அக்காவை அடிக்கடி சந்திக்க வாய்ப்பாக நினைத்துதான் இந்த கோர்ஸ் எடுத்தேன். ஆனால் அதுவும் கைகூட வில்லை! ஒரு வருடத்தில் சில நாட்களே அக்காவுடன் சந்தித்து பேசி மகிழ முடிந்தது. படிப்பு முடியும் தறுவாயில் அக்காவிற்கு திருமணமும் நடந்து முடிந்துவிட்டது. அது ஒரு பெரிய கதை! எப்படியோ உறவினை சேர்க்க ஒரு பத்தாயிரம் செலவு செய்து பார்த்தேன். ஆனால் வீணானதுதான் மிச்சம். 
தங்கள் வருகைக்குநன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. இனிக்க வைக்கும் நினைவுகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2