மரிக்கவில்லை மனிதாபிமானம்!


மரிக்கவில்லை மனிதாபிமானம்!


பரபரக்கும் சென்னை
கடைவிரிக்கும் தி.நகர்!
அவசரமான உலகம் இது!
அடுத்தவரை கவனிப்பது ஏது?

 முந்தைய நாள் காலை
 முதியவர் ஒருவர் நடந்து வந்தார்
 தி.நகர் நடைபாதையோரம்!

  முன் வெயில் சுட்டெரிக்க
  முகம் எல்லாம் வியர்த்து வழிய
  நடை தடுமாறி நடு வீதியில்
  விழுந்தார் சுருண்டு!

   எத்தனையோ மனிதர்கள்
   இதனை கண்டு காணாமல்
   சென்று விட மனிதம் மறைந்தது
   என்று எண்ணியவேளையில்
   வந்தார் ஒரு பரதேசி!

   எடுப்பது பிச்சைதான்! உடுப்போ
   ஏழ்மைதான்! உள்ளம் மட்டும்
   உயரத்தில்! தன் பாட்டிற்கு
   கிடைத்த சில்லறையில்
  தண்ணீர் வாங்கி முதியவரின்
  முகத்தில் தெளித்தார்.
  சிதறிக் கிடந்த நோட்டுக்களை
  திரட்டி முதியவரின் பையில் வைத்தார்
  வீதி ஓரம் தூக்கி அமரவைத்தார்.

   இதனைக்கண்ட பிறருக்கு வந்தது
   மனிதாபிமானம்! தன் நெஞ்சே தன்னைச் சுட
   தயக்கம் விட்டு வந்தனர்
   முதியவர் வீட்டுக்கு தகவல் தந்தனர்!

   உற்றார் உறவினர் கூடினர்
   உதவி செய்த பிச்சைக்காரருக்கு நூறு
   உரூபாய் கொடுக்க முன்வந்தனர்!
   பிச்சைக்காரர் மறுத்திட்டார்!
   நோட்டை எண்ணத்தெரியாது எனக்கு!
   சில்லறை ஏதாகிலும் தந்திருங்கள்!
   அதுவே போதும் எனக்கு!

   அண்ணன் என்னடா தம்பி என்னடா
   அவசரமான உலகத்தினிலே என்று
   பாடிய படி நகர்ந்தே சென்றார்
   நகரத்திலே!
   
   நன்றி உரைத்த உறவினர்கள்
   நெகிழ்ந்து போயினர்.
   பிச்சைக்காரரை அழைத்தே
   உணவை வாங்கி அளித்தனர்
   சில்லரை காசும் அளித்தனர்.
  
   சென்னை நகரில் இப்படியும்
   சிலர் உள்ளனர்
   மனிதம் இன்னும் மரிக்கவில்லை!
   என்றே மகிழ்ந்து கூறினர்.
   மெய் சிலிர்க்க சென்றனர்!
செய்திஉதவி: தினமலர்.
டிஸ்கி} கடந்த இரண்டு நாட்களாக கடுமையான காய்ச்சல் காரணமாக கணினி முன் அமர முடியவில்லை! இன்னும் காய்ச்சல் பூரண குணம் அடையவில்லை! விரைவில் குணமானது நண்பர்களின் பதிவுகளை படித்து கருத்திடுகிறேன்! பொறுத்தருள்க! நன்றி
     தங்கள் வருகைக்கு நன்றி!  பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. சிறந்த பகிர்வு தான் சகோதரரே உங்கள் உடல் நலன் தேறி மீண்டும் ஒரு நல்ல புத்துணர்ச்சியுடன் விரைவில் ஆக்கங்கள் தொடர வேண்டுகின்றேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 2. மனிதாபிமானத்தை சொன்ன கவிதை நன்று! நலமுடன் தொடருங்கள்..!

  ReplyDelete
 3. நெகிழ்வான கவி. விரைவில் குணமடைய எண்ணுகிறேன் .

  ReplyDelete
 4. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...

  இப்படி காய்ச்சலை வைத்துக் கொண்டு கணினியில் உட்காந்தால் இன்னும் அதிகமாகலாம்...

  உடல்நலம் முக்கியம்... மற்றவை அப்புறம்...

  விரைவில் நலமுடன் வந்து தொடருங்கள்...

  ReplyDelete
 5. பிச்சைக் காரருக்கு இருக்கும் மனிதாபிமானம் மற்றவர்களுக்கு இல்லாமல் போனது வேதனைதான நல்ல பகிர்வு சுரேஷ்
  விரைவில் உடல் நலம் பெருக!

  ReplyDelete
 6. கணினிக்கும் காய்ச்சலை பகிர்ந்தளித்தீரோ?? நல்ல கவிதை.. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்..

  ReplyDelete
 7. மனிதம் இன்னும் இருக்கிறது கண்ணுக்கு தெரியாமல் சிலரிடம் மட்டுமே

  ReplyDelete
 8. nalla pakirvu..!

  udampai paarthukollungal sako...!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2