சலங்கை வலி! பகுதி 2


சலங்கை வலி!  பகுதி 2

  முந்தைய பகுதி படிக்கவில்லையா? இங்கு சென்று படியுங்கள்!http://thalirssb.blogspot.in/2013/04/blog-post_2.html


சரியாக மே ஒன்று உழைப்பாளர்கள் தினத்தன்று ஆண்டுவிழா என்று முடிவாகி பத்திரிக்கைகள் அடித்து அனைவருக்கும் விநியோகம் நடந்துவிட்டது. கிரிக்கெட் ஓட்டப்பந்தயம், போன்ற விளையாட்டு போட்டிகள் முந்தைய வாரங்களிலேயே நடத்தி வெற்றியாளர்களையும் தீர்மானித்து விட்டாகிவிட்டது.
     விழா அன்று கலைநிகழ்ச்சிகள் மற்றும் வினாடிவினா போட்டி மட்டுமே பாக்கி வைத்திருந்தோம். நமது கதாநாயகி மாயாதான் விழாவின் ஹைலைட்! மொத்தம் இருபது பாடல்கள் சினிமா பாடல்கள் தயார் செய்து டேப்பில் போட்டு நடனமாடும் மாணவ மாணவியருக்கு டிரெயினிங் மற்றும் ரிகர்சல் செய்து கொண்டிருந்தார்கள் என் தங்கைகள். அப்போது ஜீன்ஸ் படத்தின் கண்ணோடு காண்பதுதான் தலைவா! பாடல் மெகா ஹிட்! அந்த பாடலும் சில ஹிந்தி பாடல்கள் எம்ஜிஆரின் பாடல்கள் தத்துவபாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் என மெனு ஹெவியாக இருக்க இதில் முக்கியமான ஹிட் பாடல்களின் நாயகி மாயாதான்.
        ரிகர்சல் சென்று கொண்டிருந்த போது வில்லன் ஒருவன் தீடிரென முளைத்தான். வில்லன் என்பதைவிட ஆண்ட்டி ஹீரோ என்று தான் சொல்லவேண்டும். எங்கள் ஊரைச்சேர்ந்தவன்.  பிழைப்புக்காக சென்னை சென்று வசித்து வந்தார்கள் அந்த குடும்பம். விடுமுறை தினங்களில் ஊருக்குவந்து செல்வார்கள். இவனும் எங்கள் சங்கத்திற்கும் நூலகத்திற்கும் வருவதுண்டு. சென்னையில் இருந்து வரும்போது அவ்வப்போது சில புத்தகங்களையும் நூலகத்திற்கு இலவசமாக வழங்குவான். இங்குள்ள நூல்களை இலவசமாக படிப்பான்.  அவனுக்கு விடுமுறை விட்டுவிட வந்தான் ஊருக்கு.
    இங்குதான் பிரச்சனை ஆரம்பித்தது. அவன் எங்கள் சங்கத்திற்கு வந்து நடன நிகழ்ச்சிகளின் ரிகர்சலை பார்த்தான். அவனும் விழா நடக்க எங்களோடு ஒத்துழைத்தான். ஆனால் சத்தம் போடாமல் ஒன்று செய்தான். கூட இருந்து குழி பறிப்பது என்பது போலத்தான் அது.
    மே ஒன்று அன்று நடன நிகழ்ச்சி என்றால்  ஏப்ரல் 29ம் தேதி ரிகர்சலுக்கு மாயா வரவில்லை! மற்றவர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள். மற்ற மாணவர்கள் பெண்கள் இனி மாயா ரிகர்சலுக்கு வராதாம் என்றார்கள். ஏன் என்று கேட்டால் வர மாட்டேன் என்று சொல்லிருச்சு என்று முடித்துவிட்டார்கள்.
    அன்று ஹீரோ காத்திருந்து பார்த்து ஏமாந்து போய்விட்டார். ரிகர்சல் முடிந்து அனைவரும் கிளம்ப ஹீரோவும் கிளம்பிவிட்டார். இந்த சென்னைப்பையன் மட்டும் நின்று கொண்டிருந்தான். எனக்கு ஒன்றாம் தேதி நடனம் நடக்கவேண்டுமே இந்த பெண் வராவிட்டால் பல பாடல்கள் குறிப்பாக அந்த ஜீன்ஸ் பாடல் வேறு அந்த பெண்ணை வைத்துதான் திட்டமிடப்பட்டு ரிகர்சல் போய்க்கொண்டிருந்தது. சிறப்பாக நடனம் ஆடக்கூடியவள் வேறு.  திடீரென நின்று விட்டால் மாற்று ஆள் யாரை தேடுவது? ஒரே நாளில் இத்தனை பாடல்களுக்கு மாற்று ஏற்பாடு பண்ண முடியுமா? என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.
      சென்னை பையன் என்ன ஒரே டென்சனா இருக்கீங்க? என்றான்.
  எனக்குள் ஒரு பொறிதட்டியது. இவன் அந்த பெண்ணின் உறவினன். ஒருவேளை இவன் போய் அந்த பெண்ணிடம் ஏன் வரவில்லை என்று அறிந்து வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
   விசயத்தை கூறினேன். அவன் கூலாக அந்த பொண்ணு ஏன் வரலைன்னு எனக்குத்தெரியும்! அவங்க வீட்டுல இனி அனுப்ப மாட்டாங்களாம்! இங்கதான் என்னென்னமோ நடக்குதாம்! நீங்களும் கண்டுக்க மாட்டேங்கறீங்க! என்று இழுத்தான்.
      என்னடா நடக்குது எதை கண்டுக்கலை! என்றேன் ஒன்றும் தெரியாதவனாக
  ஹீரோ ஹீரோயின் காதலை சொன்னவன், இப்படியெல்லாம் நடக்குதாமே! அந்த பொண்ணு வீட்டுல தெரிஞ்சு போயிருச்சு! அந்த பையன் வர இடத்துக்கு பொண்ணை அனுப்ப மாட்டாங்க! அவங்க சொந்த காரங்க வீட்டுக்கு அந்த பொண்ணை நாளைக்கு அனுப்பிட போறாங்க என்றான்.
     என்னடா சொல்றே!
  உண்மைதான்! நாளைக்கு அந்த பொண்ணு அவங்க சொந்த காரங்க ஊருக்கு கும்முடி பூண்டி போகப்போவுது! என்றான்.
   அப்ப என் பங்க்ஷன்! அது என்ன ஆவறது!
 என் டென்சன் அதிகரித்தது!
       பங்ஷன் நடந்ததா! நாளை வரை காத்திருங்கள் அன்பர்களே!  உடல் நலம் சீராக இல்லாததால் நீண்ட நேரம் டைப் செய்ய முடியவில்லை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. வர முடியாத சூழ்நிலை - அவர்களுக்கு தான் அந்த பங்க்ஷனோ...?

  உடல் நலத்துடன் தொடரவும்...

  ReplyDelete
  Replies
  1. உடன் வந்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே! காய்ச்சல் குணமாகிவிட்டது! ஆனால் உடல் பலவீனமாக உள்ளது! தெம்பு வர இன்னும் சில நாள்கள் ஆகும் போல! என்பால் அக்கறை கொண்டு விசாரித்தமைக்கு மிக்க நன்றி!

   Delete
 2. thodarkiren sako...!

  udampai paaryhukollungal....

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2